வணக்கம் இன்றய பதிவில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஆரோக்கியமான ஐந்து உணவுகள் பற்றி பார்க்கலாம்.
நெல்லிக்காய்
காயகற்ப மூலிகைகளில் முக்கியமான ஒன்று நெல்லிக்காய் என்று பலருக்கும் தெரியும். உடல் பருமன். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த பானமாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கிறது.ஜூஸில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது தினமும் காலையில் 20 முதல் 30 மில்லி அளவு நெல்லிக்காய் ஜூஸ் எடுத்து வரலாம். இது எடை அதிகரிப்பதை தடுத்து உடல் எடையை குறைக்கிறது. மேலும் எலும்புகள் உறுதியாக இருக்க நெல்லிக்காய் உதவுகின்றது. கண்களுக்கு மிகவும் அழுத்தம் தரும் பணிகளை மேற்கொள்வதால் எதிர்காலங்களில் கண்புரை கண் அழுத்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த இயற்கை உணவாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கிறது மேலும் மூளை சுறுசுறுப்புடனும் சுவாசக் கோளாறுகளுக்கும் நெல்லிக்காய் சாப்பிடுவது அவசியம் இளமையாக இருக்க சரும நலத்திற்கு சிறந்த ஒரு இயற்கை பானமாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்கிறது.
பேரீச்சம் பழம்
பேரீச்சம் பழத்தில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து ரத்த சோகை நோயை குணப்படுத்துகின்றது உடலுக்கு தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றது ரத்த உற்பத்திக்கும் வழி வகுக்கின்றது ரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினமும் மூன்று பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க முடியும் இதில் உள்ள மாங்கனிசு மெக்னீசியம் போன்ற சத்துக்கள் எலும்பை வலுவாக்கும். எலும்பு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது குறிப்பாக பெண்கள் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புருக்கி நோயை குணப்படுத்தும் வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு வலியை குறைக்கவும் உதவுகின்றது மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும் கண் பார்வை தெளிவாக தெரிய மூன்று பேரிச்சம் பழம் சாப்பிடலாம்.
வெளிர்மஞ்சள் நாட்டுக்கோழி முட்டை
வெளிர்மஞ்சள் உடைய நாட்டுக்கோழி முட்டை தேவைக்கேற்ப கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பின் அளவு உடலில் சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியம் நாட்டுக்கோழி முட்டையில் கொழுப்பு சத்து அதிகம் இருந்தாலும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தாது.எனவே பல நன்மைகளை அளிக்கும் நாட்டுக்கோழி முட்டையை தாராளமாக சாப்பிடலாம் கர்ப்பிணி பெண்கள் உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியவர்களுக்கு உடலில் பலம் அதிகம் தேவைப்படுகின்றது அவர்கள் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்வது நல்லது. நாட்டுக்கோழி முட்டையில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளதால் தினமும் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு புரத சத்து குறைபாடு நீங்கி கண்கள் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் ஏற்படாமல் காக் கின்றது. ரத்தகுழாய் அடைப்பு ஹார்ட் அட்டாக் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி ஆகிய கொடுமைகளிலிருந்து தப்பிக்க மற்றும் உடல் உறிஞ்ச தகுதி இல்லாத கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற மிகவும் சிறந்தது.
பூண்டு
மன அழுத்தத்தை கட்டுப்படுத்த பூண்டு உதவும் எனவே அலுவலகத்தில் அதிகம் வேலைப்பளு இருப்பவர்கள் தினமும் வறுத்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது. பூண்டை தினசரி சாப்பிடுவதால் சளி ஏற்படுவது குறைந்துவிடும் அதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும். நார்ச்சத்து உள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ள தவறாதீர்கள் சிவப்பு பச்சை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள் காய்கறிகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளன மேலும் இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ஏராளமாக இருக்கின்றன நார்சத்து மிகுந்த உணவுகளில் முதலிடம் கீரைக்கு தான் முட்டைகோஸ் கேரட் பீட்ரூட் தக்காளி தேவையான ஊட்டச்சத்துக்கள் வளமாக அதில் நிறைந்துள்ளன சிறுதானியத்தில் மாவு சத்து மட்டுமின்றி நார்ச்சத்து புரதச்சத்து அதிக அளவில் நிறைந்து இருக்கின்றன பழங்களில் மாதுளை கமலா ஆரஞ்சு ஆப்பிள் அவகோடா போன்றவற்றையும் சாப்பிடலாம் கிழங்கு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
RELATED: IRREGULAR PERIOD IN TAMIL