நா பிறழ் வாக்கியங்கள்: /Inflection sentence

 

1.ஓடுற நரியில

ஒரு நரி கிழநரி;

கிழநரி முதுகுல

ஒரு முடி நரைமுடி.

2.குலை குலையாய்

வாழைப்பழம் மழையில்

அழுகி மலையின் கீழே விழுந்தது.

3.ஆடுற கிளையில

ஒரு கிளை தனிக்கிளை

தனிக்கிளை தனில் வந்த

கனிகளும் இனிக்கலை

4.வீட்டுக்கிட்ட கோரை,

வீட்டுக்கு மேல கூரை,

கூரை மேல நாரை.

5.சரக்கு ரயிலைக்

குறுக்கு வழியில்

நிறுத்த நினைத்த

முறுக்கு மைனர்

சறுக்கி விழுந்தும்

முறுக்கு மீசை இறங்கவில்லை.

6.பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே

பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற

வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால்,

எந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில்

பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற

வைத்தியர் வந்து அந்தப்

பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?

7.ஙஞணநமன

நமனஙஞண

8.கொக்கு நெட்டக் கொக்கு,

நெட்டக் கொக்கு

இட்ட முட்டை கட்ட முட்டை.

9.அவள் அவலளந்தால்

இவள் அவலளப்பாள்

இவள்அவலளந்தால்

அவள் அவலளப்பாள்

அவளும் இவளும்

அவல் அளக்காவிட்டால்

எவள் அவலளப்பாள்?

10.சுத்துர பூமில இருந்து

சுத்தாத வானத்துக்கு போயி

சுத்தாத வானத்திலிருந்து

சுத்துர பூமிய பாத்தா

சுத்தாத வானம் கூட சுத்துர பூமி மாதிரி

சுத்தும்

11.ஒரு குடம் எடுத்து அரைகுடம் நிறைத்து

குறைகுடம் நிரப்பி நிறைகுடம்

ஆக்கினாள்.

12.ஒரு லாரி லாரி

இரண்டு லாரி லாரி லாரி

மூன்று லாரி லாரி லாரி லாரி

நான்கு லாரி லாரி லாரி லாரி லாரி

ஐந்து லாரி லாரி லாரி லாரி லாரி லாரி

ஆறு லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி

ஏழு லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி

எட்டு லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி

ஒன்பது லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி

பத்து லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி லாரி

13.வாழைப்பழம் அழுவி நழுவி

ஆழக்குழியில் கீழே விழுந்தது.

14. தூங்க மறந்தவன் படைப்பாளி

தூங்கி வாழ்பவன் பண்பாளி

விழிக்க மறந்தவன் சோம்பேறி

விழி போல வாழ்பவன் அறிவாளி

15.குழம்புல கோழி

வழிக்கிற களி,

கிளறக் கழி,

கழியெடுத்து ஒளி,

இது பழிக்குப் பழி

16.பழுத்த கிழவி

கொழுத்த மழையில்

வழுக்கி விழுந்தாள்!

17.கோரைப் புல்லில் சாரை கீரி பார்த்து சீறும்

18.பச்சை குழந்தை

வாழைப்பழத்திற்காக

விழுந்து விழுந்து அழுதது

19.குன்றூரில் குடியிருக்கும் குப்புசாமி

யின் குமரன் குப்பன்,

குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்

குதிரையின் குட்டியை குச்சியால்

குத்தினான்.

குதிரை குதியோ குதியேன்று குதித்தது.

20.வண்டி சிறியது,

வண்டிக்காரன் புதியது.

வண்டிக்காரன் புதியதால்,

வண்டி சாய்ந்தது.

21.குரங்கின் வாலும்

வாழைப்பழத் தோலும்

நாயின் வாலும்

சின்னப் பையன் வேலும்

22.கோடு போட்ட வீடு

கோலம் போட்ட வீடு

வேப்ப மர சந்து

வேணுகோபால் வீடு

23.இரட்டை மாட்டு வண்டி

வண்டி நிறைய மண்டி

மண்டி கிடக்கு விரலு தண்டி வெண்டி

24.ஊசி நூலில் பாசிக் கோர்த்து ராசியான

மாசி மாசம் காசிக்கு போனான்

25.புட்டும் புதுப் புட்டு

தட்டும் புதுத் தட்டு

புட்டைக் கொட்டிட்டு தட்டைத் தா.

26.ஏழைக்கிழவி வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்து வலிக்குது என்று விக்கி விக்கி அழுதால்

27.மலவாழை பறிக்க

மல மேல ஏறி

மழையில மாட்டிக்கிட்டு

வழியில சிக்கிக்கிட்டு

பாதியில வந்தாங்க

பாத தெறியாத இளசுக…

28.லாரியில ஏத்துன

இறாலு உருளுது பெரலுது

லாரியில…

29.வேலியில போற

வெள்ள காக்கா

வேண்டியவங்க வந்தா

சொல்லு காக்க…

30.புத்தா புது சந்தையில்

புது பெட்டியில புது கட்டில்ல

புட்டு இருக்கு மூட்டை கட்டிகிட்டு

பெட்டியை கொண்டு வா.

31.விழியும் புலியும் வேலியில் தாவி,

ஏறி இறங்கி, இறங்கி ஏறி,

ஏறி இறங்கி விளையாடினார்கள்.

32.கடக் மடக்

என முறுக்கை கடித்ததால்

படக் படக்கென பல் உடைந்தது.

33.கழுவுற மீனுல

நழுவுற மீனு,

நழுவுற மீனொரு

வாழ மீனு.

34.கல்லு முள்ளு தாண்டி மெல்ல வெல்ல

ஏதும் செல்ல பிள்ளையே, நில்லு

சொல்லு செல்லு.

35.கொக்கு போட்ட

முட்ட வெள்ள முட்ட

நல்ல முட்ட; நெட்ட

கொக்கு இட்ட முட்ட

வெள்ள முட்ட நல்ல

முட்ட

36.கோழி கொக்கர கோழி

கொழுகொழு கோழி

கொழுகொழு கோழி குத்தற கோழி

குத்தற கோழி கொக்கர கோழி

திங்கற கோழி

37.இங்கு அங்கு எங்கு போனாலும் நுங்குவை பங்கு போட்டு தின்னலாம்!

38. சேத்துக்குள்ள செவத்த புள்ள

சின்னப்புள்ள

தத்தித் தத்தி சிக்கிகிச்சு.

39.சித்திரம் வரைகிற

சித்திரக்காரன் சத்திர சுவர்ல

சித்திரம் வரைய சொன்னா

சத்திரத்தையே பத்திரம் போட்டு வித்துட்டான்.

40.மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.

41.பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்.

42.தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை

43.பக்தியில் முக்திய பக்தன் பக்தர்களை

பத்துப் பத்துப் பேராக பந்திக்கு அழைத்தார்

44.ஏணி மேல கோணி, கோணி மேல

குண்டு, குண்டு மேல புல்லு,

புல்லுக்குள்ள பூச்சி, எது எனக் கேட்ட

ஆச்சி விட்டது ஆயுள் மூச்சி .

45.காலம் நல்ல காலம்,நல்ல நல்ல நாளும்

மெல்ல மெல்ல நாளும் நம்மை வந்து

சேரும் என எண்ணி எண்ணி நாளும்

போடு நல்ல தாளம்.

46.வாழ வழியத்து பீதி அடைந்த வைத்தி

சம்பாதிக்க நேர்த்தியான வழி பார்த்து,

பார்த்தியிடம் தன் கதிக்கு வழி கேட்க,

பார்த்தி செய்த சதியால் வைத்தி

கைதியானான்.