நச்சுனு 10 கடி ஜோக்கு..! /Tamil joke

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம், காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம் ஆனால் அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும், அவரால் ஒரு குரலில்தான் பேச முடியும்.

என்னதான் உன் தலை சுத்தினாலும், உன் முதுகை நீ பார்க்க முடியுமா?

மீன் பிடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம்… நாய் பிடிக்கறவனை நாய்னு சொல்ல முடியுமா?

என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போடா முடியாது.

தேன் கொட்டினா வலிக்கும் … பாம்பு கொட்டினா வலிக்கும்… முடி கொட்டினா வலிக்குமா?

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்… பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

பொங்கலுக்கு கவர்மெண்ட்டுல லீவு கொடுப்பாங்க… ஆனா இட்லி, தோசைக்கு கொடுப்பாங்களா?

லைப்ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும். தலையில ஒண்ணுமே இல்லனா கிளார் அடிக்கும்

ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும், பாஸ்ட் ஃபுட் கடையில நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்…