annunaaki mystery in tamil

அனுனாக்கி பற்றிய உண்மைகள் annunaaki mystery in tamil

அனுனாக்கி என்பது இன்றும் பலரால் அறியப்படமுடியாத குழப்பமான ஒன்றாகவே கருதபட்டுவருகிறது. இவர்களை பற்றிய பல கருத்துகள் மக்களிடைய பேசப்பட்டு வந்தாலும் ஒரு தெளிவான தகவல்கள் என்பது எங்கு காணபடவில்லை. அன்னுநாக்கிகளை பலரும் கடவுள் என்றும் இவர்கள் தான் மனிதர்களை படித்தவர்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த அன்னுநாக்கிகள் சுமேரிய நாகரிகத்தை சேர்ந்தவர்கள் என அறியபடுகிறது இந்த சுமேரிய நாகரிகத்தில் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் முதலில் எப்படி தோன்றினார்கள் என்ற பல செய்திகளையும் கூறியுள்ளனர். இந்த சுமேரியர்கள் மனிதர்களை தங்கள் டிஎன்ஐஏவிலிருந்து உருவாக்கியுள்ளார்கள் என்பதை பற்றியும் கூறியுள்ளதாக கருதப்படுகிறார்கள் இவ்வாறு பல மர்மங்களை கொண்டவர்கள் தான் அன்னுநாக்கி இவர்களை பற்றி இப்பதிவில் தெளிவாக காண்போம்.

அன்னுநாக்கி எங்கிருந்து வந்தார்கள்
annunaaki mystery in tamil

இந்த சுமேரியர்கள் தாங்கள் எப்படி உருவானார்கள் என்றும் சூரிய குடும்பம் எவ்வாறு உருவானது என்றும் பல மர்மமான விசயங்களை கூறியுள்ளனர். இவர்கள் நிப்ரு என்ற கிரகத்தில் இருந்து தங்கம் எடுப்பதற்காக பூமிக்கு வந்தவர்கள் என்றும் 3000 வருடத்திற்கு ஒருமுறை மட்டும நமது பூமிக்கு அருகில் இந்த நிப்ரு கிரகம் வரும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு தான் 5000 வருடத்திற்கு முன்பு 7 பேர் கொண்ட குழு பூமிக்கு வந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் தங்கம் எடுக்க வந்தார்கள் என்றும் அறியப்படுகிறது இவர்கள் தான் ஏலியன் என்றும் சிலர் கூறுகிறார்கள் இவர்களை தான் அன்னுநாக்கி என்று கூறுகிறார்கள். இந்த அன்னுநாக்கி வருகையில் மனிதர்கள் காட்டுமிரான்டியாகவும் ஒரு மிருகம் போலவும் காட்டில் வாழ்ந்தான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் தான் உலகை சூரிய கதிரிலிருந்து காக்க ஓசோன் படலத்தை உருவாக்கினார்கள் இந்த ஓசோன்படலம் தங்கத்தால் உருவாக்கினார்கள் என்றும் அந்த தங்கம் நம்மால் பார்க்க முடியாது என்றும் எழுதிவைக்கப்பட்டுள்ளது. இந்த 7 பேர் சுமேயரிய மொழியை பயன்படுத்தினார்கள் என்றம் அறியப்படுகிறது.

மனிதனையை உருவாக்கிய அன்னுநாக்கி

இந்த அன்னுநாக்கி தான் காட்டில் இருந்த மனிதர்ளை தனது டிஎன்ஏ வைத்து முழு மனிதனாக மாற்றினார்கள் என்றும் கூறுகிறார்கள்.இந்த அன்னுநாக்கி தான் தங்களுக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொள்ள வண்டும் என்று ஒரு சமூகத்தை உருவாக்கி அதன் பிறகு பல படைப்புகளை உருவாக்கினார்கள் என கூறப்படுகிறது. இப்படி இவர்களால் உருவாக்கிய மனிதர்களை தங்களுக்கு வேலை செய்ய அடிமையாக வைத்து கொண்டதாகவும் அறியப்படுகிறது. இதனால் தான் இவர்கள் கடவுள் என்றும் கூறுகிறார்கள் இவர்கள் 5 அறிவு உள்ள மனிதர்களை இவர்களின் டிஎன்ஏவ்வால் 6அறிவு உள்ள மனிதராக மாற்றினார். மனிதர்கள் அன்னுநாக்கிகு வேலை செய்யும் ஒரு அடிமையாக இருந்தார்கள் என்பதுதான் தரவுகள் குறிப்பிடுகின்றன. பிறகு அன்னுநாக்கிகள் தங்களுடைய கிரகத்திற்கே சென்றதாகவும் இவர்களால் உருவாக்கப்பட்ட மனிதர்களை பூமியை ஆளட்டும் என்று விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சுமேரிய நாகரிகத்தில் தற்போது துனை கோளாக உள்ள புளுட்டோவை சேர்த்து மொத்தம் 9 கோள்கள் என்று எழுதிவைத்துள்ளனர், இவ்வாறு 9 கோள் இருப்பதை 5000 வருடத்திற்கு முன்பே கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் கல்வெட்டுகளில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அன்னுநாக்கி தங்கத்தை எடுக்க தான் வந்திருப்பார்கள் என்பதற்கு சான்றாக கிறித்து பிறப்பதற்கு முன்பே பல தங்கச் சுரங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்களால் தங்கம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏன் அன்னுநாக்கி பூமிக்கு வந்தார்கள் எனறால் அவர்களுக்கு அதிகளவு தங்கம் தேவைபட்டதாகவும் அதற்காகதான் பூமிக்கு வந்ததாக கூறுகிறார்கள். இந்த தங்கம் வானில் உள்ள பல கதிர்களை தாங்கக்கூடியது இன்றும் இதனை பயன்படுத்தி தான் நாம் விண்வெளியில் செல்லும் விண்கலம் என அனைத்திற்கும் தங்கம் தேவை என்பதை அப்போதே அறிந்திருந்தார்கள் அன்னுநாக்கி , தங்கம் விண்வெளியில் மிக முக்கியம் என்பதை 5000 வருடத்திற்கு முன்ப அறிந்திருந்தார்கள்.

பெரு நாட்டில் உள்ள பெரிய நாஸ்கா கோடுகள் இவர்களால் வரையப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதாவது இந்த நாஸ்கா கோடுகள் சாதரணமாக இல்லமால் மிகப்பெரியதாக வரையப்பபடுள்ளது. அதாவது இந்த நாஸ்கா கோடுகள் ஆயிரம் கிலோமீட்டர் அளவில் பெரிய பரப்பில் வரையப்பட்டவையாக உள்ளது.இதனை விமானத்திலிருந்து பாத்தால் மட்டும ஒரு பெரிய உருவமாக தெரியும்.இதனை அன்னுநாக்கி தான் வரைந்திருப்பார்கள் என்கிறார்கள்.

இந்த அனுனாக்கிகள் உருவளவில் மனிதர்களைவிட பெரிய உடம்பு கொண்ட இராட்சதர்களையும் உருவாக்கினார்கள் என மக்களால் நம்பபடுகிறது. இந்த இராட்சதர்களையும் அவர்கள் தங்களின் அடிமைகளாக வைத்திருந்தார்கள் அப்படியென்றால் அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா என்று பார்க்கும்போது 1950-ஆம் ஆண்டு துருக்கியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும்பொழுது ஒரு மிகப்பெரிய எலும்பை கண்டறிந்தனர் இதனை மக்கள் அனைவரும் மிகப்பெரிய இராட்சதர்களின் தொடை எலும்பு என நம்பினர். இதனை தொடர்ந்து ஒரு தனிதீவில் ஒரு மிகப்பெரிய மனிதனின் கால்தடம் இருப்பதை ஒரு ஆய்வுகட்டுரையுடன் கூடிய ஒரு புகைப்படமும் வெளியானது.

நிறைய அறிவில் ஆய்வாளர்கள் ஏலியன்கள் இருப்பார்கள் என்பதை சொல்கிறார்கள் இந்த அன்னுநாக்கி கூட ஏயன்களாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இந்த சுமேரிய நாகரிகத்தில் பல எழுத்துகள் மற்றும் வார்த்தைகள் நம் தமிழ்மொழியை ஒத்திருப்பதாக கூறுகிறார்கள். இவர்களை பற்றி பல கருத்துகள் நாம் தற்போது உள்ள பல கண்டுபிடிப்புகளை அப்போதே அறிந்திருந்தார்கள் அன்னுநாக்கி.

அனுனாக்கி கட்டுகதையா

இந்த அனுனாக்கி பற்றிய அனைத்து கருத்துகளையும்முதன் முதலில் சக்காரிய சிக்சின் என்பவர்தான் 12-ஆம் உலகம் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.பெருலினில் ஒரு அருங்காட்சயகத்தில் இருக்கும் ஒரு கல்வெட்டில் இந்த அனுனாக்கி பற்றிய குறிப்புகள் இருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அதன் பிறகு 20120ஆம் ஆண்டு இந்த நிபுரீ என்ற சொல்லபடக்கூடிய அனுனாக்கிகள் இருக்கும் கிரகம் பூமிக்கு அருகாமையில் வந்து பூமியை அழிக்கும் என மக்களால் பேசபட்டது இதற்கு பதிலளிக்கும் வகையில் நாசா தனது அறிக்கையை வெளியிட்து அந்த அறிக்கையில் நாசா இதுவரை கண்டுபிடித்த கிரகங்களில் நிபுரூ என்ற ஒரு கிரகம் இல்லவே இல்லைஅதுபோல 2012-ஆம் ஆண்டு எந்த கிரகமும் பூமிக்கு அருகில் வரவில்லை என ஆணிதரமாக கூறி அந்தகட்டுகதையை முடித்துவைத்தது. அதன்பிறகு மிகப்பெரிய இராட்சதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரமாக மிகப்பெரிய எலும்புகள் கிடைத்தன என்பதை நாம் பார்த்தோம் இந்த எலும்புகள் என்பவை உண்மையானவை அல்லது இதனை ஜோ டெய்லர் என்பவர் உருவாக்கிய போலி எலும்புகள் ஆகும். எனவே இதில் சொல்லபட்ட அனைத்து கருத்துகளும் அவருடைய புத்தகத்தில் இருந்து மட்டுமே குறிப்பிடபட்டுள்ளதால் இதன் உண்மைதன்மை என்ன என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *