நம்மால் நம்பவே முடியாத பத்து உண்மைகள் top 10 unbelievable facts in tamil

              top 10 unbelievable facts                

top 10  unbeleivable facts
வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும் நம்பவே முடியாத ஒரு பத்து உண்மைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

1.உலகின் உயரமான மலை

mountain everest

நாம் அணைவரும் உலகின் உயராமான மலைப்பகுதி திபெத் பகுதியில் அமைந்துள்ள இமயமலை(எவரெஸ்டு)  என அறிந்திருப்போம், ஆனால்  உண்மையில் உயரமானமலை  ஹவாய் தீவில் அமைந்துள்ள மோனாகியா மலைத்தொடர் இமயமலையை விட உயரமானதுஎனலாம், இமயமலையின்(எவரெஸ்டு) உயரம் கடல் மட்டத்திலிருந்து 29,035  அடி ஆகும் இந்த மோனாகியா மலைத்தொடர் கடல் மட்டத்திலிருந்து 13,796 அடி இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் அப்படியெனெறால் எவரெஸ்டு தானே உயரமான மலை என, ஆனால் இந்த மோனாகியா மலைதொடர் நீருக்கடியில் 13,000 அடி வரை நீண்டுள்ளது மொத்தமாக இந்த மலைத்தொடரின் மொத்த உயரம் 33,000 அடி ஆகும். நாம் கடல் மட்டதிலிருந்து உயரத்தை கணக்கீடு செய்வதால் எவரெஸ்டு உயரமாக தெரியலாம் ஆனால் உண்மையில் இந்த மோனாகியா மலைத்தொடர் மிகவும் உயரமானவை என்பதை அறிந்துகொள்ளுங்கள். 

2.நிர்வாண படமெடுக்கும் கேமரா

sony camera

1998 -ஆம் ஆண்டு சோனி நிறுவனம் அறிமுகம் செய்த NIGHT VISION CAMERA-கள் யாரும் எதிர்பாராத விதமாக ஆடைகளுக்குள் ஊடுருவி புகைப்படங்களை நிர்வாணமாக காட்டியது. அதுவும் கருப்பு நிற உடை அணிந்து புகைபடம் எடுத்தால்தான் இப்படி தோன்றுகிறது எனவும் கண்டறிந்தன, சோனி தரப்பில் இதற்கான விளக்கம் கேட்டபொழுது அவர்கள் குறிப்பிட்டது அவர்கள் இந்த கேமராக்களை எந்தவித தீய நோக்கங்களுக்காக உருவாக்கவில்லை என்றும் அது ஒரு தொழில்நுட்ப கோளாறு எனவும் அந்த கேமார பற்றிய முழுமையான அறிவு அவற்றை உருவாக்கிய சோனி நிறுவனத்துக்கே தெரியவில்லை எனவும் கூறினர். அதற்குள் அந்த கேமராக்கள் 70,000 யூனிட்டுகளை விற்று தீர்த்தது. இதில் குறிப்பிட தகுந்த விடயம் என்னவென்றால் இந்த நிகழ்விற்கு பிறகே மக்களிடத்தில் சோனி நிறுவனத்தின் கேமராக்கள் பெருமளவில் பேசப்பட்டன.

3.பிரான்சின் வினோத சாலை

farance disappeared raod

பிரான்சு நாட்டில் பார்னாஃப் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த சாலை 3 கிலோ மீட்டர் நீளத்தில் அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு நாளுக்கு இரண்டு முறை மட்டுமே மேலே வரும் மற்ற நேரங்களில் கடலுக்குள் 13 அடி ஆழத்தில் சென்றுவிடும் இந்த சாலையானது 16-ஆம் நூற்றாண்டில் இருந்தே புலக்கத்தில் உள்ளது என குறிப்பிடப்படுகிறது ஆனால் இந்த சாலை பல உயிர்களையும் காவு வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

4.புத்தரின் தலைப்பகுதி

budha

கவுதம புத்தரின் தலையில் காணப்படுவது கிரீடம் அல்ல அவை 108 நத்தைகள் இதற்கான காரணம் புத்தர் தவம் செய்யும்பொழுது கடுமையான வெயிலில் இருந்து அவரை பாதுகாக்க நத்தைகள் புத்தரின் தலையில் சென்றதாம் என கூறப்படுகிறது. இதைதொடர்ந்தே நீங்கள் காணும் அனைத்து படங்கள் சிலைகளிலும்  இந்த தோற்றத்தில்தான் புத்தர் காணப்படுவார்.

 

5.சூப்பர் WOMEN

veronica seider

ஜெர்மனி நாட்டை சேர்ந்த வெரோனிகா சீடர் என்ற பெண்மனி சாதாரண மனிதர்களை விட 20 மடங்கு அதிக பார்வை திறனை கொண்டுள்ளார் இவரால் 1.6 கி.மீ தொலைவில் இருக்கூடிய ஒரு பொருளையோ அல்லது நபரையோ மிகவும் சுலபமாக அடையாளம் காணமுடியும், இது ஒரு கின்னஸ் சாதானையாகவும் பார்க்கபடுகிறது இவர் 2013 ஆம் ஆண்டு தன்னுடைய 62-ஆவது வயதில் காலமாணார். இந்த பெண்மனிதான் இன்றுவரை உலகில் வாழ்ந்த வித்தாயமான சக்தி படைத்த பெண்மனியாகவும் இருந்துள்ளார்.

6.வீட்டுபாடத்தை கண்டறிந்தவர்

roberto nevils

நாம் பள்ளிபருவத்தில் இதை யோசித்திருப்போம் யார்தான் இந்த வீட்டுபாடத்தை கண்டுபிடித்தார் என்று,1905-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டை சேர்ந்த ரொபோர்டோ நெவில்ஸ் என்ற ஆசிரியர் ஒரு மாணவனுக்கு தண்டனையாக முதல்முறையாக உலகிலேயே வீட்டுபாடம் என்ற முறையை அறிமுகபடுத்துகிறார் . அன்றிலிருந்து இன்றுவரை இந்த வீட்டுபாடம் என்ற முறை பின்பற்றப்படுகிறது.

7.ரோபோவுக்கு குடியுரிமை

sophia robot
ssource:economictimes
 

இந்த உலகில் முதன் முறையாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு சவுதி அரேபியாவாகும் இந்த நாடு 2013-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் உருவாக்கபட்ட சோஃபியா என்ற ரோபோவிற்கு குடியுரிமை வழங்கி உலகையே திரும்பி பார்க்க செய்தது.

8.அமெரிக்காவுக்கே தண்ணீ காட்டிய முயல் 

america president rabbit attack
source:CNN.com

1979-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபரான ஜிம்மி கார்டர் ஒரு நாள் காட்டில் தனிமையில் மீன் பிடுக்கும்பொழுது ஒரு காட்டு முயலால் தாக்கபட்டதாக குறிப்பிட்டுள்ளார். எந்த வித தீவிரவாதிகளாலும் செய்ய முடியாத ஒரு செயலை இந்த முயல் செய்தது என்பதும் குறிப்பிடதக்கது.

9.ஆஸ்திரேலியா கண்டம்

australia
 

ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியா கண்டமானது கண்டதட்டு இயக்கம்(TECTONIC MOVEMENT) காரணமாக வடக்கு நோக்கி 7சென்டிமீட்டர் வேகமாக நகர்ந்து வருகிறது. இப்படியே இது நகர்ந்து வந்தால் எதிருகாலத்தில் இது ஆப்பிரிக்க கண்டத்தின் மீது மோதும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

10.நாய்களின் சிறப்பு

dogs
 

மனிதர்களுக்கு எப்படி கைரேகை என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக உள்ளதோ அதுபோல் மனிதர்களின் நண்பன் ஆன நாய்களுக்கு அவற்றின் மூக்கில் காணப்படும் ரேகைகள் ஒவ்வொரு நாய்களுக்கும் தனித்துவமாக இருக்கும்.

 
                                                       நன்றி!