யூடியூபில் பணம் சம்பாதிப்பது எப்படி? how to earn money on youtube in tamil

 how to earn money on youtube in tamil

youtube
வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம்  உலகின் மிகவும் பிரபலமான google நிறுவனத்தின் தளமான youtube-ல் ஒவ்வெரு நாளும் பல கோடி வீடியோக்கள் பதிவு செய்யபடுகின்றன, இந்த youtube -ல் நாம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று காணலாம் நீங்கள் மாணவர்களாக இருந்தாலும் சரி வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

 YOUTUBE CHANNEL

 இந்த youtube-ல் சம்பாரிக்க முதலில் நீங்கள் ஒரு channel-ஐ உருவாக்க வேண்டும் இதனை உருவாக்குவது என்பது மிகவும் எளிது இதில் உங்களுடைய channel-ன் பெயர் மற்றும் logo – வை சேர்தால் மட்டுமே போதுமானது.

YOUTUBE-க்கு தேவையான திறன்கள்

இந்த youtube-க்கு மட்டுமின்றி அனைத்திற்கும் பொதுவான திறன் என்னவென்றால் கற்றுக்கொள்ளும் திறன் தினம் தினம் நீங்கள் கற்றுகொண்டே இருக்க வேண்டும் இதுதான் முதல் மற்றும் முக்கிய பண்பு.
  • இரண்டாவதாக தேவைப்படுவது ஒரு நல்ல மொபைல்போன் அல்லது நல்ல கேமரா
  • இந்த மொபைல் மற்றும் கேமராக்களில் எடுக்கபடும் வீடியோக்களை edit செய்ய கற்றுகொள்ள வேண்டும்.
  • பிறகு நீங்கள் தெளிவாக பேசுவது முக்கியமாகும் ,அப்பொழுதுதான் அது அனைவருக்கும் புரியக்கூடியதாக இருக்கும்
  • பிறகு உங்களுடைய வீடியோவின் thumbnail இதுவும் முக்கியமான விஷியமாக கருதப்படுகிறது. இதற்கு நீங்கள் photo editing கற்றுகொள்ள வேண்டும்

YOUTUBE CONTENT

youtube
இந்த youtube-ல் மிகவும் முக்கியமாக கருதபடுவது கண்டென்ட் அதாவது நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதுதான் இது உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது உங்களுடைய தொழிலை மற்றவருக்கு கற்பிப்பது உங்களுடைய சிந்தனைகளை பகிர்வது போன்றவை அடங்கும் . பெரும்பாலும் உங்களுக்கு வரக்கூடிய மற்றும் நீங்கள் விரும்பகூடிய விஷயங்களைய வீடியோக்களாக பதிவிடுங்கள்.

YOUTUBE EARNINGS

youtube earnings
இந்த youtube-ல் வருமானம் என்பது அளவே இல்லை என்று என்று சொல்லாம் அது உங்களுடைய திறமையை பொருத்து இந்த youtube-ல் பல்வேறு முறைகளில் பணம் சம்பாதிக்கலாம் அதில் ஒரு சில முறைகளை பற்றி காண்போம் .
  • முதலில் youtube partnet program  அதாவது நம் வீடியோக்களுக்கு youtube-ல் இருந்து விளம்பரம் காட்டப்படும் அந்த விளம்பரத்தில் இருந்து வரும் பங்கானது வீடியோ உருவாக்குபவருக்கு 55% youtbe-க்கு 45% என வரையறுக்கபட்டுள்ளது.
  • இரண்டாவது sponsorship இது என்னவென்றால் மற்ற பிரபல நிறுவனங்கள் உங்களுக்கு பணத்தை செலுத்தி அவர்களுடைய பொருளை உங்களுடைய வீடியோவில் விளம்பரபடுத்த சொல்வார்கள்
  • மூன்றாவது நீங்களே ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதை உங்களுடைய வீடியோவில் விளம்பரபடுத்தலாம்.

YOUTUBE-ன் விதிமுறைகள்

youtube earnings
இந்த youtube-ல் நீங்கள் சம்பாதிக்க youtube-நிறுவனம் ஒரு சில நிபந்தனைகளை வகுத்துள்ளனர் அது என்னவென்றால் உங்களுக்கு 1000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும் அதுமட்டுமின்றி உங்களுடைய வீடியோவை மக்கள் 4000 மணி நேரம் பார்கவேண்டும் அதாவது 2,40,000 நிமிடங்கள் பார்திருக்க வேண்டும் என்பதுதான் . அதுமட்டுமல்லாமல் youtube- க்கு என்ற ஒரு சில விதிமுறைகள் உள்ளன(COMMUNITY GUIDELINES) அதையும் நீங்கள் பின்பற்றுவது அவசியம் .
இவை அனைத்தையும் சரியாக செய்வதன் மூலம் உங்களால் youtube-ல் சாதிக்க முடியும். இன்று இந்த youtube-ல் இருந்த பல்வேறு மனிதர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.இதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய தன்னம்பிக்கையும் விடமுயற்சியுமே நீங்களும் இடைவிடாது தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் உங்களுக்கும் வெற்றி கிட்டும்.
                                                                  நன்றி!