மாதவிடாய் சீக்கிரம் வர இதை சாப்பிடுங்க போதும் / How to Get Periods Fast – 7 Best Ways

 

மாதவிடாய் காலங்கள் பெண்களுக்கு யுத்த களத்தில் நிற்பது போல பதற்றத்தையும், வலியையும் ஏற்படுத்தும். சில யுத்தம் நெருங்கும் முன் கொள்ளும் பயத்தை மாதவிடாய் நெருங்கும்போது எதிர் கொள்வர். மாதவிடாய் முறையாக வராதவர்கள் அதனால் மன அழுத்தத்திற்கும் மற்ற உடல் நல பிரச்சினைகளுக்கும் ஆளாகுவர்.

மாதவிடாய் நாட்களில் சந்திக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே சந்தித்துவிட்டால் விழாக்காலங்களில் சகஜமாக இருக்க முடியும். கொஞ்சம் தாமதமாக வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்து கொள்பவர்கள் அதற்காக மருந்து, மாத்திரைகளை நாடி செல்வர். ஆனால் இயற்கை முறையில் மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.

பப்பாளி

பப்பாளியை எடுத்து கொள்வதால் மாதவிடாய் சீக்கிரமே வந்துவிடும். கருவையே கலைக்கும் வீரியம் பப்பாளிக்கு உண்டு. மாதவிடாய் சீக்கிரம் வர வேண்டும் என நினைத்தால் அதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே பப்பாளியை உண்ணுங்கள். பப்பாளியை அடிக்கடி எடுத்து கொள்வதால் மாதவிடாய் உண்டாகும்.

கொத்தமல்லி விதைகளின் மகிமை

கொத்தமல்லி விதைகள் மாதவிடாய் முன்கூட்டியே வருவதற்கு உதவுகிறது. ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக சுண்டும் வரை கொதிக்க வைத்து அதனை மிதமான சூட்டிலோ ஆறிய பிறகோ அருந்தலாம். மாதவிடாய் சீக்கிரம் வர வேண்டும் என நினைத்தால் அதற்கு ஏழு நாட்களுக்கு முன்பே இதை அருந்தலாம்.

இஞ்சி டீ!

மாதவிலக்கு முறையாக இஞ்சி டீ நல்ல தேர்வு. இஞ்சியின் குணநலமே கருப்பையை சுற்றி வெப்பத்தை அதிகரிக்கும். ஆகவே மாதவிலக்கு ஏற்பட இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறுடன் தேன் கலந்து அருந்தலாம். மாதவிடாய் ஏற்படக் கூடிய தேதிக்கு சில நாள்களுக்கு முன்பாக இஞ்சி சாற்றை, நீருடன் கலந்து வெறும் வயிற்றில் அருந்துங்கள். சிலருக்கு வயிற்றுப்புண் இருந்தால் இந்த சாறு வயிற்றில் வலி ஏற்படுத்தும். அதனால் கவனமாக எடுத்து கொள்ளுங்கள்.

எள் எடுத்து கொள்ளுங்கள்

எள் உண்ணும் போது நமது உடலில் அதிக வெப்பம் உண்டாகலாம். மாதவிடாய் ஏற்படுவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பிருந்தே தினமும் எள்ளை எடுத்துக் கொள்ளலாம். தேவைக்கு ஏற்றபடி எடுத்து கொண்ட சூடான நீரில் ஒரு தேக்கரண்டி எள்ளை போட்டு அருந்தலாம்.

இந்த பொருள்களை அடிக்கடி உண்ணுங்கள்!

பாதம் எடுத்து கொள்வதால் நார்ச்சத்து, புரதச்சத்து கிடைக்கிறது. இதனால் ஹார்மோன்கள் சீராக இயங்குவதால் மாதவிடாயும் சரியான நேரத்தின் ஏற்படும். அன்னாசி பழத்தை எடுத்து கொள்வதால் உடலில் வெப்பம் உருவாகும். இது மாதவிடாய் காலத்தில் சிறந்தது. தயிர் குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அடிக்கடி எடுத்து கொள்வதால் மாதவிடாயை சீராக்கும். நாள்தோறும் திராட்சை சாறு அருந்தினால் மாதவிடாய் சீராகும்.