சீனாவின் மேக்லவ் அதிவேக இரயில்வண்டி maglev trains working in tamil

  WORLD FASTEST MAGLEV TRAINS

world fastest trains
இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து என்பது இன்றியமையாதது என கூறலாம் உலகை அடுத்த அத்தியாத்திற்கு எடுத்து செல்ல முக்கிய கூறாக கருதபடுவது இந்த அதிவேக போக்குவரத்து என கூறலாம். 1860-களில் முதன் முதலில் இரயில் சேவை தொடங்கபட்டது அதன்பிறகு பல்வேறு ஆக்கபூர்வமான மாற்றங்களுக்கு பிறகு இன்றைய இரயில் போக்குவரத்து மிகவும் வேகமடைந்துள்ளது இதனை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் தொழில்நுட்பம்தான் இந்த மேக்லவ் இரயில் சேவை இதை பற்றிய விளக்கத்தை இந்த பதிவில் காண்பொம்.

மேக்லவ் இரயில்

maglev trains

இந்த மேக்லவ் இரயில் சேவை 21-ஆம் நூற்றாண்டின் அதிவேக போக்குவரத்தாக இருக்கும் என கூறபெபடுகிறது. தற்போது உலகின் வேகமான இரயிலாக ஜப்பான் நாட்டிலுள்ள  L0 SEREIS MAGLEV  உள்ளது இது மணிக்கு 450 முதல் 600 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது என குறிப்பிடப்படுகிறது  ஆனால் தற்போது சீனா உருவாக்கியுள்ள அதிவேக மேக்லவ் புல்லட் இரயில் ஆனது 600 முதல் 800 வேகத்தில் செயல்படக்கூடியது என குறிப்பிடப்படுகிறது. இந்த அதிவேக இரயில்களை உருவாக்க வேண்டும் என்று 2019-ஆம் ஆண்டு திட்டமிட்டு வெறும்  3 மணி நேரத்தில் சீனாவில் உள்ள பெரு நகரங்களை இணைக்கும் வன்னம் உருவாக்கபட்டதுதான் இந்த அதிவேக இரயில்கள்.

மேக்லவ் டெக்னாலஜி

maglev technology
 

இந்த அதிவேக இரயில்களானது மேக்லவ் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறத, அதாவது மேக்லவ் என்பதற்கு மேக்னடிக் லெவிடேசன்(MAGNETIC LEVITATION) என்று பொருள். சாதாரண இரயில்களுக்கும் இந்த இரயில்களுக்கும் இடையே உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் சாதாரண இரயில்களில் இன்ஜின்தான் இரயிலை கட்டுபடுத்தும்  ஆனால் மேக்லவ் இரயில்கள் மின் காந்தங்களால் கட்டுபடுத்தபடும் அதுமட்டுமல்லாமல் இந்த மேக்லவ் இரயில்கள் தண்டவாளங்களுக்கு பதிலாக செயற்கையாக உருவாக்கபட்ட காந்தகளின் மேல் செயல்படும். செயற்கையான காந்தம் என்றால் ஒரு இரும்பு பொருளின் மிது காப்பர் கம்பியை சுற்றி அதில் மின்னூட்டம் செலுத்துவதன் மூலம் செயற்கையான காந்தங்களாக மாற்றலாம் இந்த முறையைதான் இந்த இரயில் வண்டியிலும் பயன்படுத்தியுள்ளனர்.

 
தண்டவாளங்களும் முழுமையான காந்தங்களால் உருவாக்கபட்டிருக்கும் நீங்கள் பள்ளி பருவத்தில் படித்திருப்பீர்கள் ஒரே முனையை கொண்ட இருகாந்தங்கள் விலகி செல்லும் என்று அதையே தான் இந்த இரயில் தாண்டவாளங்களிலும் பயன்படுத்தியுள்ளனர். இரயில் வண்டி வட துருவமாக இருக்கும் போது தண்டவாளமும் வட துருவமாக இருக்கும் இதனால் இரு காந்தங்களிலும் உந்து விசை ஏற்பட்டு இரயில் வண்டியை முன்னொக்கி செல்ல வைக்கும். இப்படி நாம் மின்னூட்டத்தை அதிகரிக்கும்பொழுது காந்தபுலம் அதிகரித்து இரயில் மிக வேகமாக பயணிக்கும். 
 
 
இந்த மேக்லவ் இரயில்கள் எலக்ட்ரோ டைனமிக் சஸ்பென்ஷன் (EDS – ELECTRO DYANMIC SUSPENSION) என்ற புதிய முறையில செயல்படுகிறது இரயிலிலும் தண்டவாளங்களிலும் காந்தம் இருப்பதால் இந்த இரயில் வண்டி மிதந்து கொண்டிருக்கிறது என குறிப்பிடலாம் . குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கிட்டதட்ட தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் இருக்கும். இந்த செயற்கை காந்தங்கள் தண்டவாளங்கள் மற்றம் இரயிலில் மட்டுமல்லாமல் இரயிலின் இருபுறம் உள்ள தடுப்பு சுவர்களிலும் காணப்படுகின்றன, இந்த தடுப்பு சுவர்கள் இரயிலை தடம்புரலாமல் பாதுகாக்கும் .
 
 
இந்த அதிவேக இரயில் பரிசோதனையில் ஏற்கனவே ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் பரிசோதனையில் ஈடுபட்ட இருந்த நிலையில் தற்போது சீனா அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது இந்த அதிவேக இரயிலானது 3 மணி நேரத்தில் 1500 கி.மீ தூரம் பயணிக்கூடியது என்று சீன விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றன. அதாவது இந்த அதிவேக இரயில் இந்தியாவில் இருந்தால் சென்னையிலிருந்து மும்பைக்கு உங்களால் வெறும் 2.30 மணி நேரத்தில் செல்ல முடியும்.
 
 
இந்த EDS முறையை முதலில் அறிமுகபடுத்தியது ஜப்பான் நாடுதான் ஆனால் ஜெர்மனி வேறொரு மின்காந்த முறையை கையாள்கிறது. இந்த EDS முறையில் செயற்கை காந்தங்களை உருவாக்க அதிக மி்சாரம் செலுத்தபடும் அப்போது அவை அதிகபடியாக சூடாக வாய்ப்புள்ளது இதனை தவிர்க்க ஜப்பானியர்களால் உருவாக்கபட்டதுதான் குளிரூட்டபட்ட சூப்பர் கண்டக்டிங் மின்காந்தங்கள் இவைகளை குளிரூட்ட கிரையோஜெனிக் என்ற முறையை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த மேக்லவ் இரயில் இருக்க கூடிய  பின்னடைவு என்னவென்றால் இந்த இரயில்கள் 150 கிமீ வேகத்தை எட்டும் வரை அதனை இரப்பர் டயர்களால் செயல்பட வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இரயிலில் மின்சாரம் இல்லையென்றால் கணினியும் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவிடும் . இவற்றில் சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
 
 
 
அதிவேக இரயில்களுக்கு ஜெர்மனி பயனபடுத்திய முறை இண்டக்ட்ராக் ஆகும். இந்த முறையில் ஒரு நிலையான வெப்பநிலை கொண்ட காந்தங்கள் பொருத்தப்பட்டிருக்கும் இதனால் இவைகளுக்கு கிரையோஜெனிக் போன்ற எந்த குளுரூட்டிகளும் தேவையில்லை இவையை இரயிலை இயக்க சக்தியையும் உருவாக்குகிறது இதில் மின்சாரம் இல்லையென்றால் இரயில் படி படியாக வேகத்தை தானாகவே குறைக்கும். இந்த இண்ட்ராடக் முறையும் மேலே குறிப்பிட்டது போல்தான்  ஒரு கம்பியின் மீது காப்பர் சுருள்கள் சுற்றப்பட்டிருக்கும் அந்த சுருள்கள் வழியாக மின்சாரம் செலுத்தபட்டு அந்த கம்பிகள் காந்தங்களாக மாற்றப்படும்.
 
இநுத அதிவேக இரயில்கள் வருங்காலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை ஏனென்றால் பெரும்பாலான ஐரோப்பியர்கள் விமான வழி போக்குவரத்தை விரும்பவில்லை என்றும் விமானங்கள் அதிக மாசுக்களை ஏற்படுத்துவதன்  காரணமாகவும் இந்த இரயில் போக்குவரத்து மீண்டும் ஒரு புதுயுகத்தை தொடங்கியுள்ளது என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. 
 
                                                              நன்றி!