குறைவான முதலீட்டில் தொழில் தொடங்குவது எப்படி?top 10 small business ideas in tamil

   சிறுதொழில் தொடங்குவது எப்படி(small business ideas)

business ides in tamil
source:pixabay
வணக்கம் நண்பர்களே! இன்றைய காலகட்டத்தில் அனைத்து சாமானிய மனிதருக்கும் இருக்ககூடிய ஒரு மிகப்பெரிய ஆசை என்னவென்றால் ஒரு சிறு தொழில் தொடங்கி அதில் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான் இதற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு ஆகும் என பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர் ஆனால் மிகவும் குறைவான தொகையை வைத்து மிகப்பெரிய லாபத்தை தரும் ஒரு 10 சிறுதொழில்களை பற்றி இந்த பதிவில் காண்போம் .
இந்த தொழில்களை தொடங்க உங்களுக்கு 10,000 முதல் 50,000 வரை ஆகலாம்.

1. இணையதளத்தில் தொழில்

இன்றைய காலத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய இண்டர்நெட்டை வைத்தே நீங்கள் நிறைய குறுந்தொழிலை தொடங்கலாம். நீங்கள் ஆன்லைனில் டியூசன் தொடங்கலாம்  மற்றும் உங்களுக்கு என்ன திறன் உள்ளதோ அதை உலகிற்கு சொல்வதன் மூலம் உங்களால் பணத்தை பெற முடியும் . மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்றார்போல் உங்களின் சேவைகளை ஒரு வெப்சைட்டுகளை உருவாக்கி அதன் மூலம் வழங்குவதன் மூலம் கூட  ஒரு தொகையை பெறலாம் எடுத்துகாட்டாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்றவை.அதுமட்டுமில்லாமல் யூடுபில் இலவசமாக ஒரு சேனலை தொடங்கி அதில் அறுபுதமான வீடியோக்களை நீங்கள் வழங்குவதன் மூலம் அதன் மூலமாக கூட உங்களின் தொழிலை உருவாக்கலாம்.

2. நடமாடும் பியூட்டி பார்லர்

beauty parlor
நீங்கள் ஒரு அழகு நிபுணர் அல்லது அழகு கலை பயின்று வருகிறீர்கள் என்றால் ஒரு கடையை நிறுவி அதற்கு மாத வாடகை போன்றவை என்பது அதிக செலவுகளை ஏற்படுத்தும். அதுவே அந்த கடையை நிறுவும் விலைக்கு ஒரு வாகனத்தை வாங்கி  நடமாடும் அழகுநிலையாகமாக மாற்றி இடத்திற்கு ஏற்றார்போல் கட்டணத்தை வசூலித்து அதிக லாபத்தை பெறலாம் இதில் வெற்றியடைந்தால் இதனை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யலாம்.

3.பொருட்களை மாற்றும் பேக்கர்ஸ் தொழில்

packersbusiness
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயருபவர்களாகவே உள்ளனர் அப்படி இருக்கும்பொழுது அவர்களின் வீட்டில் உள்ள பொருட்களை வேறொரு இடத்திற்கு எடுத்து செல்வது என்பது கடினம் நீங்கள் இதையே ஒரு சேவையாக வழங்கலாம் இந்த பொருட்களை மாற்றும் தொழிலானது குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை தரும் ஒரு தொழிலாக உள்ளது. இதற்கு உங்களிடம் முக்கியமாக திட்டமிடுதலும் நல்ல பணியாளர்களும் தேவை.

4.விழாக்களை திட்டமிடும் தொழில்

event organizer
உலகிலுள்ள அனைத்து இடங்களிலும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பது நடக்கும் அப்படி நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலான மக்களால் திட்டமிடுவது என்பது இயலாத காரிமாகும் எடுத்துகாட்டாக திருமணம் நிகழ்கிறது என்றால் அந்த நிகழ்ச்சி எங்கு நடைபெறவேண்டும் எப்போது நடக்க வேண்டும் அதற்கு என்ன பொருட்கள் தேவை என்ற அனைத்து விடயங்களையும் திட்டமிட்டு வழங்கினால் போதும் இதற்கு முதலீடு என்பது மிகவும் குறைவு.

5.யோகா மற்றும் உடற்பயிற்சி கூடம்

yoga centre
source:freepik

தற்போதைய வாழ்வில் அனைத்து மக்களும் உடலுக்கு அதிகம் முக்கியதுவம் அளிக்க ஆரம்பித்துள்ளனர் இதனால் நீங்கள் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சியாளாராக மாறி அல்லது பயிற்சியாளர்களை நியமித்து ஒரு கூடத்தை அமைப்பதன் மூலம் உங்களால் கம்மியான முதலீட்டில் அதிக லாபத்தை அடையாளம் இதற்கு எதிர்காலத்தில் தேவைகள் அதிகம் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

 
மேலும் படிக்க; யூடுபில் பணம் சம்பாதிப்பது எப்படி?

6. வளர்ப்பு பிரானிகளை பார்த்துகொள்ளும் சேவை

pets

இன்றைய காலத்தில் அனைவரின் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் செல்லபிரானிகள் உள்ளனர் மக்கள் வெளிப்பயணம்  மேற்கொள்ளும்போழுது அவர்களுடைய செல்லபிரானிகளை கவனிப்பது மிகவும் சிரமம் இதனை பயன்படுத்தி நீங்கள் ஒரு செல்லபிராணிகளை கவனிக்கும் சேவைகளை வழங்கலாம்.

7. மாணவர்களுக்கான பயிற்சி மையம்

students centre

 தற்போதைய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அனைத்தும் கற்றுகொடுக்கபடுவதில்லை பெரும்பாலும் எப்படி மார்க் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனை பயன்படுத்தி தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு தேவையான நவீன அறிவியல் மற்றும் PROGRAMMING போன்ற திறன்களை வளர்பதற்கான சேவைகளை நீங்கள் வழங்குவதன் மூலமும் லாபத்தை பெற முடியும்.

8. கூரியர் சர்வீஸ்

courier service

இனுறைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் அனைத்து பொருள்களும் வீடு தேடி வர வேண்டும் என நினைக்கிறார்கள் இதனால் கூரியர் சேவை அதிகம் தேவைப்படும் , இதனால் கூரியர் சேவை என்பது தற்போது மிகவும் பிரபலமடைந்து வரும் தொழிலாக மாறியுள்ளது. எனவே  இதில் முதலீடு செய்வது லாபத்தை தரக்கூடியதாக உள்ளது. 

 

9.மொழிபெயர்ப்பு 

translating business

உங்களுக்கு உலகளவில் உள்ள நிறைய மொழிகள் தெரிகிறது என்றால் அந்த திறனை பயன்படுத்தி ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யும் சேவையை தொடங்கி லாபத்தை தொடங்கலாம்.

 10.குப்பைகளை மறுசுழற்சி செய்தல்

recycling

இந்த குப்பைகளை மறுசுழற்ச்சி செய்யும் தொழிலுக்கு வருங்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது இதனை மட்டும் நீங்கள் முறையாக கையாண்டால் மிகப்பெரிய நிறுவன மாக வளரக்கூட வாய்ப்புள்ளது.

 
குறிப்பு : மேலே குறிப்பிட்ட அனைத்து தொழில்களும் ஆன்லைனில் தொடங்குவது உங்களுக்கு மேலும் வளுசேர்க்கும்  அதுமட்டுமின்றி இவை அனைத்தும் ஒரே நாளில் உச்சத்தை அடையகூடிய தொழில்கள் அல்ல. இதற்கு சரியான திட்டமிடலும் கடினமுயற்சியும் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 
                                                                நன்றி!