பாகிஸ்தான் பற்றிய வியப்பான தகவல்கள் 10 facts about pakistan in tamil

                10 FACTS ABOUT PAKISTAN

பாக்கிஸ்தான்
source:pixabay
வணக்கம்! இன்றைய பதிவில் நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தான் பற்றிய சில வியப்பான தகவல்களை காண்போம்.

பாகிஸ்தான் பெயர்காரணம்

pakistan
 

பாகிஸ்தான் என்ற பெயரானது  உருது மற்றும் இந்தி மொழியில் இருந்து வந்தது என்று குறிப்பிடப்படுகிறது உருதில் பாக் என்பதற்கு புனிதமான  என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பேசப்படும் இந்தியில் இஸ்தான் என்பது தேசத்தை குறிக்கும் அதாவது பாக்கிஸ்தானை புனிதமான தேசம் என கூறுகிறார்கள்.

கம்ப்யூட்டர் வைரஸ்

virus

இந்த உலகில் முதல் முறையாக கம்ப்யூட்டர் வைரஸ் என்பது பாகிஸ்தானை சேர்ந்த பசித் மற்றும் அம்ஜத் என்ற இரண்டு சகோதரர்கள் 1986-ஆம் ஆண்டு உருவாக்கினர்.

கால்பந்து 

foot ball

இந்த உலகில் பயன்படுத்தும் 40% மேற்பட்ட கால்பந்துகள் பாகிஸ்தானில் இருந்துதான் உருவாக்கப்படுகிறது. அதுவும் பாக்கிஸ்தானில் உள்ள சியால்கோட் என்ற இடத்தில்தான் இந்த கால்பந்துகள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன.

உலகின் உயரமான சாலை

road

டிராகல்+லீஷர் பத்திரிக்கையின் ஆய்வின்படி, கரகோரம் நெடுஞ்சாலைதான் உலகின் மிக உயரமான சர்வதேச சாலை.  இது 800 மைல் நீளம் கொண்டது இந்த  நெடுஞ்சாலை பாகிஸ்தானை மேற்கு சீனாவுடன் இணைக்கிறது, இது அதிகபட்சமாக 15,300 அடி உயரத்தை அடைகிறது.

அவசர ஊர்தி சேவை

ambulance
 
 
 இந்த உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் நெட்வொர்க்கை பாகிஸ்தான் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் எத்தி என்ற அறக்கட்டளையானது இந்த நெட்வொர்க்கை இயக்குகிறது, இது கின்னஸ் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் திருமண சட்டம்

 
 

பாகிஸ்தானில் உள்ள ஒரு ஆண் திருமணமாகியிருந்தாலும் கூட மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் இதை தன்னுடைய முதல் மனைவியிடம் கூற வேண்டும் என்பது கூட அவசியமில்லை ஆனால் இதை ஒரு பெண் செய்தால் அந்த பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்படும்.

உலகின் உயரமான ஏ டி எம் 

ATM
 

இந்த உலகின் மிக உயரமான ஏடிஎம் பாகிஸ்தானின் தேசிய வங்கிக்கு சொந்தமானது இது கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள குஞ்செராப் கணவாயில் அமர்ந்திருக்கிறது. இது நவம்பர் 2016 இல் நிறுவப்பட்டது இது கிட்டதட்ட  கடல் மட்டத்திலிருந்து 15,397 அடி உயரத்தில் உள்ளது.

பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமர்

 

உலக நாடுகளுடன் இஸ்லாமிய நாடுகளை ஒப்பிடும்போது பெண்களுக்கான உரிமை என்பது சற்று குறைவே ஆனால் பாக்கிஸ்தான் அப்படியில்லை எனலாம், அங்கு பெண்களுக்கான சுதந்திரம் மற்ற இஸ்லாமிய நாடுகளைவிட அதிகம். 1992-ல்  முதல் முறையாக  பெனாசிர் புட்டோ என்ற பெண் பிரதமர் ஆனார் இது தான் உலகில் இஸ்லாமிய நாடுகளில் ஒருபெண் பிரதமர் ஆன நிகழ்வு.

கடைகளில் சாப்பிடுவது குற்றம்

ramadan
 

பாகிஸ்தானில் ரம்ஜான் தினங்களில் கடைகளில் சாப்பிடுவது சட்டத்திற்கு புறம்பான ஒன்று ,ரம்ஜான் தினத்தில் யாராவது கடைகளில் உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு ஜெயில் தண்டனை உறுதி.

உலகின் பிரபலமான பாகிஸ்தானிய பெண்

 

இவர்தான் மலாலா யூசப்சை உலகிலேயே முதல் முறையாக இளம் வயதிலேயே நோபல் பரிசு பெற்றவர் பாகிஸ்தானில் பெண் கல்விக்காக ஆதரவாக போராடியவர் அப்படி போராடும் பொழுது தாலிபான் தீவிரவாதிகளால் துப்பாக்கியால் தாக்கபட்டார் இருப்பினும் இன்றுவரை பெண்களுக்காக குரல் கொடுப்பவர்  தற்போது இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

 
 
 

 

 

 
 
.