வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான 5 வழிகள் how to win my life in tamil

              வாழ்க்கையில் வெற்றி பெறும் வழிகள்

how to win my life
source:unsplash.com

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கூடிய ஒரு பொதுவான கனவு என்னவென்றால் நான் என்னுடைய வாழ்க்கையில் வெற்றிபெற(how to win my life) வேண்டும் என்பதுதான், அதில் ஒரு சில மக்கள் மட்டும் அபாரமான வெற்றிகளை பெறுகின்றனர் அது எப்படி அவர்களைபோல் நாமும் வெற்றியடைவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

நாம் ஏன் வெற்றியடையவேண்டும்-why win my life

win life
source:freepik.com
முதலில் நாம் ஏன் வெற்றியடைய வேண்டும் என்பது முக்கியம், நாம் வெற்றியடைய வேண்டும் என நினைக்க காரணம் 

பண்டைய காலங்களிலிருந்து தற்போதைய சமூகம் வரை  எப்போதும் வெற்றியாளர்களையே பாராட்டியுள்ளது. வெற்றி என்பது சமூகத்தின்  மையமாக மாறிவிட்டது, மேலும் நாம் செய்யும் அனைத்து செயல்களும்  இந்த ஒரு வெற்றிக்கான செயலாகவே கருதப்படுகிறது. “வெற்றியாளர்கள் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள் மற்றும் வெளியேறுபவர்கள் ஒருபோதும் வெல்ல மாட்டார்கள்” எனக்கு மிகவும் பிடித்த வாசகம்.

வெற்றியின் பலன்கள்

life winning

நீங்கள் வெற்றி பெற்ற பிறகு அந்த வெற்றியின் சுவை என்பது  மிகவும் இனிமையானது அதுமட்டுமின்றி இதுவரை கிடைக்கபெராத ஒரு அங்கீகாரம் உங்களின்  வெற்றிக்கு பிறகு கிடைக்கும், வெற்றி பாதை  கடினமாக இருந்ததாலும் , அந்த வெற்றியின் சுவை என்பது இனிமையானது.உங்களுடைய வெற்றிதான்  நீங்கள்யார் என்பதை   உணரச்செய்யும்  , மேலும் அது  உங்கள் நம்பிக்கையை மேம்படுத்தி, உங்கள் மன உறுதியை அதிகரிக்கும், மேன்மேலும் வெற்றிபெற வேண்டும் என்ற உங்கள் ஆசை, தோல்வி பயத்தை துரத்தி அடிக்கும்.

1.இலக்குகளை தீர்மானியுங்கள்

goals
குறிப்பிட்ட இலக்குகளை வைப்பதன் மூலம் ,  உண்மையில் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.இலக்குகள் இல்லாவிடில் உங்களால் வெற்றியை அடைய இயலாது. இதற்கு சிறந்த உதாரணம் நீங்கள் ஒரு பந்தயத்தில் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள், ஆனால் இறுதி இடம் எங்கே என்று உங்களுக்குத் தெரியாது, அப்படி இருக்க உங்களால் அந்த போட்டியில்  வெற்றி பெற முடியுமா? . உங்களால் வெற்றிபெற இயலாது. அதனால்தான் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இலக்கு தேவை, நீங்கள் எந்த திசையில் செல்கிறீர்கள், உங்களின் இலக்கு எங்கே உள்ளது  என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இலக்கில்லாமல் வேலை செய்வதை விட எதையாவது நோக்கி வேலை செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களின் வாழ்வின் தரத்தை மேம்படுத்தும்.

2.உங்களின் செயலுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்

how to win my life tamil
 உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்க கற்றுக்கொள்ள வேண்டும்
உங்கள் தவறுகளுக்கு நீங்கள் மற்றவர்களைக் குறை கூற கூடாது, நீங்கள் சாக்குகளை பயன்படுத்த கூடாது. வெற்றியாளர்கள் தங்கள் சொந்த தவறுகளைப் பற்றி சுய விழிப்புணர்வு கொண்டவர்கள், அவர்களின் விருப்பங்களும் முடிவுகளும் தான் அவர்களை அங்கு அழைத்து வந்தன என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். வெற்றியாளர்கள் சாக்குகளைப் பயன்படுத்துவதில்லை, அதற்கு மாறாக அவர்கள் தீர்வுகளைக் காண்கிறார்கள்.

3. வெற்றாயாளர்களின் பழக்கம்

winning habit
உங்களின் மனதில் அனைத்தையும்  வெல்லும் பழக்கத்தை உருவாக்குங்கள்,
ஆம்  நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். நீங்கள் ஒரு வெற்றி பழக்கத்தை உருவாக்க வேண்டும்,இந்த  பழக்கங்களை வளர்ப்பது கடினம். ஒரு வெற்றி பழக்கத்தை உருவாக்க, நீங்கள் ஒவ்வொரு  விஷயங்களையும்  வேறு கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்க வேண்டும், அவற்றை சவால்கள் போல் பார்க்க வேண்டும். நீங்கள் தினமும் உங்களை சவால் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும், உங்களுக்கு  முன்பு தெரியாத விடயம்  ஒன்றை தினமும் செய்யக்கூடிய  பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதாவது தினமும் புதிதாக ஒரு விடயத்தை கற்றுகொள்ளுங்கள் இதுதான் வெற்றாளர்களின் பழக்கங்களாக கருதப்படுகிறது.

4. தோல்வியை கண்டு அஞ்சாதீர்

fear of failure
நீங்கள் தோல்வியை கண்டு  பயப்படக்கூடாது,  அதற்கு பதிலாக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தோல்விகளை ஒரு பாடமாக ஏற்க கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வி உங்களின் வாழ்க்கையை  நிலைகுலைய வைக்கும் அளவிற்கு  விடக்கூடாது, அந்த தோல்விகள்தான்  நீங்கள் சிறந்ததைப் பெற வழிகாட்டியாக அமையும் , அதுதான்வாழ்க்கைகான  பாடம், அடுத்த முறை நீங்கள் வெற்றிபெற உதவும் வழிகாட்டியாக அந்தப் பாடத்தைப் பயன்படுத்த வேண்டும்.

5.கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்

learn everyday
ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், ஒரு புத்தகத்தைப் படிக்கவும் அல்லது புதிய நபர்களைச் சந்திக்கவும் அல்லது வேறு ஏதாவது செய்யவும். ஏனென்றால் வெற்றி என்பது உங்களின் அறிவை பொருத்தே அமையும், “அறிவே ஆற்றல்” என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6.துணிந்து செய்

take risk
ரிஸ்க் எடுக்க பயப்பட வேண்டாம். ஏனென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருந்தால், நீங்கள் வாய்ப்பை இழக்க நேரிடும், மேலும் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். எனவே துணிந்து செய்யவும்.

7.கவனம் முக்கியம்

focusing
உங்களின் இலக்கை நோக்கி கவனத்தை வைத்திருப்பது முக்கியம். சோர்வடைய வேண்டாம், எப்போதும் உங்கள் மனதை  இலக்கை நோக்கி கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் நீங்கள் கவனம் செலுத்தவில்லை என்றால், நீங்கள் செயல்களை  தீவிரமாக செய்ய மாட்டீர்கள்! நீங்கள் விஷயங்களை தீவிரமாக செய்யவில்லை என்றால், நீங்கள் வெற்றியாளராக மாற முடியாது நண்பர்களே.
வாழ்க்கையில் வெற்றிபெற இந்த வழிகள் மட்டுமல்லாமல் நிறைய வழிகள் உள்ளன அவையெல்லாம் ஒவ்வொரு தனி நபரை பொருத்து மாறுபடும். எனவே வெற்றிக்கான பாதையில் உங்களின் பயணத்தை தொடங்குங்கள் சில காலங்கள் ஆனாலும் வெற்றி என்பது அனைவருக்கும் கிட்டும், நீங்கள் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.
                                                                      நன்றி!