titanic

டைட்டானிக் கப்பல் பற்றிய பிரம்மிக்க வைக்கும் உண்மைகள் unknown facts about titanic in tamil

  unknown facts about titanic

source:freepik
பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்த உலகின் பல அதிசயங்கள் தனித்து முதன்மையாக இருப்பவைகளில் இதுவும் ஒன்று இதன் பெயரைக் கேட்டதும் இதன் உருவம் மட்டும் இல்லாமல் இதற்கு ஏற்பட்ட மாபெரும் அழிவும் அந்த அழிவால்  பல நூறு மனித உயிர்களும் போனதும்தான் நம் நினைவிற்கு வரும் அதுதான் டைட்டானிக்.  ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற பெயர் கொண்ட இந்த கப்பலானது  ஏராளமான பயணிகளை ஏற்றிகோண்டு  முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி பெரும் விபத்தை சந்தித்து அட்லாண்டிக் பெருங்கடலில்  1912-ல் இரண்டாக உடைந்து போனது மொத்தம் 2 ஆயிரத்து 223 பேர் பயணம் செய்த இக்கப்பலில் 1503 பேர் விபத்தில் பலியாகி போனது வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வாக மாறியது இந்த கப்பலை பற்றி அனைவருமே நன்கு அறிந்திருந்தாலும் இதனைப் பற்றி பலரும் அறியாத சில தகவல்களையும் சில மர்மங்களையும் சர்ச்சைகளையும் பற்றி இந்த பதிவில் காண்போம்.

டைட்டானிக் மூழ்கிய வரலாறு

titanic

 

 1912ம் வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு பனிப்பாறையில் மோதி வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியில் மூழுகிபோனது இந்த டைட்டானிக். கிட்டதட்ட  73 வருடங்கள் கழித்து 1985ல் தான் இந்த கப்பல் கடலுக்கடியில் இருப்பது  கண்டறியப்பட்டது. கனடாவின்  கடற்கரையிலிருந்து சுமார் 170 மைல் தொலைவிலும் கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 12,500  ஆழத்திலும் நீர்மூழ்கிகள் வைத்து தேடும்பொழுதுதான் இந்த டைட்டானிக் கப்பலை கண்டறிய முடிந்தது. ஆனால் நாம் ஏற்கனவே அறிந்திருந்த படி இரண்டு துண்டுகளாக உடைந்து போன இந்த கப்பலின் அந்த இரண்டு பாகங்கள் இடையேயான தூரம் மட்டுமே கடலின் ஆழத்தில் சுமார் 2000 அடி இடைவெளியில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடதக்கது.இந்த டைட்டானிக் கப்பல் தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஆகும். ஒரே நேரத்தில் 3 ஆயிரத்து 500 பேர் வரையிலும் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட இதில் 1912 ஆம் ஆண்டுதான் தான் அதன் முதல் மற்றும் கடைசி பயணத்தை தொடங்கியது 2223 பேர் பயணம் செய்தவர்களில் படகு விபத்தில் சிக்கி மட்டுமே  1503 பேர் இறந்துபோனார்கள்.
 

பனிப்பாறை

iceberg titanic
இந்த கப்பலை மூழ்கடித்த பனிப்பாறையானது நீரின் மேற்பரப்பில் இருந்து மேலே 100 அடி உயரத்தில் இருந்திருக்கிறது மேலும் அந்த முழு பனிப்பாறையின்  அளவானது கடலுக்கடியிலிருந்து 200 முதல் 300 அடி வரையிலும் இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது பொதுவாக உலகிலேயே அதிக பனிப்பாறைகள் இருக்கும்  இடம் வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதி தான் இந்த பகுதியில்தான் டைட்டானிக் கப்பலும்  பயணம் செய்திருக்கிறது . இந்த பகுதியில் இருக்கும்  85 சதவிகிதம் பனிப்பாறைகள்  அருகில் இருக்கும் கிரின்லாந்து  மேற்கு கடற்கரையிலிருந்து நான் உடைந்து போய் இப்பகுதிக்கு வந்து சேர்கின்றன இப்படி வந்த ஒரு பனிப்பாறைதான் இந்த டைட்டானிக் கப்பலையும் மூழ்டித்துள்ளது. 
 

டைட்டானிக் கப்பலின் தோற்றம் 

titanic
source:pixabay
இந்த டைட்டானிக் கப்பலுக்கு  அழகிய தோற்றத்தைக் கொடுப்பது  இந்த  புகைபோக்கிகள் தான் . எரிபொருளை எரித்து அதிலிருந்து வெளிவரும் புகையானது இதன் வழியாகத்தான் வெளியேறும் ஆனால் உண்மையில் அந்த நான்கில் மூன்று மட்டுமே புகையை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றொன்று வெறும் அழகிற்காக பொருத்தபட்டது.இந்த டைட்டானிக் கப்பல் ஆனது நீராவியால் இயங்கக்கூடிய மொத்தம் 159 ஓலைகளும் 29 மிகப்பெரிய கொதிகலன்கள் கொண்டிருக்கும் இந்த 45 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல் இயக்குவதற்காக மட்டும் ஒரு நாளைக்கு 600 நிலக்கரியானது தேவைப்பட்டிருக்கிறது இந்த 600 டன் நிலக்கரியை எரித்து பிறகு கிடைத்த சாம்பல் மட்டுமே 100 டன் வரையிலும் இருந்ததுடன் அதனை தினமும் கடலில் கொட்டி வெளியேற்றுவதற்காக  75 பணியாளர்கள் இருந்துள்ளார்கள்
 
 இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பயணித்த இக்கப்பலில் ஆபத்து ஏற்பட்டால் தப்பிப்பதற்கான லைஃப் போட்டுகள் என்று வெறும் இருபது  மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன ஆனால் இந்த டைட்டானிக் கப்பலில் மட்டும் 68 லைஃப் போட்டுகள் வரை எடுத்துசெல்ல இடம் இருந்திருக்கிறது ஆனால் அதை ஏன் எடுத்து செல்லவில்லை என்பது குழப்பமாகே உள்ளது.  இரவு 2 மணி 20 நிமிடத்திற்கு இந்த கப்பலானது முழுவதும் மூழ்கி போவதற்கு முன் இந்த லைஃப் போட்களில்  இடம் பிடிப்பதற்காக ஏற்பட்ட பிரச்சனைகளிலேயே பலர் தண்ணீருக்குள் மூழ்கிப்போய் உள்ளார்கள் ஒருவேளை கப்பல் மூழ்க ஆரம்பித்த உடனேயே படகுகளை கீழே இறக்க ஆரம்பித்திருந்தால் கப்பலில் பயணித்த பாதிக்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றியிருக்க முடியும் ஆனால் 2000 பேருக்கு மேல் இருந்து கப்பலில் வெறும் 700 பேர் மட்டுமே உயிர் தப்பியிருக்கின்றனர்
 

டைட்டானிக்கை தின்னும் பாக்டிரியா

titanic
 
 சமீபத்தில் வெளியான ஒரு தகவலின் படி 1912 மூழ்கிய டைட்டானிக் கப்பலை ஹலாமோனஸ் டைட்டானிகா  என்ற ஒரு புதிய வகை பாக்டீரியா ஆனது கொஞ்சம் கொஞ்சமாக உண்டு  வருகிறது. இந்த பாக்டிரியா மிகவும் வித்தியாசமாக இருந்ததால்  அறிவியலாளர்கள்  இந்த  பாக்டீரியாவுக்கு டைட்டானிக்கின் பெயரையும்  சேர்த்து  வைத்து இருக்கிறார்கள் மேலும் அவர்களின் கணிப்புப்படி 2104 ஆம் வருடத்தின் இறுதிக்குள் அந்த பாக்டீரியாக்கள் தண்ணீருக்குள் இருக்கும் டைட்டானிக் கப்பலை முழுவதும் உரு தெரியாமல் அழித்து விடும் என்றும் கூறப்படுகிறது. 
 

டைட்டானிக்கின் கடைசி பயணாளி

melvina titanic
மெல்வினா டீன் என்பவர்தான்  1912ல் டைட்டானிக் கப்பலில் பயணித்தவர்களில் மிகவும் வயது குறைந்தவர்,  வெறும் 2 மாத குழந்தையாக பயணித்த இவர்தான் கடைசியாக இக்கப்பலில் பயணித்தவர். இவர் 2009ஆம் வருடம் தன்னுடைய  97 ஆவது வயதில்  இறந்து போனார்.
 

டைட்டானிக் திரைப்படம் 

titanic
உண்மையான டைட்டானிக் கப்பலின் மதிப்பு 7.5 மில்லியன் டாலர்கள் ஆனால் 1997 இல் ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பில் வெளியான படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் 200 மில்லியன் டாலர்கள் இன்றைய மதிப்பின்படி அந்தத் திரைப்படத்திற்கு செலவு செய்யப்பட்ட மொத்த தொகையையும் வைத்து ஒரு புதிய டைட்டானிக் கப்பலை உருவாக்க இருக்கலாம் ஆனால் இந்த படமானது 11 ஆஸ்கார் விருதுகளை பெற்றதுடன் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு 14 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் பார்த்தது.
 

டைட்டானிக்கில் பயணம் செய்த பெண்

இவரின் பெயர் தான் வைலட் ஜெஸ்ஸோப் டைட்டானிக் கப்பல் மூழ்கும்போது அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்களில் இவரும் ஒருவர். இவர் ஒரு நர்ஸ் ஆவார், இதில் குறிப்பிடதகுந்த விஷயம் என்னவென்றால் 1911-ஆம் ஆண்டு இவர் பயணம் செய்த ஒலிம்பிக் என்ற கப்பலானது விபத்துக்குள்ளானது ஆனால் அதிலும் இவர் உயிர்தப்பினார் அதன் பிறகு டைட்டானிக்கில் பயணம் செய்தபோதும் கப்பல் மூழ்கியது ஆனால் இவர் உயிர்தப்பினார் இத்தோடு மட்டும் நிற்காமல் முதல் உலகப்போரின் போது பிரிட்டானிகா என்ற கப்பலில் இவர் பயண் செய்தார் அந்த கப்பலும் மிகப்பெரிய விபத்துக்குள்ளானது அந்த விபத்திலும் இவர் உயிர் தப்பினார். இந்த பெண் பயணம் செய்த கப்பல்கள் மூழ்கியுள்ளன ஆனால் அனைத்து விபத்துகளிலும் இவர்மட்டும் உயிர் தப்பினார் என்பது நம்மையே சற்று வியப்பில் ஆழ்த்துகிறது.

 

பனிப்பாறையை பார்காதது ஏன்?

உங்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்திருக்கலாம் இவ்வளவு பெரிய கப்பலில் பனிப்பாறையை யாருமே கவனிக்கவில்லையா என்று. உண்மையில் அங்கு என்ன நடந்தது என்றால் அனைத்து கப்பலிலும் கடலில் தொலைவில் உள்ள இடங்களை காண பைனா குலர்கள் பயன்படுத்துவார்கள் ஆனால் டைட்டானிக் கப்பல் தனது பயணத்தை தொடங்கும் அந்த கப்பலில் வேலை செய்த மாலுமி டேவிட் பிளைர் என்ற நபர் பைனாகுலரை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு சாவியை எடுத்துகொண்டு அவரின் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் பைனாகுலர் இல்லாமலே டைட்டானிக் கப்பல் பயணத்தை தொடங்கியது இந்த பைனகுலர் இல்லாத காரணத்தால் பனிப்பாறையை அவர்களால் தொலைவில் இருந்து காணமுடியவில்லை, குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் கப்பல் பனிப்பாறை மீது மோதப்போகிறது என்பதே அவர்களுக்கே 30 நொடிகளுக்கு முன்புதான் தெரியவந்தது இதானல் கப்பலை திருப்பவும் முடியாமல் கப்பல் விபத்துக்குள்ளானது எனலாம். 

டைட்டானிக்கும் மம்மியும்

mummy

 

  அட்லாண்டிக் கடலில் மூழ்கிப்போன இந்த டைட்டானிக் பற்றி இன்று வரையிலும் சில மர்மங்கள் முடிவில்லாமல் தீர்வு இல்லாமலும் நீடித்துக் கொண்டுதான் வருகின்றன அதில் ஒன்றுதான் இந்த அண் லக்கி மம்மி ஆகும். அமன்ட்ரா என்ற எகிப்திய இளவரசியின் பற்றிக் கூறப்படும் மர்மமும் அதன் சாபமும் எனலாம், 1890களின் பிற்பகுதியில் லகுஸர்  என்ற பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட அமண்ட்ரா என்ற மம்மியின் சவப்பெட்டியை    வைத்திருந்த பலரையும் அக்காலத்தில் காவு வாங்கிவந்துள்ளது  எகிப்திலிருந்து பல இடங்களில் கைமாறிய இந்த மம்மி பலரையும் பலி வாங்கிய பிறகு இறுதியாக பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு கொண்டுசெல்ல 1912இல் அந்த சவப்பெட்டியை ரகசியமாக டைட்டானிக் கப்பலில் தான் கொண்டு சென்றதாகவும் இறுதியில் அதுதான் இந்த விபத்திற்கு காரணம் என்றும் இந்த அன்லக்கி மம்மி பற்றிய சில தகவல்கள் கூறப்படுவதுடன் பலராலும் இன்றும்  நம்பப்படுகிறது.

டைட்டானிக்கும் இலுமினாட்டிகளும்

titanic mystery illuminati
WHITE STAR LINE  என்ற நிறுவனம்தான் இந்த டைட்டானிக் கப்பலை வடிவமைத்தது, இந்த நிறுவனமானது RMS TITANIC  மற்றும் RMS OLYMPIC என்ற இரண்டு கப்பலை வடிவமைத்துள்ளது இதில் RMS OLYMPIC கப்பலானது ஒரு போர் கப்பலாகும் அப்போது கப்பலில் ஏற்பட்ட விபத்தால் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது . இந்த ஒலிம்பிக கப்பலின் இன்சூரன்சை பெற அந்த ஸ்டார்லைன் நிறுவனமானது இரண்டு கப்பலின் பெயரையும் மாற்றி , டைட்டானிக்குக்கு பதிலாக இந்த ஒலிம்பிக் கப்பலை செலுத்தி திட்டமிட்டு பனிப்பாறையின் மீது மோதசெய்தது  என்று இலுமினாட்டிகளின்  கைவசமுள்ள WHITE STARLINR  நிறுவனத்தினால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு இன்சூரன்ஸ் மோசடி என்றும் கூறப்படுகிறது. 1997 இல் வெளியான டைட்டானிக் படத்தின் தயாரிப்பிலும் இந்த ஸ்டார்லைன்  நிறுவனம் இருக்கிறது, அதாவது உண்மையான டைட்டானிக் கப்பல் போன்ற  படத்துக்காக போடப்பட்ட செட்டுகளானது  இந்த நிறுவனத்தின் உதவியுடன் நடந்திருப்பது என்பதும் குறிப்பிட தக்கது. அதுமட்டுமில்லாமல் டைட்டானிக் திரைப்படத்தில்  மறைமுகமான பங்குதாரர்களாக இருந்ததாகவும்  கூறப்படுகிறது டைட்டானிக் கப்பலில் நடந்த உண்மை சம்பவங்களை வெளியே தெரியாத வன்னம்  இந்த திரைப்படத்தை காதல் காவியமாக எடுத்து உலக மக்களிடம் டைட்டானிக் மோசடியை மறைத்திருப்பதாகவும்  கூறப்படுகிறது . இது குறித்த  ஒரு சூழல் மர்மமான இன்றளவும் நிலவி வருவதாக கூறப்படுகிறது.