ராஜேந்திர சோழன் வரலாறு rajendra cholan history in tamil

ராஜேந்திர சோழன் வரலாறு rajendra cholan history in tamil

பேரரசன் இராஜேந்திர சோழன்

இந்திய மன்னர்களுள் தனிச்சிறப்பு வாய்ந்த மன்னன் சோழ அரசன் ராஜேந்திரன். இந்திய மன்னர்கள் பலரும் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டு இந்திய நிலப்பரப்பை மட்டுமே ஆண்டு கொண்டிருந்த சூழலில், ராஜேந்திரசோழன் இந்திய எல்லைப்பரப்பை தாண்டி, கடலைக் கடந்து, இன்றைய தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா என பல நாடுகளை வெற்றி கொண்டு ஆட்சி பரப்புகளை கைப்பற்றிய பெருமைக்குரியவன். இந்திய பெருங்கடலை ஒரு குளம் போல வைத்திருக்கும் அளவிற்கு பெரும்படை கொண்ட ராஜேந்திரசோழன் தெற்காசியாவின் பெரும் பகுதிகளை ஆண்ட பெருமைக்குரியவன். தமிழ் இனத்திற்கு ஒரு சிறந்த அடையாளமாகவும், சிறந்த ஆளுமை பண்புடனும், வீரதீரச் செயல்களுக்கும், போருக்கும், நிர்வாகத் திறனுக்கும் பெயர்பெற்றவன் சோழ மன்னன் ராஜேந்திரன்

இராஜேந்திரச்சோழனின் இராணுவ கட்டமைப்பு ;

ராஜேந்திர சோழன் வரலாறு rajendra cholan history in tamil

வரலாற்று ஆய்வாளர்களின் கவனம் ஈர்த்த பெருமைக்குச் சொந்தக்காரன் இராஜேந்திரன். போருக்கான அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய படை இவனுடையது. சிறந்த நிர்வாக அமைப்பை தக்கவைப்பதில் ராணுவம் பெரும் பங்காற்றிய சூழலில் அரியணை ஏறும் முன்பே இராணுவ உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி, தேர்ச்சி பெற்றவன். இராணுவப் பயிற்சி மையங்களை உருவாக்கி, சிறந்த வீரர்கள் இவனது படையில் சேர்க்கப்பட்டனர். இதனால் 70க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படைகளை இவனால் உருவாக்க முடிந்தது. அத்தனைப் படைகளும் ஒரே குடையின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டவை. அதற்கு தலைமை தாங்கியவன் ராஜேந்திர சோழன். இவற்றை ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்திய கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன. ராணுவத்தில் இருப்போரின் குடும்பங்களை கவனிக்க தனித்துறை ஒன்று இவனது காலத்தில் இயங்கி வந்துள்ளது. நாட்டின் சாதாரண குடிமக்களை விட ராணுவ படையிலிருப்போருக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன.

அவை,

1. இராணுவ வீரர்கள் தங்கள் பெயரால் கோவில்கள் கட்டவும் அவற்றிற்கு கொடை வழங்கவும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

2. படைவீரர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

3. விருது பெறும் வீரர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன.

4. வீரர்களின் குடும்பங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இராஜேந்திரனின் படை நிர்வாகம் குறித்து போர் ஆய்வாளர்கள் கூறுவது, “ராஜேந்திரசோழன் படையில் இருக்கும் வீரர்கள் ஒவ்வொருவரும், தேர்ந்த பயிற்சிக்குப் பின்னரே களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக தேர்வாகும் வீரர்கள் அவர்களின் திறமைக்கு ஏற்ப முகாம்களில் பயிற்சி பெற்றபின் விருப்பமுள்ள படைப்பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளனர். போர்படை, கடற்படை, பாதுகாப்பு படை உள்ளிட்ட படைகளில் பயிற்சிக்குப் பின் இணைவதை தாங்களே முடிவு செய்துள்ளனர்.

இராஜேந்திர சோழனின் படை கண்ட வெளிநாட்டு பயணி ஒருவரின் கூற்று, “சோழ வீரர்கள் மரண பயம் அற்றவர்கள். அவர்களின் வாள் சுழற்றல், சாவின் உச்ச வலியை ஏற்படுத்துகின்றன. கடுமையான சூழலைக் கையாளும் தீவிர ஆற்றல் அவர்களுக்குள்ளது. களத்தில் உள்ள எதிரிகள் அவர்களை கண்டு திணறுகிறார்கள்”.

இராஜேந்திர சோழனின் ராணுவ படையில் செயல்பட்டு வந்த பிரிவுகள் ;

நடப்பு – ராணுவ பிரிவு

இது வீரர்களுக்குத் தேவையான சத்தான உணவையும் உடையையும் வழங்கக்கூடிய பிரிவாகும்.

பயணம் – ராணுவப் பிரிவு

இது கடற்படை நிர்வாகத்தையும், வீரர்களுக்கான உணவையும் உடையையும் வழங்கும் பணிகளை கவனித்து வந்துள்ளது.

களத்திற்கு செல்லும் படைகள் சேனைகளாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு சேனைக்கும் தலைவன் நியமிக்கப்பட்டிருந்தான். அவர்கள் சேனாதிபதி என்று அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு சேனையும் பல தளங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த தளத்திற்கு ஒரு தளபதி தலைமை வகித்தார். ஒவ்வொரு தளமும் 500 யானைகளைக் கொண்ட, மூன்று யானைப் படைகளையும், 1000 குதிரைகளைக் கொண்ட மூன்று குதிரைப் படைகளையும், 3000 வீரர்களைக் கொண்ட, 6 காளாட் படைகளையும் கொண்டதாக இருந்துள்ளது.

கொரில்லா தாக்குதல் :

இது இராஜதந்திர சோழனின் படையிலிருந்த ஒரு தாக்குதல் முறையாகும். இதில் படையினர் களத்தின் பின்புறத்தில் இருப்பர். தமது படை பின்வாங்க நேரும் சமயம் எதிர்பாரத திசைகளில் இருந்து வந்து, எதிரி நாட்டுப் படைகளைக் தாக்கி நிலைகுலைய வைக்கும். இந்த படை விரிவிற்கு “தளப்படை” என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்த படையில் காலாட் படையும், குதிரைப் படையும் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு தளப்படையும் இரண்டாயிரம் வீரர்களையும் 1000 குதிரைகளையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு சேனையிலும் 200 மருத்துவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

கடகம் – படைப்பிரிவு

இது கோட்டைகளையும் கோவில்களையும் பாதுகாக்கக்கூடியது. படையில் புதிதாக இணையும் வீரர்களுக்கு பயிற்சி வழங்குவது இவர்களின் முக்கிய பணியாகும். ஆண்டுக்கு ஒருமுறை பொது மக்கள் தரப்பிலிருந்து வீரர்கள் தேர்வு செய்யபட்டு, கடகம் பிரிவிற்கு அனுப்பப்பட்டு வந்துள்ளனர்.

ஒரு சீன பயணியின் குறிப்பு, “ராஜேந்திர சோழனின் படையில் கிட்டத்தட்ட 60000 யானைகள் இடம்பெற்றிருந்தன, ஒவ்வொரு யானையும் 6 முதல் 7 அடி உயரம் வரையிலும், யானைகள் மீது அம்பாரிகள் அமைத்து அதில் நின்றபடி வீரர்கள் அம்பு எய்தும் ஈட்டிகளால் தாக்கியும், எதிரிகளின் தலைகளைக் கொய்தனர். மேலும் வெற்றி அடைந்ததும் களத்திலேயே யானைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.”

மேலும் 1000000 – க்கும் மேற்பட்ட காளாட்படை வீரர்கள், 80000 – க்கும் மேற்பட்ட குதிரைகளும் படையில் இருந்துள்ளன. அரேபியாவில் இருந்து எந்நேரமும் கலங்களில் குதிரைகள் சோழ நாட்டிற்கு வந்த வண்ணம் இருந்தது.

படை வீரர்கள் வெறும் போரில் மட்டும் ஈடுபடவில்லை. சமூக பணியிலும் ஈடுபட்டுள்ளனர். போரில்லா காலங்களில் ஏரி, குளம், வாய்க்கால்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவில் கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இராஜதந்திர சோழனின் படை வீரர்களின் குடும்ப நிர்வாகம் :

இராஜதந்திர சோழனின் நேரடி நிர்வாகத்தில் இருந்த துறையால் படை வீரர்களின் குடும்பங்கள் மானியம் அளித்து, பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. போரில் வீரர்கள் இறக்க நேரிடின் அவர்களின் குடும்பத்தை முழுமையாக அரசே தத்தெடுத்தது. இறந்துபட்ட வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் பொறுப்பை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. அப்பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ப அரசு பணியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த போர் வீரர்களின் குடி மிச்சங்கள் இன்றைய அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் வசிக்கிறார்கள். எனவே இராஜேந்திர சோழனின் இந்த ராணுவ கட்டமைப்பு தான் அம்மன்னனின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளது.

இராஜேந்திர சோழன் இந்திய பெருங்கடலில் பேரரசன் என்ற பெயருக்கு உரியவன். இன்றளவிலும் வரலாற்று ஆசிரியர்கள் வியந்து பாராட்டும் கடற்போருக்கு தலைமை வகித்தவன் இராஜேந்திர சோழன்.

இராஜேந்திர சோழனின் கப்பற்படை ;

rajendra cholan history in tamil

இவனது கடற்படை ஆமை என்ற கடல் மற்றும் நிலம் வாழ் உயிரினத்தோடு தொடர்புடையது. சோழர்களின் கடற்படைத் தளபதியாக கடல் ஆமைகள் இருந்து வந்துள்ளது. அந்த ஆமைகள் எங்கு சென்றாலும் தான் பிறந்த கடற்பகுதி எது என்பதை மறவாது. எனவே தங்களின் இனப்பெருக்க காலத்தில் அவை தாம் பிறந்த கடற்பகுதிக்கு மீண்டு வரும். கடலின் நீரோட்டத்தையும், காந்த அலைகளையும் ஆமைகள் அறிந்திருப்பதால் இது சாத்தியப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85 கிலோ மீட்டர் தூரமே நீந்தி கடக்க முடியும். ஆனால் இந்த ஆமைகள் குறுகிய காலத்தில் பல்லாயிரம் மைல்களைக் கடந்து வருகின்றன. கடலின் நீரோட்டத்தை உதவி கொண்டு நீந்தாமல் அவை இவ்வாறு பயணம் செய்கின்றது. அந்த வகையில் கடலின் நீரோட்ட பாதைகளை அறிந்தவன் தான் இராஜேந்திர சோழன். ஆமைகளின் இந்த அபூர்வ குணம் சோழர்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. இதனால் தான் ஆடைகளைக் கொண்டு பெரும் படகுகளில் அவர்களால் பயணிக்க முடிந்தது. கடலில் காற்று எந்த திசையில் வீசுகிறது, ஆமைகள் எந்த நீரோட்ட பாதையில் செல்கிறது என்பனவற்றை மிக சரியாக கணக்கிட்டு அதனடிப்படையில் படகைச் செலுத்தும் போது காற்றால் அவை இழுத்து செல்லப்பட்டு, தன்னுடைய இலக்கை அடைய வழிவகுக்கும்.

கடல் படையெடுப்பிற்கு ஏற்றது, வங்க கடலில் வட கிழக்கு காற்று ஓயும் காலம். இந்த காலநிலை மார்கழி மாதத்தின் இறுதியில் ஆரம்பமாகும். அப்போது வங்க கடல் அமைதி நிலையை அடைந்திருக்கும். அந்த காலத்தில் போருக்கு கப்பல் படைகள் ஆயத்தம் ஆகின்றன.

“அலைகடல் மீது பல கலம் செலுத்தி”

என்று தஞ்சை பெரிய கோவில் மெய்கீர்த்தி புகழ்பாடுகிறது.

அவர்களின் பயணத்தில் பல்லாயிரம் வீரர்கள், பல்லாயிரம் டன் எடை கொண்ட தளவாடங்கள், குதிரைகள் என அனைத்தையும் சுமந்து செல்லும் அளவிற்கு சோழர்களின் கப்பல் கலங்கள் இருந்துள்ளன. அதனால் தான் அவர்களால் பல நாடுகளையும் தீவுகளையும் வெல்ல முடிந்தது. அன்றைய தினத்தில் வலிமையான கலங்கள் கட்டுவதில் பெயர் போனவர்கள் மாலத்தீவு மக்கள். ஆனால் அவர்களின் கலங்களையே அழித்தொழித்து அந்நாட்டையே கைப்பற்றும் அளவில் நேர்த்தியும் பாதுகாப்பும் மிக்க கலங்களை சோழர்களால் உருவாக்க முடிந்துள்ளது.

“கடாரம் கொண்டான்” என்ற பட்ட பெயருக்கு உரியவன் இராஜேந்திர சோழன். கடாரம் எனப்படுவது இன்றைய மலேசியா. அது மட்டுமின்றி பர்மாவிலிருந்து இந்தோனேசியவின் தெற்கு முனை வரை இராஜேந்திர சோழன் வென்றெடுத்த நிலப்பரப்பு, ஏறத்தாழ 36 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள். மிக பெரும் யுத்த போராளிகளான ஜூலியட் சீஸர், அலெக்சாண்டர், தைமூர், செங்கிஸ்கான் போன்றோர் கூட கடல் தாண்டி போர் மேற்கொண்டதில்லை. ராஜராஜ சோழனுக்கு முன்பு வரை வணிக கப்பல்கள் தான் வணிகத்திற்கும், சமயங்களில் போருக்கும் பயன்பட்டது. ஆனால் இராஜஇராஜன் தான் போருக்கென்று தனித்த கலங்களைக் கட்டினான். ஆனால் இராஜேந்திரன் கப்பற்படையைக் கருத்தில் கொண்டு தனது தலைநகரை கொள்ளிட கரைக்கு மாற்றினான்.

கடற்கொள்ளையினைத் தடுக்கும் சமாதான கால சுற்று காவல், வாணிப கப்பல்களுக்கு பாதுகாப்பு அளித்தல், நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு அளித்தல், நாட்டின் துறைமுகத்திற்கு அருகிலும், ஆழ்கடலிலும் எதிரிகளை கண்காணித்தல், கடலின் தன்மையைப் புரிந்து கொள்ளுதல், கடற்கரை முகப்புகளை உருவாக்குதல், நட்பு நாட்டின் எதிரிகளுக்கு பயண தடையை ஏற்படுத்துதல், எதிரிகளின் கப்பல் படைகளை நாசப்படுத்துதல் போன்றவை இராஜேந்திரனின் கப்பல் படையின் பிரதான செயல் திட்டங்களாகும். இவர்களின் கப்பல்களில் புலி கொடி கட்டப்பட்டு இருக்கும். இப்படியான ஒழுங்கு முறை வேறு எந்த ஆட்சி தலைமையிலும் இல்லை.

கப்பற்படைப் பிரிவுகள் ;

கனம் – போர் கப்பல் படைப்பிரிவு, இதனைக் கட்டுப்படுத்தி கட்டளை இடுபவர் கணபதி என்று அழைக்கப்பட்டார்.

கண்ணி – எதிரிகளின் கலங்களை அவர்களுக்கே தெரியாமல் தாம் தேர்வு செய்த களத்திற்கு கொண்டு வர பயன்படுத்தப்பட்ட பிரிவாகும்.

ஜலதளம் – புலனாய்வு, சுற்று காவல், வழி மறிப்பு போன்றவற்றிற்காக இந்த பிரிவு செயல்பட்டது. இதில் 5 பிரதான போர் கப்பல்கள், மூன்று துணை மற்றும் விநியோக கப்பல்கள், 1 அல்லது 2 ஆயுத கப்பல்கள் இருந்தன.

மண்டலம் – கடும் பயிற்சி பெற்ற வீரர்கள் இதில் அடங்குவர். இது ஆழ்கடல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 40 முதல் 50 கப்பல்களைக் கொண்டது ஒரு மண்டலம்.

அணி, பிரிவு – மற்றும் சில கப்பல் படைப் பிரிவுகள்.

“ஜலாதிபதி” கப்பல் படை பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி ஆவார். போர் கப்பல்களின் படைத் தலைவன் “பிரிவாதிபதி” அல்லது “தேவர்” என்று அழைக்கப்பட்டார். கடலோர பாதுகாப்பிற்கு செயல்பட்டவை “கரைப்படை” அல்லது “கரைப்பிரிவு” என்று அழைக்கப்பட்டது. நீர்வழி வாய்க்கால்கள், துறைமுகங்கள், புதிதாக கைப்பற்றபட்ட கடலோரப்பகுதிகள் மற்றும் கரையோர நகரங்களின் சுற்றுக்காவல் பொறுப்புகளை இப்படை மேற்கொண்டது.

போர் கப்பல்களில் இடம் பெற்றிருந்த சிறப்பு வசதிகள் ;

சோழர்கள் காலத்தில் கப்பல்களை உருவாக்க ஆதி தொழில் நுட்பம் பயன்படுத்தபட்டுள்ளது. அவர்கள் உருவாக்கிய கப்பல்களை “லசிராய்” என்று பெயரிடப்படுகின்றனர் அரேபிய பயணிகள். மர துண்டுகளை ஒன்றோடு ஒன்று இணைத்து, தேங்காய் மட்டையில் திரிக்கப்பட்ட கயிற்றால் கட்டி கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன. பல்லாயிர கணக்கான கப்பல்களை சோழ நாடு தன்னகத்தே கொண்டிருந்தது. “லதாரணி” என்ற பெயரில் உருவான கப்பல்கள் ஆழ்கடல் போருல் ஈடுபட வடிவமைக்கப்பட்டது. சிறிய போர் செய்ய “லூலா” என்ற கப்பல் பயன்பட்டுள்ளது. “வஜிரா” என்பவை சிறிது ஆயுதம் தரித்த விரைவான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரிதளவு ஆயுதம் ஏந்தி இரு பக்க இலக்குகளில் தாக்குதல் நடத்த “லதிரிசடை” என்ற கப்பல்கள் பயன்பட்டுள்ளது. மூன்று பாய் மரங்கள் கொண்டு, காற்றின் திசை அறிந்து பயணப்பட, “அக்ரமண்டம், நீலமண்டம், சர்ப்பமுகம், கலப்பினக்கப்பல்” போன்ற கப்பல் வகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தக பொருட்களை நீர் நிலைகளுக்கு ஏற்றி செல்பவை, பெரிய அளவிலான “பற்றி” ஆகும். துடுப்பு மற்றும் ஒற்றை பாய் மரம் கொண்டவை “அம்பி” என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்பெயர்கள் அனைத்தும் அரேபியர்களின் குறிப்புகளில் இடம்பெற்றவை.

காவிரிபூம்பட்டினம் – போர் பணிகள் மற்றும் வணிகப் பணிகளுக்கு பெரிதும் பயன்பட்டுள்ளது. மேலும் பாண்டிச்சேரியில் உள்ள அரிக்கமேடு, மாமல்லபுரம், நாகபட்டினம், குளச்சல், கொற்கை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களும் கப்பற்படைக்கு பயன்பட்டுள்ளது.

பல லட்சம் வீரர்களுக்கான உணவுகள், யானைகள் மற்றும் குதிரைகளுக்குமான உணவுகள் கப்பலில் தயாரிக்கப்பட்டுள்ளன. யானைகளுக்கு குதிரைகளுக்கும் கடற்பயணம் பழக்கப்படுத்தப்பட்டது. எனவே நிலத்தில் பயன்படுத்தப்படும் யானைப் படைகள் கப்பற்படையில் பயன்படுத்தப்படவில்லை.

சோழர்களின் உணவு பண்பாடு வண்ணமயமானது. பிரதான உணவாக சோறு இருந்துள்ளது. அரிசி, பருப்பு, கடலை, நெய், எண்ணெய், சர்க்கரை, உப்பு, புளி, ஏலக்காய், மிளகு, சீரகம், கடுகு, கசகசா, தேங்காய் பயன்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர்கள் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில கப்பல்கள் முழுக்க முழுக்க தண்ணீர் கொண்டு செல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. போர் காலங்களில் வீரர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. அவை அரிசி, மிளகாய், சுக்கு மற்றும் மாதுளம் பழம் கொண்டு தயாரிக்கப்பட்டவை. மேலும் பருப்பு வடகம் வெஞ்சனம் ஆகும். மேலும் பெரும் ஜாடிகளில் ஊறுகாய்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளது. சில கப்பல்களில் காய்கறிகள், இறைச்சி, பால், எருமைகள், செம்மறி ஆடுகள் ஆகியவை உடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடல் மீன்களும் சமைக்கப்பட்டுள்ளது. இராஜேந்திரனின் இத்தனை கவனிப்புகளுக்கும் நன்றியாக வீரர்கள் போரில் முழு நாட்டு பற்றோடு ஈடுபட்டனர்.

இத்தகைய பறந்துபட்ட ஆற்றலால் தான் சோழர்களின் ஆட்சி பிற்காலத்தில் 430 ஆண்டுகள் நீடித்து நின்றது.

இராஜேந்திர சோழனின் சாதனைகள் ;

சிறிதும் குழப்பம் அற்ற நிர்வாகம் இவனுடையது. நிர்வாக வசதிக்காக அவனது ஆட்சி பரப்பு 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.

  • மும்முடி  சோழமண்டலம் – இலங்கையை முழுவதுமாக உள்ளடக்கிய பகுதி.
  • வேங்கை மண்டலம் – வேங்கை நாடு.
  • ஜெயங்கொண்ட சோழமண்டலம் – தொண்டை நாடு.
  • அதிராஜராஜ மண்டலம் – கொங்கு நாடு.
  • மலைநாட்டு மண்டலம் – சேர நாடு.
  • ராஜராஜபாண்டிய மண்டலம் – பாண்டிய நாடு.
  • நிகரிலி சோழமண்டலம் – உளம்பபாடி
  • சோழமண்டலம் – தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் அடங்கிய பகுதி

மண்டலத்திற்கான வரைமுறைகள் ;

மண்டலத்திற்கு தலைவன் நாடாள்பவன்.

1. கிராமம் – சோழ அரசின் சிறிய பிரிவு. ஊர் என்றும் மற்றொரு பெயர் உண்டு.

2. நாடு – கிராமங்கள் பல உள்ளடக்கியது.

3. வளநாடு – நாடுகள் பல கொண்டது.

4. மண்டலம் – வள நாடுகள் பலவற்றை உள்ளடக்கியது.

நிர்வாகத்திற்கான குழு ;

ஐந்து பேரை உள்ளடக்கியது. இதில் நம்பிக்கைக்கு உரிய ஒரு அமைச்சர், ஒரு ராஜகுரு, ஒரு தலைமை படைத்தளபதி, ஒரு தலைமை தூதன், தலைமை ஒற்றன் இடம்பெற்றிருந்தனர்.

மக்களிடையே எழும் சிறு பிரச்சனைகள் அவர்களிடையே தீர்த்து கொள்ளப்படும் பொருட்டு “மக்கள் சபைகள்” அமைக்கப்பட்டன. பெரும் பிரச்சனைகள் மட்டுமே அரசனின் கவனத்திற்கு வரும். இக்கட்டமைப்பு இராஜஇராஜன் போட்ட விதை. அதனை காக்கும் பொறுப்பு இராஜேந்திரன் கைகளில் இருந்தது. மக்களின் அன்றாட செயல்பாடுகளில் அவனின் தலைமை செயலகம் தலையிடவில்லை. ஊழியர்களுக்கு அவர்களின் திறமை மற்றும் பணிக்கு ஏற்ப பட்டங்கள் வழங்கப்பட்டு அதற்கேற்ற மானியங்கள் வழங்கப்பட்டது. தவறு செய்பவர்கள் தெய்வத்தின் முன்னிலையில் தண்டிக்கப்பட்டார்கள். ஊர் சபை வரி வசூல் செய்பவையாகவும் செயல்பட்டது. வரி செலுத்தாதவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

வரிகளின் பட்டியல் ;

ஊருக்கு பொதுவாக இருக்கும் ஓடைக்கான வரி, முருகன் கோவில் வரி, மீன்பிடி வரி, விற்பனை வரி, நாட்டு வரி, ஊர் வரி, திருமண வரி, குயவர் வரி, த‌ண்ணீர் வரி, பொற்கொல்லர் வரி, சலவைத் தொழில் பாறை வரி, ஆடு, மாடு, தானிய பயிரிடும் வரி, சுங்க வரி ஆகியவை புழக்கத்திலிருந்த வரி வகைகள். வரி அதிகமிருப்பின் மேல் முறையீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் வரி செலுத்த தவறுதல் பெரும் குற்றமாக கருதப்பட்டது. வரி வசூலிப்பதில் விலக்குகள் இன்றி வசூலிக்கப்பட்டது. இராஜஇராஜ பாண்டி மண்டலத்தில் இருந்து சில பிராமணர்கள், வரி கொடுக்க மறுத்த போது, தானே நேரடியாக முன் நின்று அப்பிரச்சனையை தீர்த்து வைத்தான் ராஜேந்திரன். கிராம சபையில் பிராமணர்கள் வரி செலுத்த வேண்டும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வரி கட்ட தவறினால், அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, கிராம சபைக்கு சொந்தமாக மாற்றப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வ‌ரி வசூல் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் தான் குற்றவாளி இல்லை என தானே நிரூபிக்க வேண்டும். அதே போல் வழக்கு தொடுப்பவர்களே எதிரி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். இறுதியில் இருதரப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்த வாய்ப்பும் வழங்கப்படும்.

சோழ நாட்டில் களவு பெரும் குற்றமாக பார்க்கப்பட்டது. கோவில் சொத்துக்களை கொள்ளை அடிப்பவர்களின் குடி உரிமை பறிக்கப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அரச துரோகம் மன்னிக்க இயலா குற்றமாகும். இது போன்ற குற்றங்களை இராஜேந்திர சோழனே நேரடியாக தீர்த்து வந்தான். மரத்தில் கட்டி வைத்து கசையடி வழங்கும் தண்டனை வழக்கத்தில் இருந்துள்ளது.

மன்னனின் தீர்ப்புகள் அரசாங்க ஓலை மற்றும் செப்பேடுகளில் பொரிக்கப்பட்டது. இப்பணியில் “ஓலை எழுதும் உத்தம மந்திரிகள்” ஈடுபடுத்தப்பட்டனர். அதை சரி பார்த்து கையொப்பம் இடுபவர் “ஓலை நாயகம்” ஆவார்.மன்னன் தான் சுற்று பயணம் செல்லும் தருணங்களில் ஆட்சி பொறுப்பு, “பொறுப்பு சுற்றம்” என்ற குழுவினரிடம் இருக்கும். இராஜேந்திரனின் குழுவில் இருக்கும் ஒரு தலைவனை மட்டும் தான் அவன் நியமிப்பான். மற்ற அதிகாரிகள் குடவோலை முறையில் தேர்ந்தெடுத்தார்கள். அத்தனை அதிகாரிகளும் மதிப்புடன் நடத்தப்பட்டன.

போரின் பின் மட்டும் செல்லாது மக்களின் நலனுக்கான திட்டங்கள் இராஜஇராஜனால் வகுக்கப்பட்டு இராஜேந்திரனால் நேர்த்தி செய்யபட்டு நிர்வாகம் செய்யப்பட்டது. இவனது காலத்தில் பெண்கள் சமூக வேலைகளில் ஈடுபட முழுமையாக அனுமதிக்கப்பட்டனர். அதிகாரங்களிலும் பல உயர் பதவிகளிலும் அவர்கள் அமர்த்தப்பட்டார்கள். உடன்கட்டை ஏறும் வழக்கம் இராஜேந்திர சோழனின் காலக்கட்டத்தில் கட்டாயமாக்கப்படவில்லை.

தொடர்புடயவை: ராஜ ராஜ சோழன் வாழ்க்கை வாரலாறு