சுவைமிக்க பிரியாணியின் வரலாறு origin of biryani in tamil

 பிரியாணியின்  வரலாறு(Origin Of Biryani)

ORIGIN OF BIRYANI
                          நம் வாழ்வில் உயிர்வாழ்வதற்கு  உணவு  என்பது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது .இந்த  உலகில் பல விதமான மற்றும்  வித்தியாசமான உணவுகளை மனிதர்கள் உண்கிறார்கள் .இதில் இந்த பிரியாணி என்ற உணவுதான் பலரின் விருப்ப உணவாக உள்ளது. பல உணவுகள் இருப்பினும் இந்த பிரியாணி அனைவரையும் ஈர்கிறது.  இவ்வாறு சிறப்பம்சம் மிக்க  பிரியாணியின் வரலாறு  பற்றி இந்த பதிவில் கான்போம்.

பிரியாணி உருவாக்கம்

biryani history
                    பிரியாணி  தற்போது எல்லோரின் விருப்ப உணவாகும். பிரியாணி என்பது பிரியாண் என்ற பாரசீக மொழியிலிருந்து வந்தது என குறிப்பிடுகிறார்கள்.  இதனுடைய அர்த்தம் fried before cooking. அதாவது வறுத்து எடுத்த உணவு  என்பது அர்த்தமாகும்.  இந்த பிரியாணி பாரசீக நாடான பெர்சியாவில்  முதன் முதலில் தோன்றியது அதாவது தற்போது உள்ள ஈரான் ஈராக் நாடுகளாகும்.
 
                            பெர்சியா நாட்டு போர் வீரர்கள் பல இடங்களில் போர் செய்ய பல இடங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது உணவுக்கு பல பிரச்சனை ஏற்படும்.  இதன் காரணமாக போர் காலத்தில் உணவு இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். ஆனால் போர் வீரர்களுக்கு நல்ல உணவு கொடுத்தால் மட்டுமே அவர்களால் சண்டையிட முடியும்.
 
biryani history
        அப்போது அவர்கள் காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாட செல்வார்கள் . வேட்டையாடிய விலங்கை தோல் நீக்கி  அதனை கறியாக மாற்றி , அவர்களிடம்  உள்ள மசாலாக்களை வைத்து கறி மேல் தடவி ஊற வைத்து  பூமிக்குள் புதைத்து வைத்துவிடுவார்களாம் . மீண்டும் விடியற்காலையில் பிறகு ஒரு பெரிய பானையில் அரிசி மற்றும் ஊறவைத்த கறி எல்லாத்தையும் சேர்த்து மூடி தம்மில்  வைத்துவிடுவார்களாம். அதாவது அதிக அழுத்ததில் தான் வைத்து வேகவிடுவார்களாம்.இவ்வாறு தான் தம் பிரியாணி(dum biryani) உருவானது. இந்த பிரியாணியில் முதலில் அரிசி பிறகு ஊறவைத்த கறி பிறகு நன்கு மூடி அதனை பூமிக்கு அடியில் வைத்து தீ மூட்டி வேக  விடுவார்கள் இவ்வாறு தான் முதன் முதலில் பிரியாணி உருவாகியது. இதில் விலங்குகளை சமைப்பதால் அதிக நாற்றம் ஏற்படும் என்பதால் அதில் நிறைய பட்டை ,கிராம்பு,ஏலக்காய் போன்ற வாசனை பொருள்களை பயன்படுத்தினர். 
 
              பிறகு போருக்கு  செல்வதற்கு முன் போது அதனை சாப்பிடுவர்கள். அந்த உணவை சாப்பிட்டுதான் அவர்கள் போர் செய்தனர். இவ்வாறு பெர்சிய அரசர்கள் மற்றும் மக்கள் இதுபோன்றுதான் கறிகளில் மாசாலா தடவி முதலில் சாப்பிட்டனர்  இதுதான் பிரியாணி உருவாக முதல் தொடக்கமாக அமைந்தது.

இந்தியாவிற்கு வந்த பிரியாணி

biryani facts
                போர்வீரர்களின் உணவாக இருந்த பிரியாணியை முதலில்  13 ம் நூற்றாண்டில் மங்கோலிய அரசர் தைஊர்க்கு இந்தயாவின்மீது படையெடுத்த போது  தான் முகலாயருக்களின்  வரலாறு இந்தியாவில்   ஆரம்பிக்கிறது. அப்போதிலிருந்து இந்த பிரியாணி  என்பது போர்வீரர்களுக்கான  உணவாக மட்டுமே இருந்தது. இது  அன்றைய காலகட்டத்தில் அரச குடும்பங்களுக்காக உருவாக்கபட்ட  உணவுதான் என்று மக்களால் நம்பபட்டது. 
 
biryani history
                16 ம் நூற்றாண்டில் தாஜ்மஹால் கட்டிய  ஷாஜகான் மனைவி மும்தாஜ்  அவர்கள் போர்வீரர்களை காணும் போது அவர்கள் நல்ல உணவு கிடைக்காததால் சோர்வாக இருந்ததை காண்கிறார் அப்போது மும்தாஜ் அவர்கள் அரச குடும்ப உணவாக இருந்த பிரியாணியை போர்வீரர்களுக்கும் அளிக்குமாறு ஷாஜகானிடம் அனுமதி கேட்டு அவர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது.  அவர்களுக்கு பிரியாணி செய்யும் முறையை கற்றுகொடுக்கிறார்கள். இவ்வாறாக இந்தியாவில் அரச குடும்ப உணவாக இருந்த பிரியாணி போர்வீரர் உணவாகவ  மாறியது. இந்த உணவு போர் வீரர்களுக்கு  சத்து தருவதுடன் மக்களுக்கு ஒருவித உற்சாகத்தையும் தருகிறது.
 
                    மும்தாஜ் அவர்களால் தான் இப்போது நாம் பிரியாணி சாப்பிடுகிறோம்,இவ்வாறு பல இடங்களிலும் பிரியாணி பரவ தொடங்கியது. இவ்வாறு இஸ்லாமியர்கள் எங்கெங்கெலாம் உள்ளார்களோ அங்கெல்லாம் பிரியாணி பரவியது.
 
 2ம் நூற்றாண்டிலேயே பிரியாணி சாப்பிடிறுப்பதாக நம் தமிழ் நூலான  புறநானூற்றில் கூறப்படுகிறது. அப்பொது இந்த பிரியாணி  ஊண்சோறு என்ற பெயரில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.  
 

ஹைதராபாத் பிரியாணி-hydreabad biryani

 
biryani
             பிரியாணி ஒரு காலத்தில் இஸ்லாமிய உணவாகவே இருந்தது. ஹைதராபாத்தில் உள்ள நிசாம் அவர்கள் பிரிஸ்சை கவர்ச்சி செய்ய பிரியாணியில் காய்கறு சேர்த்து செய்தனர். இன்று இது  மிகவும் பிரபலமாக உள்ளது. 
 
            இவ்வாறு பிரியாணி பல வகையாக மாறி பிறகு எல்லார்கும் பிடித்த உணவாகவும்  மாறியது.
 
                                                           நன்றி!