நெஞ்சு சளி , இருமலை போக்கும் மிளகு துவையல் அரைக்க தெரியுமா..? இதோ ரெசிபி..!

நல்ல மிளகு ரசம் வைத்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த மிளகு துவையல் செய்து சாப்பிடுங்கள். பிடித்த வைரஸ் தொற்று காரத்தால் பறந்து போகும்.

இன்ஃப்ளூயன்சா தொற்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் முக்கிய அறிகுறிகளில் சளி, நெஞ்சு சளி, இருமல், தொண்டை வலி ஆகியவையும் அடங்கும். அந்த வகையில் நல்ல மிளகு ரசம் வைத்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த மிளகு துவையல் செய்து சாப்பிடுங்கள். பிடித்த வைரஸ் தொற்று காரத்தால் பறந்து போகும். சரி மிளகு துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 1 கப்

எண்ணெய் – 2 tbsp

கடுகு – 1/2 tsp

மிளகு – 1 tsp

இஞ்சி – 2 துண்டு

கறிவேப்பிலை – 1 கொத்து

காய்ந்த மிளகாய் -2

உப்பு – தே.அ

தேங்காய் துருவல் – 1 கப்

சீரகம் – 1/2 tsp

தாளிக்க :

எண்ணெய் – 1 tbsp

கடுகு – 1/2 tsp

உளுந்து – 1 /2 tsp

கடலை பருப்பு – 1 tbsp

வெந்தயம் – 1/2 tsp

கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து , கடுகு, மிளகு சேர்த்து தாளித்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி என அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.

ஆறியதும் துருவிய தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் அதை ஒரு கிண்ணத்தில் வழித்துக்கொண்டு தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் மிளகு துவையல் தயார்.