ஊம்பு – என்பது கெட்ட வார்த்தையா? Oombu meaning in tamil

ஊம்பு – என்பது கெட்ட வார்த்தையா?ஊம்பு – ஒரு கெட்ட, தகாத சொல் என்றால்சப்பு, சாப்பிடு, மெல்லு, விழுங்கு போன்ற அனைத்துமே கெட்ட சொல் தான்!ஏனெனில், ஊம்புதல் என்பது ஊண்வினைகளில் ஒன்று!

ஊம்பு, ஊம்புதல் = உதடுகளால் கவ்வி வாயை மூடிக் கொண்டு சுவைத்தல்!உதாரணமாக சிறுவன் Lollypop வாங்கிச் சப்பினால் – “சிறுவன் லாலிபாப்பை ஊம்பினான்” எனச் சொல்வதே சரி!(குழந்தை விரலைச் சூப்பினான் – என்று சொல்வதே சரி!).

Oombu meaning in tamil

ஊமு / ஊம்பு = மூடிய / மூடப்படும் வினையையொட்டி உருவான சொல் இது!உம் > உமி = நெல்லை மூடியுள்ள தொலி.உம் > ஊமை = வாய்பேச இயலாதவர்.வாய் மூடி எதுவும் பேசாதவனை வாயை ‘உம்’ – என்று வைத்துக் கொண்டிருக்கிறான் எனச் சொல்வதைத் நோக்குக!

இன்றைக்கும் மலையாளத்தில் மாம்பழத்தை ஊம்பினான் என்றே குறிப்பிடுகிறார்கள்! அதாவது, மாம்பழம் ஊம்புதல் = மாம்பழத்தை மூடிய வாயால் சப்பிச் சுவைத்தல்.எத்தகைய செழுமையான சொல் வளம் நிறைந்தது நம் மொழி, அதன் பெருமை உணராது, அறியாமையால் பல சொற்களை, தகாத சொல் எனக் கருதி பேச்சு வழக்கில் விலக்கி வருகிறோம்?!

தமிழர் வாழ்வியலில் உண்ணும் செயல் ஒவ்வொரு முறைக்கும் தனித் தனி சொல்லாடல் உள்ளது. அவை ‘ஊண் வினைகள்’ எனப்படும்.இத்தனைச் சொற்கள் எந்த மொழியிலாவது உண்டா?கொறித்தல் = கொஞ்சமாகச் சாப்பிடுதல்.

நுங்குதல் = விரலால் துழாவி உறிஞ்சுதல் .மொக்குதல் = வாய் நிரம்ப உண்ணுதல். ( நல்லா முக்கினான் – இன்றைய வழக்கு )உறிதல் /உறிஞ்சுதல் = நீர்ப்பொருளையும் நெகிழ்ச்சிப் பொருளையும் காற்றால் வாய்க்குள் இழுத்தல்.

குடித்தல் = நீர்ப் பொருளை இயல்பாக உட்கொள்ளுதல்.பருகுதல் = நீர் ஏனத்தில் பல் படக் குடித்தல்.அருந்துதல் = கொஞ்ச கொஞ்சமாகக் குடித்தல்.மண்டுதல் = மண்டியுட்படக் குடித்தல்.

Oombu meaning in tamil

மாந்துதல் = பெரிய அளவில் குடித்தல்.சப்புதல் = உணவை மெல்லாமல் நாவிற்கும் அண்ணத்திற்கும் இடையில் வைத்து அதன் சாற்றை மெல்ல உறிஞ்சுதல் அல்லது சிறிது சிறிதாகக் கரைத்தல், சப்புக் கொட்டுதல். (சப்பு > Soup).சுவைத்தல் = ஒன்றை மென்று அதன் சுவையை நுகர்தல்.

சவைத்தல் = மென்மையாக மெல்லுதல் /குழந்தை தாய்ப் பாலைச் சப்பு தல். ( சவை > Suck).ஊம்புதல் /சூம்புதல் /சூப்புதல் = வாயைத் திறவாமல் வைத்துச் சப்புதல்.மெல்லுதல் = பற்களால் அரைத்தல்.

தின்னுதல் = பழம், பண்ணியம் போன்ற சிற்றுண்டியை மென்று உட்கொள்ளுதல்.உண்ணுதல் = கவளமாகச் சோற்றை உட்கொள்ளல்.சாப்பிடுதல் = சோற்றைக் கறி வகைகளுடன் குழம்பு, சாறு, மோர் இட்டுக் கலந்து உட்கொள்ளல்.மடுத்தல், வாய்மடுத்தல் = கம்மங்கஞ்சி, கேழ்வரகுக் கூழ் போன்றவற்றை அள்ளி உண்ணுதல், கவளம் கவளமாகப் பிறர் ஊட்டுதல்.அசைத்தல் = விலங்கு அசை போடுவதுபோல் அலகை அசைத்து மென்று உட்கொள்ளல்.

(வெற்றிலைப்பாக்கை வாயிலிட்டு அசைத்தல்).அயிலுதல் = குழந்தை அளைந்து சோற்றை உண்ணுதல்.கப்புதல் = வாய் நிறைய வைத்து மெல்லுதல்.மிசைதல் = விருந்தினரைச் சாப்பிடவைத்து மிஞ்சியதை உண்ணுதல்.மொசித்தல் = பலர் ஒன்று கூடி உண்ணுதல்.( ஈ மொய்த்தல்)ஆர்தல் = வயிறு நிரம்ப உண்ணுதல்.(வயிறார உண்டான்).விழுங்குதல் = மெல்லாமல் சுவைக்காமல் வாய் வழியாக வயிற்றுக்குள் இடுதல்.

Related: Kundhani meaning in tamil