அனைவரையும் கவர்வது எப்படி how to attract people in tamil

how to attract people
source:pixabay

இந்த பதிவு நீங்கள் மற்றவர்களிடமிருந்து எவ்வாறு உங்கள்மீது ஈர்க்கப்படுவதற்கான (how to attract people) 10 வழிமுறைகள் பற்றி காண்போம். நீங்கள் ஆண்களோ அல்லது பெண்களோ அல்லது எந்த வித வயது உடையவரோ இது அனைவருக்குமே தேவைப்படும் பதிவாகும்.

உங்கள் காதலியோ அல்லது காதலனோ மனைவியோ, நண்பரோ பதவியில் உள்ளவரோ எவராக இர்ருந்தாலும் உங்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்தாலோ அல்லது ஈர்க்க்ப்படாமல் இருந்தால் நீங்கள் அவர்களை திரும்பிப் பார்க்கச் செய்வது தான் ஈர்த்தல் என்பதாகும். இது நம் முகத்தில் உள்ள அழகு பற்றி சொல்வதில்லை இது அவர்களின் ஆளுமை(personality) பற்றி சொல்வதாகும். உதாரணத்துக்கு ஒரு கூட்டம் இருக்கும் இடத்தில் ஒருவர் நடந்து வந்தால் அவரை அந்த கூட்டத்தில் உள்ள அனைவரும் அந்த ஒரு நபரை திரும்பி பார்த்தால் அது தான் ஈர்ப்பு attraction ஆகும்.

  1. நீங்கள் எப்போதும் அடுத்தவர்களுக்காக வாழாதீர்கள் உங்களுக்கு என்ன தோன்றுதோ அதை செய்துவிட்டு உங்க வழியில் நடக்க வேண்டும். மற்றவர்கள் இதே செய்தால் என்ன சொல்வார்கள் என்று எண்ணி வாழக்கூடாது. உதாரணத்துக்கு நீங்கள் போடும் உடையோ அல்லது அணிகலணோ மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நீங்கள் மாறக்கூடாது உங்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும். ( சொந்தமாக யோசிக்க வேண்டும். இப்படி செய்யும்போது அனைவரையும் உங்கள் மிது attraction-ஐ ஏற்படுத்தும்.

2.நீங்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றால் உங்எளுக்கென்று ஒரு வளர்ப்பு பிராணியோ அல்லது செடி வளர்ப்பதாலோ உங்களின் பொறுப்புணர்ச்சி அதிகமாகும். எவ்வாறு ஒரு வளர்ப்பு பிராணியை வளர்ப்பதால் பொறுப்புணர்ச்சி அதிகமாகும் என்றால் அதற்கு சாப்பாடு வைத்து அதனை பாதுகாப்பதன் மூலம் உங்கள் மீதே ஒரு நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்ச்சி வரும். இவ்வாறு செய்வது மற்றவர்களை ஈர்க்கும்படி செய்யும்.

தொடர்புடையவை: காதல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

3. மக்களிடம் உங்களின் hobby என்னவென்று கேட்டால் பலரும் கூறுவது சினமா பார்ப்பது , இவ்வாறு கூறுவது மற்றவர்களுக்கு ஒரு ஈர்ப்பை தராது நீங்கள் மற்றவர்களிடமிருந்து எவ்வளவு தனிதன்மையாக உள்ளீர்களோ அப்போதுதான் மற்றவர்களை விட சிறப்பாக தெரிவீர்கள். உதாரணத்துக்கு ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்டால் அனைவரும் கூறும் ஒரே பதிலை விட நீங்கள் தனித்தன்மையாக யோசித்தால் அதுதான் உங்களுக்கு வெற்றியை தரும். இவ்வாறு செய்வதன் மீலம் ஈர்க்கப்படுவீர்கள். உங்களுக்கென்று ஒரு hobby வைத்துக்கொள்ளுங்கள். புத்தகம் படிப்பது, பாடல் பாடுவது, நடனம் ஆடுவது.

4. நீங்கள் பயணம் செய்ய வேண்டும் உலகை உங்களால் எவ்வளவு தூரம் சுற்றிப்பார்க்க முடியுமோ அதன் அளவிற்கு பயணம் செய்ய வேண்டும். ஒரே இடத்தில் இல்லாமல் நாம் பயணம் செய்வதன் மூலம் பலதரப்பட்ட வாழ்க்கைமுறை உணவுமுறை இதுபோல் பல விசயங்களை கற்றுகொள்ளலாம் இவ்வாறு நீங்கள் பயணம் செய்து பலவாழ்க்கை முறையை கற்றுகொள்வதால் நமக்கு பல அனுபவம் கிடைப்பதால் மற்றவர்களால் attract ஈர்க்கப்படுவீர்.

5. அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதிகம் ஆண்கள் பேசுவது பெண்களுக்கு வெறுப்பை தரும். அவர்களுக்கு மட்டுமின்றி அதிகம் பேசுவது உங்கள் மீதுள்ள ஈர்ப்பை குறைக்கும். அதிகம் பேசுவதை கண்டிப்பா தவிர்க்க வேண்டும்.

6. நீங்கள் மற்றவர்களிடம் வாட்ஸ் ஆப் போன்ற செயலில் பேசும்போது அதிகம் எம்ஓஜி பயன்படுத்துவதை தவிருங்கள். நீங்கள் எப்போதும் பயன்படுத்தினால் நீங்கள் எப்போதவது சீரியஸ்யாக போசினால் கூட அதையும் சாதரணமாக எடுத்து கொள்வர். எப்போஓதும் எம்ஓஜி😊😅 பயன்படுத்துவதால் அதற்கு மதிப்பு இருப்பதில்லை. நீங்கள் எப்போதாவது பயன்படுத்தும்ப்போது மற்றவர்க்கு உங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும்.

7. உங்களுக்கென்று தனி நடை,உடை,சிரிப்பு பானி போன்றவற்றை வைத்து கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்கள் நடை உடை பானி சரியில்லை என்று சொன்னாலும் அதை மாற்றிவிடக்கூடாது. உங்களுக்கு எது வருகிறதோ அதையே செய்யுங்கள். மற்றவர்கள் உங்கள் சிரிப்பு சரியில்லை என்று எது சொன்னாலும் கேட்காமல் நீங்கள் நினைப்பதை செய்வது மற்றவர்களிடமிருந்து தனித்தன்மையை தரும். குறிப்பாக சினிமாவில் இருப்பவர் போல் நடப்பது , சிரிப்பது உங்களின் தனித்தன்மையை இழக்க நேரிடும்.

8. நீங்கள் மற்றவர்களுக்கு மரியாதை செலுத்தவதை தவரவக்கூடாது. யாராக இருந்தாலும் பெரியவரோ சிறியவரோ தாழ்ந்தவரோ என அனைவரைக்கும் மதிப்பு அளிக்கவேண்டும். குறிப்பாக ஏழை பணக்காரன் , இவர்கள் பணம் இல்லாதவர் இவர்கள் பணம் உள்ளவர்கள் என மதிப்பிட்டு மரியாதை செலுத்தக்கூடாது. நீங்கள் எவ்வாறு உங்கள் தந்தை ,பதவியில் உள்ளவர்க்கு கொடுக்கும் மரியாதை போல மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.அனைவரையும் மதித்து செயல்படும்போது உங்களின் மீது ஆர்வம் மற்றவர்களுக்கு அதிகமாகும்.

9. உங்களிடம் யாராவது ரகசியம் சொன்னால் அதை உங்களால் முடிந்த அளவிற்கு காப்பாற்ற வேண்டும்.உங்களால் முடிந்த அளவிற்கு ரகசியமாக வைத்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு ரகசியமாக வைத்து கொள்கிறீர்களோ அதன் அளவிற்கு அவருக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்படும்.

10. நீங்கள் அதிக கஷ்டபட்டு முன்னேறி வந்திருந்தால் உங்கள் வளர்ச்சிக்கு பிறகு நீங்கள் பட்ட துயரத்தை சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது . இவ்வாறு சொல்வது உங்கள் மதிப்பை குறைத்துவிடும். உங்களின் கஷ்டத்தை சொல்லாமல இருப்பதே மற்றவரை ஈர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *