மறுஜென்மம் உண்மையா mystery of reincoranation in tamil

        மறுஜென்மம் உண்மையா REICORNATION EXPLANATION

reincornation in tamil
          இந்த உலகில் நாம் அனைவரும் ஓருமுறை தான் பிறந்து வாழ்கிறோம் என நினைத்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் மறுஜென்மம்(reincornation) என்ற ஒன்று இருக்க வாய்ப்புள்ளது என அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர் .  இது நம்பமுடியாமல் இருந்தாலும்  நாம் இறந்த உடன் நம் உடலில் உள்ள ஆன்மா என்பது நம்மை விட்டு செல்கிறது. பிறகு இந்த ஆன்மா வேறொரு உடலில் சென்று அடுத்த ஜென்மத்தை ஆரம்பிக்கும் இந்த நிகழ்வினை மறுஜென்மம் என்று கூறப்படுகிறது.

மறுஜென்மம் பற்றி கருடபுராணம் குறிப்பிடுவது

                 இந்த மறுபிறப்பை பற்றி கருடபுராணம் கூறுவது  என்னவென்றால்  இந்த மறுபிறப்பு என்பது நாம் செய்த கர்ம வினைகளை சுமந்தே செல்லுமாம். இந்த ஜென்மத்தின் பல  கர்மங்கள் முடித்த பிறகே அடுத்த ஜென்மத்தை அடையும் என்று கருட புராணம் கூறுகிறது.
  முனிவர் மற்றும் பல யோகிகள் தவம் புரிந்து மறுஜென்மம் எடுத்தனர் என்றும் மற்றும் கிருஷ்ணரின் எடுத்த  பல அவதாரங்களில்  இந்த மறுஜென்மம் பற்றி கூறப்படுகிறது. கிருஷ்ண பரமாத்வாவிற்கு 7 பிறவிகள் என்று நாம் பேச்சு வழக்கில் கூறுவோம்  இதைதான்  மறுஜென்மம் என்று வரையறுக்க படுகிறது.

மறுஜென்மமும் ஆன்மாவும்

recornation
                     நம் உடலில் ஆன்மா ஒன்று இருக்கிறதா இல்லையா என்பதே ஒரு வாதத்திற்குரிய விடயமாகவே உள்ளது ,  நமது ஆன்மாக்களுக்கு அழிவு என்பதே  இல்லை என்று ஒரு சிலரால் நம்படுகிறது , ஆனால் நாம்  இறந்த பிறகு நம் உடலில் உள்ள ஆன்மா என்னவாகிறது எங்கு செல்கிறது என்று எவராலும் கூறமுடியவில்லை .
                               நீங்கள் தற்போது வாழ்கின்ற  வாழ்க்கை கூட முன்ஜென்ம வாழ்க்கையின் மீதம் என்று கூறப்படுகிறது.

கனவும் மறுஜென்மமும்

reincornation
                   இந்த மறுஜென்ம் என்பது கனவுகளில் வர வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இது சிறுகுழந்தைகளுக்கு நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். நாம் கனவில் திரும்ப திரும்ப ஒரு நிகழ்வு வந்தால் அதனை மறுஜென்மமுடன்  தொடர்பு இருக்குமாம்.
                     சில சமயங்களில் நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வு ஏற்கனவே நடந்ததாக தோன்றும். சில வாசத்தை நுககரும் பொழுது  , நிறத்தை காணும்போது பல நினைவுகள் தோன்றவும் இதற்கு மறுஜென்மமாக கூட வாய்பிருக்கலாம் என்று கூறினாலும் அறிவியலாளர்கள் இதனை நரம்பியல் கோளாறு மற்றும் தேஜாவூ என்றும் கூறுகிறார்கள். இதனை நம்பினாலும் பலரும் இந்த நிகழ்வுகள் உண்மையான மறுஜென்மம் என்று கூறுகிறார்கள்
recornation
          இந்த மறுஜென்மம்  இருக்க வாய்ப்பிருந்தால்  நாம் புதிதாக ஒரு நபரை பார்த்தால் அந்த நபர்  ஏற்கனவே அவர் நமக்கு நெருக்கமானவராக தெரியும் அவருடன் பல காலம் பேசியது பலகியது போல் தோன்றினால் இதை மறுஜென்மம் என்று கூறுகிறார்கள்.  இதனை பல பேர் அனுபவித்திருக்கலாம்
            பல்வேறு மதங்களும் இந்த மறுஜென்மத்தை ஆதரிகின்றனர். இந்த மறுஜென்மம் என்பது அதிகம் குழந்தை பருவத்திலே இருக்கும் குழந்தைகள் வளர வளர அதனை மறந்துவிடுவார்கள்.

மறுஜென்ம ஆய்வுகள்

reincornation
           முன்ஜென்ம ஆய்வுகளை ஒரு கனடா  ஆய்வாளர் மேற்கொள்ளும்போது 2 முதல் 3 வயது குழந்தைகளுக்கு தான் மறுஜென்ம நிகழ்வு தோன்றுவதாக கூறுகிறார்  அவர் ஆய்வு செய்த லெபனானில் உள்ள ஒரு குழந்தை தன் பெற்றோரிடம்  நான் ஏன் இங்கு உள்ளேன் ,என் வீடு பெரியதாக இருக்கும் இந்த வீடு ஏன் சிறியதாக உள்ளது என்றும் கூறியுள்ளது இந்த குழந்தை லேலா லேலா என்று கூறி வந்துள்ளது இது தனக்கு சம்மந்தம் இல்லாதவாறு பேசி உள்ளது பிறகு மறுஜென்மம் பற்றிய உண்மைகளை கூறியதாகவும் ஆய்வில் கூறுகிறார்கள்.
                     முன்ஜென்ம ஆய்வாளர் மச்சம், சில தழும்புகள்,பயம் குணாதிசியமும்  மறுஜென்மத்திலும் தொடருமாம்.
reincornation
                       பெராரி கம்பெனி ஓனர் 1988ல் இறக்கிறார் இவரின் முக அமைப்பிலேயே 1988ல் ஜெர்மனி கால்பந்து வீரர் மீசட் ஓசல் பிறக்கிறார் . இவர்களின் பிறப்பு இறப்புக்கு இடையில் குறைந்த காலஇடைவெளியே இருந்தது இதனை முன்ஜென்முடன் தொடர்ப்பு படுத்தி கூறுகிறது.
                         மறுஜென்மம் நம்பமுடியாமல் இருந்தாலும் பல ஆய்வுகள் நம்ப கூடிய அளவில் உள்ளது.இந்த மறுஜென்மம் அறிவியலுக்கு அப்பார்பட்டது. இந்தியாவில் ஒரு பெண் குழந்தை மறுஜென்ம பற்றி கூறியிருகிறது  அதில் இந்த குழந்தை 4 வயது வரை பேசவில்லை பிறகு பேசிய வார்த்தைகள் அனைத்தும் மறுஜென்மம் பற்றியே கூறியுள்ளது அந்த குழந்தை தான் மதுரா ஊரில் உள்ளதாகும் தன் கணவர் பற்றியும் கேதார்நாத் என்ற அவரின் பெயரையும் தெளிவாக அனைத்தையும் கூறியுள்ளது  அதன் பிறகு இது உண்மையா என்று ஆராய்ச்சி செய்த போது அந்த குழந்தை கூறிய அனைத்தும் உண்மையானதாக இருந்துள்ளது. இது அனைவருக்கும் பெரிய ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது .இதனை ஆராய்ச்சி செய்ய காந்தியடிகளும் உண்மையா என ஆராய ஒரு குழு வைத்து ஆராய்ந்தார் ஆனால் இது உண்மை என கண்டுபிடிக்கப்பட்டது.
reincornation

பஜித்பூரில் வாழ்ந்த ஒரு தபால் காரரின்  மகன் , தனது ஊர் இதுவல்ல, சிட்டகாங் கில் உள்ள பஜில் பூர்தான் என்னுடைய ஊர் என்றும்  , தனக்கு திருமணமாகி மூன்று புதல்வர்கள் மற்றும் நான்கு புதல்விகள் உள்ளதாகவும் கூறுகிறான்  தனது ஊருக்கு  செல்ல வக்ஸம் என்ற  ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும் என்றும்  ஊருக்கு அருகே கலிபாரி என்ற இடம் உள்ளது.அங்கே ஸர்வானந்தர் என்ற மகான் முக்தி அடைந்ததாகவும் , அங்குள்ள ஆலமரத்தின் கீழே சிலையில்லாத நிலையில் , பூஜை மற்றும் சடங்குகள் நடைபெறுவதாகவும் கூறி பெற்றோரையும் , மற்றோரையும் தலைசுற்றி விழாத குறையாக கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டான்.அங்கு சென்று விசாரித்தபோது தான் தெரிகிறது அக்குழந்தை அவ்வூரில் வாழ்ந்து இறந்தவரின் மறு பிறவி என்று இந்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

                     இவ்வாறு பல ஆதாரம் இருந்தாலும் அறிவியலாளர்களால் இன்றுவரை முழுமையாக கண்டுபிடிக்க  முடியவில்லை  அதனால் இந்த அனைத்து மறுஜென்ம உண்மைகளையும் நம்மால் நம்ப முடியவில்லை  இதனை பற்றிய பல ஆய்வுகள்  நடந்தாலும் இதனை அறிவியல் பூர்வமாக  யாரும் இன்றுவரை நிரூபிக்க முடியவில்லை.
                                                                               நன்றி!