வணக்கம் இந்த பதிவில் திருமணமான பெண்கள் அன்றைய காலம் முதல் தற்போதுவரை பின்பற்றக்கூடிய ஒரு முறை என்னவென்றால் கட்டை விரலுக்கு அடுத்த படியாக இருக்கூடிய விரலில் மெட்டி அணிவது எனலாம் உண்மையில் அவர்கள் ஏன் மெட்டி அணிகிறார்கள் இதற்கு பின்னால் இருக்கூடிய அறிவியல் காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெளிவாக காணலாம்.
முதல் காரணம்
திருமணமானவர்கள் மெட்டி அணிவதற்கு முக்கிய மற்றும் காரணமாக கூறப்படுவது பெண்களின் கால் கட்டை விரலுக்கு அடுத்தபடியாக இருக்கும் விரலின் நரம்புகளானநு பெண்களின் கருப்பையுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் திருமணமான பெண்கள் மெட்டி அணியும்போது கால்களில் இருக்கும் நரம்புகளால் உந்துதல் ஏற்பட்டு கருப்பையில் ஹார்மோன்களை தூண்டும்.
இரண்டாவது காரணம்
இந்த மெட்டி அணிய மற்றொரு காரணமாக சொல்லபடுவது பெண்களின் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதற்காக கால்விரல்களில் மெட்டி அணிவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, இதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், ஏனெனில் இரண்டாவது கால்விரலில் சிறிது அழுத்தம் இருந்தால் கருப்பை ஆரோக்கியமானதாக இருக்கும் உறுதி செய்யப்படுகிறது.
தொடர்புடையவை : தமிழரின் பண்பாடும் அறிவியலும்
மெட்டி அணிய மூன்றாவது காரணம்
சில கலாச்சாரங்கள் இந்த மெட்டி அணிவது என்பது இரண்டாவது கால்விரலில் உணரப்படும் அழுத்தம் காரணமாக உடலுறவின் போது வலியைக் குறைக்க உதவுகிறது என்றும் கூறுகின்றன.
மெட்டி எதற்காக வெள்ளியில் செய்யப்படுகிறது
வெள்ளி ஒரு நல்ல கடத்தி என்பது நாம் அறிந்தது, எனவே இது ஒரு பெண்ணின் உடலில் இருந்து வெளிவரக்கூடிய எதிர்மறையான சக்திகளை இது வெளியேற்றும் என்று நம்பபடுகிறது. வெள்ளியால் ஆன கால்விரல் மோதிரங்களை அணிவது திருமணமான பெண்களில் பாலியல் ஆசைகளைத் தூண்டுவதாக அறியப்படுகிறது.
மெட்டி வாங்கும் முன் கவனிக்கவேண்டியவை
நீங்கள் மெட்டி வாங்குகிறீர்கள் அல்லது உங்களின் வாழ்க்கை துணைக்கு வாங்குகிறீர்கள் என்றால் நேரில் சென்று வாங்குவது மிக முக்கியம் இந்த மெட்டி என்பது உங்களின் கால்விரலுக்கு சரியாக பொருந்த வேண்டும் மிக அழுத்தமாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கூடாது . ஏனெனில் இதனை நீங்கள் கால்களில் அணிவதால் அதன் காரணமாக காயங்கள் ஏற்பட்டு தொற்று ஏற்படவும் வாயப்புள்ளது எனவே மெட்டி வாங்கும்பொழுது ஒரு முறை அதனை உங்கள் காலுக்கு பொருத்தமாக உள்ளதா என்பதை உறுதிபடுத்திகொள்ளுங்கள்.
referral resource:timesofindia