இறந்தவர்களை உயிரோடு கொண்டுவரும் தொழில்நுட்பம் what is cryonics technology in tamil

                         Cryonics Technology explanation

cryonics technology

வணக்கம் நண்பர்களே! இந்த உலகம் கடந்த 50 ஆண்டுகளில் மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது இதற்கு முக்கிய காரணம் தொழில்நுட்பம் எனலாம் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பல்வேறு தொழில்நுட்பங்களை பல நாடுகளும் அறிமுகம் செய்தன இவை மொத்த உலகையே அடுத்த லெவலுக்கு எடுத்துசென்றது, அப்படி உலகையே திரும்பிபார்க்க வைத்த தொழில்நுட்பம்தான் இந்த CRYONICS , இந்த தொழில்நுட்பத்தை வைத்து மனித இறப்புகளை நிறுத்தமுடியுமா என யோசித்தால் முடியும் அதற்குபெயர்தான் CRYONICS TECHNOLOGY அதாவது இறந்தவர்களை உயிரோடு கொண்டுவரும் தொழில்நுட்பம், இந்த தொழில்நுட்பம்  பற்றிய சில ஆச்சரியமான தகவல்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

CRYONICS தொழில்நுட்பம்

cryonics

இந்த கிரையானிக் தொழில்நுட்பம் என்பது இறந்தவர்களை பதப்படுத்தும் ஒரு முறை எனலாம் அதாவது எகிப்திய மம்மிகள் போல், இதற்கு எடுத்துகாட்டாக நீங்கள் ஒரு குளிர்பானம் ஆல்லது ஐஸ்கிரீம் வாங்குகிறீர்கள் என்றால் அது பல நாட்களுக்கு முன்பே உருவாக்கபட்டிருக்கும் ஆனால் அது கெட்டுப்போகாது இதற்கு காரணம் அவற்றை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைப்பதன் மூலம் அதன் ஆயுட்காலம் நீட்டிக்கபடும். இந்த முறையைதான் இந்த கிரையானிக்ஸ் தொழில்நுட்பத்திலும் பயன்படுத்துகிறார்கள்.

இப்படி இந்த கிரையானிக்ஸ் தொழில்நுடபத்தில் இறந்துபோன நபர்களை பதப்படுத்தி அப்படியே வைக்க முடியும் அதாவது இறந்த உடலை மிக குறைவான வெப்பநிலையில் உறைய வைப்பது,இப்படி பதப்படுத்தபட்ட உடலை  எதிர்காலத்தில் உயிரழந்தவர்களை உயிரோடு கொண்டுவரும் தொழில்நுட்பம் முழுமையாக கண்டுபிடிக்கபட்ட பிறகு  மீண்டும் உயிரோடு கொண்டுவரமுடியும்.

கிரையானிக்ஸ் அறிமுகம்

cryogenic

 

இது மறுஜென்மம் போன்று இருக்கலாம் ஆனால் இது அறிவியல்படி சாத்தியமே இந்த கிரையானிக் பற்றிய ஆய்வுகளில் சீனா ,அமெரிக்கா, இங்கிலாந்து பொன்ற நாடுகள் இறங்கியுள்ளன. இதுதான் மருத்துவதுறையின் அடுத்த பரிணாமம் என அனைவராலும் நம்பபடுகிறது . இந்த கிரையானிக்ஸ் தொழில்நுட்பம் முதன் முதலில் 1963-ஆம் ஆண்டு இராபர்ட் எர்டிங்கர் என்பவரல் அறிமுகபடுத்தபட்டது , பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1967-ஆம் ஆண்டு முதன் முதலாக ஒரு இறந்தவரின் உடலை கிரையானிக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் பதப்படுத்தினர் .  இதுவரை 250 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த கிரையானிக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலமாக பதப்படுத்தி வைக்கபட்டுள்ளனர் அதுமட்டுமல்லாமல் 3000 க்கும் மேற்பட்டவர்கள் இதில் முன்பதிவு செய்துவைத்துள்ளனர் . இந்த CRYONICS ஆராய்சிகள் உலகில் 7 இடங்களில் நடைபெற்று வருகிறது . இப்படி உடலை பதப்படுத்த மட்டும் 1.50 கோடி ரூபாய் ஆகுமாம் . இப்படி இவர்களின் உடல் திரவ நைட்ரஜனுக்குள் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும்.
இப்படி பதப்படுத்தபட்ட உடலுகள் உயிர்பெறும்போது கடந்தகால நிகழ்வுகள் மூளையினுள் இருக்குமா என்று கேட்டால் அதற்கு ஆய்வாளர்கள் கூறுவது ஒருவர்  இறந்த பிறகு அவரின் மூளையில் குறிப்பிட்ட ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம் அந்த மூளை கடைசிவரை  நினைவுகளை தக்கைத்து உயிருடன் இருக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த தொழில்நுட்பத்தில் உலகில் தலைசிறந்து விலங்ககூடிய நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த அல்கோர் என்ற நிறுவனம்தான்
இப்படி ஒரு தொழில்நுட்பம் இந்த உலகில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என நினைக்கிரீர்கள் இறப்பு என்பது அனைவருக்கும் சம்மானது அந்த இறப்பையே ஏமாற்றும் அளவிற்கு தற்போதைய தொழில்நுட்பம் உள்ளது. இது ஏற்கொள்ளக்க்கூடியதா அல்லது இயற்கைக்கு மாறானதா என நீங்கள்தான் கூற வேண்டும்
                                                               நன்றி!