facts about dreams

கனவுகள் பற்றிய வியப்பான உண்மைகள் interesting facts about dreams in tamil

    கனவுகள் பற்றிய வியப்பான உண்மைகள் interesting facts about dreams

கனவு ஏன் வருகிறது
source:brightside

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் நம்முடைய வாழ்வில் அனைவராலும் தவிர்க்க முடியாத விஷயம் என்னவென்றால் தூக்கம் அந்த தூக்கத்திலும் தவிர்கமுடிய விசயம்தான் இந்த கனவுகள், இந்த கனவுகள் பற்றி இதுவரை நீங்கள் கேள்வியே படாத சில வியப்பான உண்மைகளை பற்றிதான் இந்த பதிவில் காணபோகிறோம்.

கனவு ஏன் வருகிறது?(Why do we dream?)

facts about dreams
உண்மையில் கனவு ஏன் வருகிறது என்று எவராலும் கூறமுடியவில்லை ஆனால் நம் மூளையில் உள்ள நினைவுகளை நினைவு கூறவும் தேவையில்லாத நினைவுகளை நம் மூளையில் இருந்து நீக்கும் பொழுதுதான் நமக்கு கனவு வருகிறது என்ற ஒரு கூற்றும் உள்ளது. ஆனால் இன்றுவரை இதற்கான தெளிவான விளக்கம் கிடையாது.

கனவிற்கு நிறமுண்டா

dream facts in tamil
ஆராய்ச்சியாளர்கள் உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் காண்கின்ற  கனவின்  நிறத்தை பற்றி  தெரிவிக்கையில், சுமார் 12% மக்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே கனவு காண்கிறார்கள் என்று கூறுகின்றனர். கனவு காண்பவர்கள் விழித்தெழுந்தவுடன் , தங்கள் கனவுகளில் பொருந்தக்கூடிய ஒரு  வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்ட ஆய்வில் , பெரும்பாலான மக்கள் வெளிர்நிறத்தை(BLACK&WHITE) தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் 25 வயதிற்குட்பட்ட தற்போதைய இளைஞர்கள்  கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கனவு வருவது அரிது என தெரிவிக்கின்றனர். இருப்பினும், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில்தான்  கனவுகளை நிறைய காண்கிறோம் என்று  தெரிவிக்கின்றனர். இந்த வித்தியாசம் வர காரணம்  கருப்பு மற்றும் வெள்ளை  தொலைக்காட்சிகளை இந்த 55 வயதினர் அவர்களின் குழந்தை பருவத்தில் பார்திருந்ததால் ஏற்பட்ட  விளைவு என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த யோசனையை ஒரு பழைய ஆய்வும் ஆதரிக்கிறது, இந்த ஆய்வு கூறுவது என்னவென்றால்  1940 களில் வாழ்ந்த மக்கள் பல வண்ணங்களில் மற்றும்  நிறத்தில் கனவு கண்டிருக்க மாட்டார்கள் என்றும் அவர்களின் கனவு பெரும்பாலும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும்  என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆண்கள் மற்றும் பெண்கள் காணக்கூடிய கனவுகள்

facts about dreams in tamil
ஆண்கள் மற்றும் பெண்கள் காணக்கூடிய கனவுகள் நிறைய வேறுபாடுகளை  கொண்டிருக்கும்  என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பல ஆய்வுகளில், ஆண்கள் பெண்களை விட  பெரும்பாலும் ஆயுதங்கள் மற்றும் போர்கள் பற்றி கனவு காண்கிறார்கள், அதே சமயம் பெண்கள் ஆண்களை விட அதிகமாக ஆடைகளைப் பற்றியும் குறிப்புகளைப் பற்றியும் கனவு காண்கிறார்கள்.
மற்றொரு ஆய்வில், ஆண்களின் கனவுகள் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் பயங்கரமான பேரழிவுகள் மட்டுமே  கொண்டிருக்கினறன, அதே சமயம் பெண்களின் கனவுகள் மிகவும் நீண்டதாக இருக்கும்  எடுத்துகாட்டாக அதிக உரையாடல் போன்றவை காணப்படும் அதாவது அவர்களின் கனவில் அதிக கதாபாத்திரங்களும் இருக்கும். நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் இதை நினைவில்கொள்ளுங்கள் உங்களிடம் ஒரு ஆண் என் கனவில் நீதான் வருகிறாய் என்று கூறினால் அது பொய் என்று அறியவும்.

விலங்குகளுக்கு கனவு வருமா ?

animal sleeping

தூங்கும் நாய் அதன் வாலை அசைக்கும்போது அல்லது தூங்கும் பூனை அதன் பாதங்களை மாற்றும்போது அது கனவு காண்கிறது என்று பலர் நினைக்கிறார்கள். இது உண்மையிலேயே நிகழ்ந்ததா என்பதை உறுதியாகக் கூறுவது கடினம் என்றாலும், பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன மற்றும் மீன் உள்ளிட்ட பெரும்பாலான விலங்குகள் தூக்க நிலைகளில் கனவுக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள், அதாவது அவை உண்மையில் கனவு காண வாய்ப்புள்ளது.

பார்வையற்றவர்களால் கனவு காணமுடியுமா?

blind peoples in tamil
பிறந்ததிலிருந்தே பார்வையற்றவர்களுக்கு கனவு வருமா அல்லது வராதா  என்பது பற்றிய ஒரு ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருந்தனர், அதில் பார்வையற்றவர்கள் தங்கள் கனவுகளில் காட்சி உருவங்களை பார்ததாக குறிப்பிட்டுள்ளார்கள், மேலும் அவர்கள் கண்ட  காட்சியில்  கண் அசைவுகளும் இருந்தன என்று குறிப்பிடுகின்றன. இது அணைவருக்கும் சற்று குழப்பத்தையே ஏற்படுத்தியது எனலாம்

கனவுகளின் உளவியல்(psychological facts about dreams)

dream facts
  • உலக மக்கள் அனைவருக்கும் ஒரு சில கனவுகள் பொதுவாக வரும் குறிப்பாக ஏதோ ஒன்று நம்மை துரத்துவது போலவும் நாம் உயரத்திலிருந்து கீழே விழுவதுபோல், போன்றவற்றை  நம்மில் பலரும் கூட இந்த கனவுகளை கண்டிருக்க வாய்ப்புள்ளது இதற்கு காரணம் நம் முன்னோர்கள் விலங்குகளை வேட்டையாடியும் குகைளில் வசித்தும்வந்தனர் இதன் காரணமாகதான் இந்த கனவுகள் வருகின்றன என குறிப்பிடுகிறார்கள்.
  • நீங்கள் நேரில் கண்ட மனிதர்களை கனவில் காண முடியும் ஆனால் கனவில் கண்ட மனிதர்களை நேரில் காண்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  • நீங்கள் கண்ட கனவுகளில் 90%  காலையில் எழும்பொழுது நினைவில் இருக்காது. உங்களால் ஒரு தூக்கத்தில் 7 முதல் 8 கனவுகளை காணமுடியும்.
  • உண்மையில் கனவு காண்கின்ற நபர்கள் குரட்டை விட மாட்டார்கள் குரட்டை விட்டு தூங்குகின்ற நபர்கள் கனவுகளை காண மாட்டார்கள்.