ஐயப்பனுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்

ஐயப்பன் தோற்றம்

தேவர்களுக்கும் மகிஷா என்ற அரக்கிக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் தேவர்கள் ஒன்று கூடி சிவனிடமும் விஷ்ணு இடமும் முறையிட்டனர். இதனால் விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்தார். விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன்.

ஐயப்பன் பெயர் தோன்ற காரணம்

sabarimalai ayyappan history tamil

பந்தள ராஜா சேகர் பம்பாய் அருகே மணிகண்டனை கண்டெடுத்தார். பந்தள ராஜ்யத்தில் பட்டத்து இளவரசராக வளர்க்கப்பட்டார். பந்தள ராஜா மனைவிக்கு வலி ஏற்பட்டதால் புலிப்பால் வேண்டி காட்டுக்கு அனுப்பப்பட்டார் மணிகண்டன், மணிகண்டனை காட்டிற்கு அனுப்ப அங்கிருந்தவர்களின் சூழ்ச்சி இது. ஆனால் மணிகண்டன் திரும்ப வர மாட்டார் என எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மணிகண்டன் புலியின் மேல் அமர்ந்து பந்தள ராஜ்ஜியத்தில் நுழைந்தார். அப்போது அனைவருக்கும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது மணிகண்டன் சாதாரண மனிதன் அல்ல கடவுள் ஐயப்பன் என்று.

பந்தள ராஜா குடும்பம்

பந்தள ராஜா குடும்பம் தான் ஐயப்பனை எடுத்து வளர்த்த குடும்பம். இப்ப ஐயப்பன் சன்னிதானத்தில் வீடியோ புகைப்படம் எடுக்க கேரளா அரசாங்கம் அனுமதி தருதோ இல்லையோ பந்தளராஜா குடும்பத்திடம் அனுமதி பெற வேண்டும் இல்லையென்றால் வீடியோ புகைப்படம் எடுக்க முடியாது.

இந்த பந்தளராஜ குடும்ப நபர்கள் எங்க இருந்தாலும் உத்திர நட்சத்திரம் ஐயப்பன் பிறந்தநாள் அன்று ஒன்று கூடுவார்கள்.

பந்தள ராஜா குடும்பத்திற்கு குலதெய்வம் மதுரை மீனாட்சி அம்மன்

பந்தள ராஜா அரண்மனை

இந்த பந்தள ராஜா அரண்மனையை சுற்றி மூன்று ஆறுகள் ஓடுகிறது இதனால் இந்த அரண்மனையை எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியாது.

இந்த பந்தள ராஜா அரண்மனைக்குள் ஓலைச்சுவடிகளும் ஐயப்பன் நகைகளும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகளின் ரகசியம்

இந்த பந்தள ராஜா அரண்மனை இருக்கும் ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்ய அரசாங்கம் பந்தள குடும்பத்திடம் ஒப்புதல் கேட்டும் அதற்கு பந்தள குடும்பம் மறுப்பு தெரிவிச்சிருக்காங்க.

இந்த ஓலைச்சுவடுகளை ஆராய்ச்சி செய்வதால் பழமை கெட்டுவிடும் என்ற காரணத்திற்காக மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள் பந்தள குடும்பம்

இந்த ஓலைச்சுவடிகள் அனைத்தும் ஐயப்பன் கல்வி கற்க பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த ஓலைச்சுவடிகளில் முக்கிய அம்சம் என்னவென்றால் ஓலைச்சுவடியில் இருக்கும் எழுத்துக்கள் பெரும்பாலும் தமிழ் எழுத்துக்களாக இருக்கிறது.

பந்தள குடும்பத்தின் வரமா சாபமா

ஐயப்பன் சன்னிதானத்தில் என்ன ஒரு நல்லது கெட்டது நடந்தாலும் அதே இது பந்தள குடும்பத்திலும் நடக்கும்.

ஜனவரி 14, 2011 அன்று 109 பக்தர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பந்தள குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இது அனைவருக்கும் ஒரு வியப்பாக இருந்தது.

ஐயப்பன் கோவிலின் சாவி

ஐயப்பன் சன்னிதானத்தில் பூஜை முடிந்ததும் கோவிலின் சாவி பந்தள ராஜா அரண்மனையில் ஒப்படைக்கப்படும் ஐயப்பனின் நகைகள் ஓலைச்சுவடிகள் அனைத்தும் பந்தளராஜா அரண்மனையில் இருக்கும்.

ஐயப்பன் சன்னிதானம் அனைத்து கட்டுப்பாடுகளும் பந்தளராஜா அரண்மனையை சாரும்.

சைவமும் வைணவமும் இணைந்த தருணம்

சைவ மதத்தின் தெய்வமான சிவபெருமானுக்கும், வைணவ மதத்தின் தெய்வமான விஷ்ணுக்கும் பிறந்த ஐயப்பன் அமைதியின் சொரூபமாக காட்சியளித்தார்.

இரு மதத்தின் போரை தடுத்த ஒரே தெய்வம் ஐயப்பன்.

ஐயப்பனின் உண்மையான சிலை எது..?

ஐயப்பனின் உண்மையான சிலை நவபாசனத்தில் ஆனது அல்லது மரகத கல்லால் ஆனது என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற ஐயப்பனின் வரலாறும் அவரின் தோற்றமும் கேட்கும் அனைவருக்கும் வியப்பும் ஆச்சரியமும் இன்னும் பல சுவாரசியமான புதிர்களும் ஐயப்பன் மீது ஆர்வத்தை தூண்டுகிறது.

Related: ராவணன் ஒரு அரக்கணா