cumin seeds benefits in tamil

சீரகம் மருத்துவ பயன்கள் cumin seeds benefits in tamil

சீரகம்

நம் அனைவரின் சமையல் அறையிலும் இருக்கக்கூடிய, ஒரு அற்புதமான பொருள் சீரகம். சீர்கூட்டல் அகம். அகத்தில் இருக்கக்கூடிய, பல பிரச்சனைகளை சீர் செய்ய வல்லது, என்கிறதுனாலதான், இதனை சீரகம், அப்படின்னு சொல்றாங்க. இந்த சீரகத்தை, சமையல்ல, நம்ம அனைவரின் வீடுகளிலுமே, பயன்படுத்திட்டு வர்றோம் ஆனால், இந்த சீரகத்தை, நீரில் போட்டு, கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி, குடித்து வர, மிகவும் நல்லது என, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அதிலும், இந்த சீரகத் தண்ணீரை, காலை வெறும் வயிற்றில் குடித்து வர, ரெட்டிப்பான நன்மையை பெற முடியும். அப்படி இந்த சீரகத் தண்ணீரை, குடித்து வர, நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? குணமாகக் கூடிய நோய்கள் என்ன? அப்படிங்கிறதைப் பற்றிதான் பார்க்கப்போகிறோம்.


1.செரிமானம் சீராக்கும்


சீரகம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையினால் அவதிப்படுறவங்க, சீரகத் தண்ணீரை, காலை வெறும் வயிற்றில் குடித்து வர, செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு, செரிமானம் எளிதில் நடைபெறும். மற்றும் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல், போன்ற பிரச்சனையினால் அவதிப்படுறவங்க, இந்த சீரகத் தண்ணீரை, காலை வெறும் வயிற்றில் குடித்து வர, எளிதில் குணமாகும். அதே சமயம், சீரகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து, மலச்சிக்கலையும் தடுக்கிறது.

2.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


சீரகம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. அடிக்கடி தொற்று நோய்களினால் அவதிப்படுறவங்க, சீரக தண்ணீரை குடித்து வர, நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். இதன் மூலமாக, பிற நோய்கள் வருவது தடுக்கப்படும்.

3.இரத்த அழுத்தம் சீராகும்


அதிக உயர் இரத்த அழுத்தத்தினால், அவதிப்படுறவங்க, காலை வெறும் வயிற்றில், சீரக தண்ணீரை குடித்து வர, இதிலிருக்கக்கூடிய பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறையும். ரத்த அழுத்தத்தை சீராக்குறது. தொடர் ரத்த அழுத்த பிரச்சனையினால, அவதிப்படுறவங்க, காலை வெறும் வயிற்றில், இந்த நீரை, தொடர்ந்து குளித்து வர, ரத்த அழுத்தம் முற்றிலும் குணமாகும்.

4.ஹிமோகுலோபின் அளவை அதிகரிக்கும்


ரத்தசோகை பிரச்சனையினால், அவதிப்படுறவங்க, காலை வெறும் வயிற்றில், சீரக தண்ணீரை குடித்து வர, இதிலிருக்கக்கூடிய அதிகமான இரும்புச் சத்து, உடலில் புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்கிறது. இதன் மூலமாக, ரத்த சோகை குணமாகும்.


5.மாதவிடாய் வலியைப் போக்குகிறது

மாதவிடாய்


பெண்கள் பலரும், மாதவிடாய் காலத்தில், அதிக வலியினால் அவதிப்படுவாங்க. அந்த சமயத்தில், இந்த காய்ச்சி வடிகட்டிய, சீரகத் தண்ணீரை குடித்து வர, மாதவிடாய் வலி, கட்டுப்படும். ஆறு, உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சீரகத் தண்ணீரில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், மாங்கனீஸ், போன்ற பொருட்கள் அடங்கி இருக்கிறது. காலையில், டீ, காப்பிக்கு பதிலாக, இந்த சீரகத் தண்ணீரை குடித்து வர, அன்றைய நாள் முழுவதும், உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.

தொடர்புடையவை: மாதவிடாய் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

5.முடி வளர்ச்சி அதிகரிக்கும்


சீரகம் அகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமில்லாமல், அழகு சார்ந்த பல பிரச்சனைகளுக்கும், நல்ல தீர்வு தரக்கூடியதாகவும் இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு, மிகவும் நல்லது, சீரகத் தண்ணீர். தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளான, தலைமுடி உதிர்வு, நரைமுடி, இது போன்ற பிரச்சனையால் அவதிப்படுறவங்க, இந்த ஜீரக தண்ணீரை குடித்து வர, இதுல இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள், கூந்தலை வலுவாக்குவதோடு, தலைமுடி வளர்வதற்கும் உதவியாக இருக்கிறது. சீரகத் தண்ணீர் குடித்து வர, என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன? அப்படிங்கிறதைப் பத்தி பார்த்தோம்.