ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இத பண்ணுங்க healthy life style tips in tamil

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் kidney failure diet in tamil

நமது உடலில் இருக்கக்கூடிய பெரும்பாலான கழிவுகள் இருக்கக்கூடிய மிக முக்கிய பணியை செய்யக்கூடிய உறுப்பு கிட்னி அதாவது சிறுநீரகங்கள்.பழு தடைந்துவிட்டால் உடலில் இருந்து வெளியேற்றப்படாத கழிவு நீர் உடலின் கை, கால் முகம் என உடலின் பல்வேறு பகுதிகளிலும் தேங்கும். அதுமட்டுமில்லாமல் உடலில் இருந்து வெளியேற்றப்படாத சிறுநீர் உடலின் உள்ளுறுப்புகளிலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இருதயத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் தேங்கத் தொடங்கும் இதன் காரணமாக மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டு இறுதியில் மரணம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. பொதுவாக சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை உள்ளவர்கள் இது போன்றவர்களை எளிதில் தாக்கும் அபாயம் அதிகம் பொதுவாக நோய் வந்த பிறகு என்ன செய்வது என்று தவிப்பதை விட வராமல் பாதுகாத்துக் கொள்வதே மிகவும் புத்திசாலித்தனமானது. அந்த வகையில் சிறுநீரகங்களை பலப்படுத்தும் ஏழு உணவுகளை பற்றி பார்க்கலாம்.

பூண்டு

பூண்டினுடைய நன்மைகள் பற்றி சொல்லவே தேவையில்லை தினமும் அன்றாட சமைக்கும் உணவுகளில் பூண்டு இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே இருதய நோய் வருவது தடுக்கப்படும் அதில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை குறைத்து ரத்த ஓட்டம் சீராக அமையும் இதன் மூலமாக கிட்னி பாதுகாப்பாக இயங்கும் முக்கியமாக சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக குழாய்களில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை எதிர்த்து போராடி அளிக்கக் கூடிய ஆற்றல் பூண்டிற்கு உண்டு.அதனால் பூண்டில் உணவை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.

கொத்தமல்லி

கொத்தமல்லி சிறுநீரகங்களில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்ற பெரிதும் உதவக்கூடிய கீரை இதனை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு பத்து நிமிடம் கொதித்து ஆறிய பின்பு அந்த நீரை வடிகட்டி கொடுத்து வர கிட்னியில் உள்ள அனைத்து டேக்ஸின் களும் வெளியேறும் கிட்னி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த முறையை ஃபாலோ பண்ணலாம்.

திராட்சை

திராட்சையில் விட்டமின் சி அதிகமாக இருக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தி சிறுநீரகங்களில் தொ ற்று ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு. திராட்சையில் இருக்கக்கூடிய அமிலங்கள் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது நெஞ்சில் உள்ள ஆண்டி ஆக்சைட் சிறுநீரக செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது.

இஞ்சி

இஞ்சி உடலில் உள்ள ரத்த குழாய்கள் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது பொதுவாக இஞ்சி அஜீரணம் மற்றும் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கான சிறப்பான உணவு முட்டைகோஸ் இதில் உள்ள வளமையான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படுவது மட்டுமல்லாமல் பிற உறுப்புகளுக்கும் நன்மை தரக்கூடியதாகவும் இருக்கிறது இதில் இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்கள் சிறுநீரகங்களில் நீர்கட்டிகள் வராமல் தடுக்கிறது .

முட்டைகோஸ்

முட்டைகோஸில் விட்டமின் கே வைட்டமின் பி12 வைட்டமின் பி6 போலிக் அமிலம் மற்றும் டயட்ரிங்க் போன்ற நார்சத்துகள் இருக்கிறது ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு சிறந்த உணவாக இருக்கிறது முட்டைகோஸ் உணவில் சேர்த்துட்டு வர தவறாதீர்கள் மீன்களில் ஒமேகா-3 அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகத்தில் நோய்கள் தாக்காதவாறு தாக்காதவாறு பாதுகாக்கிறது.

மீன்குழம்பு

மீன்களை வறுக்காமல் குழம்பு செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர ஹெல்தியாகவே சிறுநீரக பிரச்சனை வராமல் தடுக்கலாம் அது மட்டும் இன்றி சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது அடிக்கடி சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது பொதுவாக உணவில் உப்பை குறைத்து, சிறுநீரகத்தை அடக்கி வைக்காமல் இருப்பது, புகை போன்ற போதைப் பழக்கங்கள் எடுக்காமல் இருப்பது உடற்பயிற்சி செய்வது தினமும் குளிக்கும்போது இனப்பெருக்க உறுப்புகளை நன்கு சுத்தம் செய்வது மன அளவில் அதிக பயத்தை தடுப்பது தினமும் இரண்டு, மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது அதிக சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இதுபோன்ற பழக்கங்களை கடைபிடித்து வர சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும் மிக முக்கியமாக மருத்துவரின் ஆலோசனை இன்றி நீங்களாகவே கடைகளில் மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது. மருத்துவ உதவி தேவைப்பட்டால் சரியான அனுபவம் உள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி தரமான மருந்துகளை வாங்கி சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று இதன் மூலமாக போலி மருந்துகளை சாப்பிடுவது தடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *