முடி வளர்ச்சி உணவு பட்டியல்கள்/Hair growth food lists

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் காய்கறிகள், மற்றும் கீரை வகைகளை தினந்தோறும் சேர்த்துக்கொள்ளவேண்டும். காய்கறிமற்றும் கீரைகளில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும்இரும்புசத்துகள் அதிகம் உள்ளது. இந்த சத்துகள் அனைத்துமே முடிவளர்ச்சியை பராமரிக்கும். கீரையிலுள்ள விட்டமின் ஏ தலையில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. ஒரு நாளைக்கு 30 கிராம்கீரையை பயன்படுத்துவதன் மூலம் 50 சதவீத வைட்டமின்

சத்துகளையும் பெறலாம்.

பீன்ஸ்

காய்கறி வகைகளிலேயே . இது முடிவளர்ச்சிக்கும் மறு சுழற்சிக்கும் உதவுகிறது. தாவரங்களிலேயே அதிக புரதத்தைக்கொண்டது பீன்ஸ் தான்.

ஒமேகா 3 நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாக நிறைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களாக இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் இவற்றில் அதிகம் நிறைந்துள்ளன. கொழுப்பு நிறைந்த மீன்களில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் சத்துக்கள் அதிகம் உள்ளன.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒன்றில் 114 கிராம் பீட்டா கரோட்டின் உள்ளது. நமக்குதேவையான விட்டமின் ஏவின் 4 மடங்கு அதிகமாக பீட்டா கரோட்டின் உள்ளது. இந்த பீட்டா கரோட்டின் முடி உதிர்வை குறைக்கிறது.

ஆரோக்யமான கொழுப்பு சத்துநிறைந்த பொருளுக்கு ஒரு சிறந்த உதாரணம் அவகொடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட்.இவை சத்தானதோடல்லாமல் சுவையானதும் கூட.முடிவளர்ச்சிக்குபெரிதும் துணைபுரியும் வைட்டமின் இ இதில்நிறைந்துள்ளது. சுமார் 200கிராம் அளவு கொண்ட அவகடோவில் வைட்டமின் இ 21 சதவீதம் உள்ளது.

விதைகள்

நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகள் மட்டுமல்லாமல் ஒரு சில விதைகளில் குறைந்த கலோரி கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. மேலும் இவற்றை நாம் உட்கொள்ளும்போது நம் உச்சந்தலைக்கு நன்மை செய்வதோடு முடியின் பாதுகாப்பினை உறுதிசெய்கிறது.

துத்தநாகம், செலினியம் ,விட்டமின் இ இவற்றில் உள்ளது. சூரியகாந்தி விதை ஒரு அவுன்சில் 28 கிராமில் 50 சதவீத வைட்டமின் ஈயில் உள்ளது. பாதாம் முந்திரி, சியாவிதைகள், ஆளிவிதைகள் ஆகியவற்றை தினமும்சாப்பிடுவதன் மூலம் முடி வளர்ச்சி மற்றும்பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளலாம்.

உணவில் புரதம் இல்லாததால் தான் முடி உதிர்தல் ஏற்படுகிறது. கரோட்டின் எனப்படும் முடியின் புரதத்தை உற்பத்தி செய்வதற்கு பயோட்டின் மிக முக்கியமானது.புரதம் மற்றும் பயோட்டினின் சிறந்த மூலம் முட்டை. முடியின் நிலையை மேம்படுத்தவும் முடி வளர்ச்சியை அதிகரிக்க இது உதவுகிறது.