இந்த பதிவில் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பான மற்றும் உலகையே அடுத்த லெவலுக்கு எடுத்துசென்ற கணினி (computer)பற்றிய சில ஆச்சரியமான கேள்விபடாத தகவல்களை காண்போம்.
முதல் கம்ப்யூட்டரின் எடை
இந்த உலகின் முதல் கம்ப்யூட்டரின் எடைமற்றும் பரப்பளவு எவ்வளவு தெரியுமா, இதை கேட்டால் உங்களுக்கு தலையே சுற்றலாம் அந்த அளவுக்கு இந்த கணினி ஆனது பெரிதாக இருந்துள்ளது. ENIAC-என்று கூறப்படும் முதல் கணினியின் எடை மட்டும் கிட்டதட்ட 2700 கிலோ ஆகும் இதன் பரப்பளவு மட்டும் 1800 அடி ஆகும். இதை கேட்டுகும் பொழுது இந்த கணினி என்பது எந்த அளவுக்கு பரிணாமம் அடைந்துள்ளது என்பதை நம்மால் அறிய முடிகிறது.
மிகப்பெரிய எழுத்து
TYPEWRITER என்பது உங்கள் கணினியின் விசைப்பலகையின் ஒரு வரிசையில் மட்டுமே எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதக்கூடிய மிக நீளமான வார்த்தையாகும்.
மரத்தால் ஆன கணினி
டக் ஏங்கல்பார்ட் 1964 இல் மரத்தால் செய்யப்பட்ட முதல் கணினி மவுஸைக் கண்டுபிடித்தார்.
கணினி வைரஸ்
ஒவ்வொரு மாதமும் 5000 க்கும் மேற்பட்ட புதிய கணினி வைரஸ்கள் வெளியிடப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகின் சூப்பர் கம்ப்யூட்டர் மூளை
மனித மூளைக்கு இணையான சக்தி வாய்ந்த கணினி இருந்தால், அது வினாடிக்கு 38 ஆயிரம் டிரில்லியன் செயல்பாடுகளைச் செய்து 3580 டெராபைட்டுகளுக்கு மேல் நினைவகத்தை வைத்திருக்கும். ஆனால் இன்றுவரை இதுபோன்ற மனித மூளைக்கு நிகரான ஒரு கணினியை நம்மால் உருவாக்க முடியவில்லை.
உலகின் முதல் ஹார்டிஸ்க்
முதல் 1ஜிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ் 1980 இல் அறிவிக்கப்பட்டது, அதன் எடை சுமார் 550 பவுண்டுகள் ஆகும் மற்றும் விலை $40,000 அமெரிக்க டாலர் ஆகும்.
நாசாவின் சாதானை
1969-ஆம் ஆண்டு நாசா நிலாவில் தறையிரங்கிய போது அவர்கள் கணினியில் பயன்படுத்ய மெமரி அளவு வெறும் 500 MB தான் என்பது உங்களை வியக்க வைக்கலாம்.
முதல் கம்ப்யூட்டர் வைரஸ்
இந்த உலகின் வைரசின் பெயர் க்ரீப்பர் மற்றும் அது அர்பானெட்டில் சுற்றிக் கொண்டிருந்தது. இது முற்றிலும் பாதிப்பில்லாதது: இது ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு எவ்வாறு பரவுகிறது என்பதைப் பார்ப்பதற்காக ஒரு பரிசோதனையாக மட்டுமே உருவாக்கப்பட்டது.
நாசா மற்றும் பென்டகன் கணினிகள் ஒரே நபரால் ஹேக் செய்யப்பட்டன
அப்போது அவருக்கு 15 வயதுதான் இருந்தது…. உண்மையில், இன்று பெரும்பாலான ஹேக்கர்கள் மிகவும் இளம் வயதினராக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கணினியின் கோளாறுகள்
சராசரியாக ஒரு நபர் நிமிடத்திற்கு 20 முறை கண் சிமிட்டுகிறார் என்றால் கணினியைப் பயன்படுத்தும் போது நிமிடத்திற்கு 7 முறை மட்டுமே கண் சிமிட்டுகிறார் என ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இன்றைய கணினி
இன்று நீங்கள் பயன்படுத்தும் செல்போனில் மற்றம் கணினி 1965 இல் MIT இல் இருந்த ஒரு கணினியை விட மில்லியன் மடங்கு விலை குறைவு மற்றும் ஆயிரம் மடங்கு சக்தி குறைந்தது மற்றும் ஒரு லட்சம் மடங்கு சிறியது.
இந்த ஒரு பதிவில் கணினியை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி!.