மட்டன் குழம்பு செய்ய வேண்டுமா/ Do you want to make mutton gravy/mutton gravy eppti seivathu

தேவையான பொருட்கள்:

மட்டன் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 1

காய்ந்த மிளகாய் – 10

தனியா – 2 ஸ்பூன்

மிளகு – 2 ஸ்பூன்

பட்டை, லவங்கம் – சிறிதளவு

கசகசா – 1 ஸ்பூன்

தேங்காய் துருவல் – கால் கப்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

பூண்டு – 5 பல்

சோம்பு – கால் ஸ்பூன்

எண்ணெய் – 1 குழிக்கரண்டி அளவு

கறிவேப்பிலை,

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையானஅளவு

செய்முறை:

மட்டனை குக்கரில் தண்ணீர் 2 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 4 விசில் வேக விடவும். கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும். இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.

வெங்காயம் தக்காளியை நீளமாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் வேக வைத்த மட்டனை அதில் ஊற்றவும்.

பின்னர் அதனுடன் அரைத்த விழுது, தேவைாயன உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவைத்து எண்ணெய் தனியே மிதந்து வந்தவுடன் இறக்கவும். கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் விட்டு எடுக்கவும். இப்போது சுவையான மட்டன் குழம்பு தயார்.