kalki avatar

கல்கி அவதாரம் பற்றிய தகவல்கள் kalki avatar predictions in tamil

kalki avatar

வணக்கம்! எப்போதெல்லாம் இந்த உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் அதை அழிக்க ஒரு மாவீரன் வருவான் என நாம் படத்திலோ அல்லது புத்தகங்களிலோ படித்து கேள்விபட்டிருப்போம் அப்படி கூறபட்ட ஒரு அவதாரம் தான் இந்த கல்கி அவதாரம் இந்த உலகில் அதர்மம் தலைதூக்கும் போது அதை அழிக்க வரப்போகும் ஒருவர்தான் இந்த கல்கி என இந்து முறைப்படி கூறப்பட்டுள்ளது. இந்த கல்கி அவதாரம் எப்போது நடைபெறும் எங்கே என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கல்கி அவதாரம்-kalki avatar

இந்த கல்கி அவதாரம் என்பது இந்து புராணம் மட்டுமில்லாமல் இஸ்லாமில் இமாம் மெஹதி என்றும் கிறிஸ்துவ முறைப்படி இயேசுவின் இரண்டாம் வருகை புத்த மதத்தில் மைத்ரிய அவதாரம் என்று இந்த கல்கி அவதாரம் பற்றிய குறிப்புகள் உலகம் முழுவதும் பெயர்கள் மட்டும் மாறி காணப்படுகின்றன.

இந்த கல்கி அவதராமானது விஷ்ணுவின் கடைசி மற்றும் பத்தாவது அவதாரமாக கூறப்படுகிறது. இவர் 4-யுகங்களில் இறுதி யுகமான கலியுகத்தில் பிறப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

யுகம்

முதலில்ல இந்த யுகங்களை பற்றி நாம் பார்க்கலாம் இந்த யுகங்கள் ஆனது மனித பரிணமித்து வந்த பாதையை குறிப்பிடுகிறது எனலாம் அதாவது மனித வாழ்க்கையை அளக்க பயன்படும் ஒரு கால அளவுகோல் இது நான்கு பகுதிகளாக பிரித்து கூறியிருப்பார்கள் . கிருத யுகம்,திரேதா ,துவாபரா யுகம் ,கலியுகம் இவற்றை நான்கையும் சதுர் யுகம் என்பார்கள்.

கிருத யுகம்

இந்த கிருத யுகமானது மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் கடவுள்களால் ஆழப்பட்டதாக சொல்லப்படுகிறது. அன்றைய மக்கள்  அறநெறியுடன் வாழ்வார்கள் என்றும். மனிதர்கள் சராசரிாக 5 அடி உயரமும், 840 வருடமும் வாழ்ந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திரேதா யுகம்

 இந்த யுகமானது, 12,96,000 ஆண்டுகளை கொண்டதாகும்,நான்கில், மூன்று பகுதி மக்கள் அறநெறியுடனும் ஒரு பகுதி மக்கள் நேர்மை இல்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 5 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 616 வருடம் வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

துவாபர யுகம்

இந்த யுகமானது 8,64,000 ஆண்டுகள் கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த யுகத்தில் வாழக்கூடிய மக்கள் சரிபாதி பேர் நேர்மையாகவும் மற்றொரு பாதி நேர்மையில்லாதலும் இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், 300 வருடமும் வாழ்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கலியுகம்

kalki avatar
source:

மேற்கண்ட 3 யுகங்களும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது நாம் வாழக்கூடிய யுகம்தான் கலியுகம் இந்த யுகத்தில் மொத்தம் 4,32,000 ஆண்டுகள் இருக்கும் அதில் தற்போது வெறும் 5- ஆண்டுகளே முடிவடைந்துள்ளது. இந்த யுகத்தில் வாழக்கூடிய மக்கள்  நான்கில், ஒரு பகுதி மக்கள் அறநெறியுடனும் மற்ற மூன்று பகுதி மக்கள் அறமில்லாமலும் வாழ்வார்கள் என கூறப்பட்டுள்ளது. மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 120 வருடம் வாழலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது நாம் வாழக்கூடிய காலகட்டத்தில்தான் விஷ்ணுவின் இறுதி அவதாரமான கல்கி அவதாரமெடுப்பார் என்றும் மாயநகரமான ஷாம்பலாவில் அவர் பிறப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் பிறக்கும்போது உலகில் நடக்ககூடிய ஒரு சில நிகழ்வுகளை அன்றே கணித்து கூறியுள்ளனர் அதை பற்றி காண்போம்.

இந்த கல்கி இந்த உலகில் பிறக்கும்போது இந்த உலகில் ஓடக்கூடிய வற்றாத நதிகள் வற்றும் என்றும் குடிப்பதற்கு மக்களுக்கு தண்ணீர் இல்லாமல் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது இதற்கு காரணமாக புவியின் வெப்பமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

பல நூற்றாண்டுக்கு முன்பாகவே அவர்கள் புவி வெப்பமயமாதல் பற்றி கூறியிருப்பது நமக்கு வியப்பாகதான்உள்ளது. இதனால் புவியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பசியால் வாடுவார்கள் என்றும்கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக மனித வாழ்நாள் குறைந்து 30-வயதிலேயே அவர்கள் இறப்பார்கள் என்றும் சிறுவயதிலேயே அவர்கள் இளமையை இழப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் கல்கி பிறப்பெடுக்கும்போது பெண்கள் சிறுவயதிலேயே பருவமடைவார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கணவன் மனைவிக்கும் இடையே உள்ள உறவானது உண்மையான உறவாக இல்லாமல் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.அப்போது அவர்களிக்கிடையே அன்பு ஆனது மறைந்து போகும் எனவும் அவர்கள் எழிதியுள்ளார்கள்.

kalki avatar

சுயநலம்,சோம்பைறிதனம்,மூர்கதனம் போன்ற குணங்கள் மனிதர்களிடையே காணப்படுமாம். இதுமட்டுமல்லாமல் ஆட்சி செய்யும் மன்னனே மக்களை சுரண்டுவான் என குறிப்பிடுகிறார்கள் அதாவது இந்தகால அரசியல்வாதிகள்.இந்த அரசியல்வாதிகளை கட்டுபடுத்துபவர்களாக பெரும் நிறுவனங்களின் முதலாளிகள் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்படி இவையெல்லாம் நடக்கும்பொழுது முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் விஷ்ணு தனது கல்கி அவதாரத்தை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த உலகில் மூன்றுகடல் சங்கமிக்கும் ஒரே இடம் என்னவென்றால் அது நம்நாடு இந்தியாதான் இதுமட்டுமல்லாமல் கல்கி கருமை நிறத்தில் இருப்பார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இது தென்னிந்தியாவாக கூட இருக்கலாம் , கல்கி ஷாம்பலா என்னும் இடத்தில்தான் பிறப்பார் என புரணாம் குறிப்பிடுகிறது ஆனால் ஷாம்பலா என்ற ஒரு இடம் தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே இல்லை . பலங்காலத்தில் புரணாங்கள் எழுதபட்ட காலத்தில் இந்த ஷாம்பலா இருந்திருக்கலாம் என்றும் அதன்பிறகு காலப்போக்கில் அதன் பெயர் மாற்றபட்டிருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.

Related: மாயநகரம் ஷாம்பலா இருப்பது உண்மையா

ஷாம்பாலவில் பிறக்கூடிய கல்கி பிறவிலேயே கோபம் மிகுந்த நபராகவும், சுயகட்டுபாடு மற்றும் போர் கலுகளில் திறன்பெற்றவராகவும் இருப்பார் என கூறப்பட்டுள்ளது. அப்படி பிறந்த இவருக்கு பரசுராமர் அவருக்கு பயிற்சியளிப்பார் என்றும் பராணம் கூறுகிறது.

இப்படி அனைத்தையும் கற்றுகொண்ட கல்கி ஒரு அசுரனாக மாறி இந்த உலகை அழிப்பார் என்றும் கூறப்படுகிறது அப்படி அவர் உலகை அழிக்கசெல்லும்போது ஒரு மிகபெரிய படையுடனும் ஒரு வெள்ளைகுதிரையில் மிகப்பெரிய வாளுடன் செல்வார் என கூறப்படுகிறது. இப்படி கல்கி இந்த உலகை ஒரு முறை சுற்றி வரும்போது இந்த உலகில் இருக்கூடிய மக்ள் பாதிக்கும் மேற்பட்டோர் அழிந்திருப்பார்கள் எனவும் மீதமுள்ளவர்கள் நல்ல என்னமுள்ளவர்களாக இருந்தாலும் அவர்களும் சில காலங்களில் இறந்துவிடுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது கல்கி அவதாரத்தின் முக்கிய நோக்கம் இந்த உலகை மறுசுழற்சி செய்வது எனலாம். அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து பரிணமத்தை தொடங்குவதுபோல ஆம் அனைத்தும் இந்த உலகில் முதலில் இருந்து தோன்றும். இப்படி பிறக்கூடிய கல்கி கலியுகத்தின் இறுதியில்தான் பிறப்பார் என கூறப்பட்டுள்ளது ஆனால் நாம் இப்போது கலியுகத்தின் தொடக்கத்தில்தான் உள்ளோம் இன்னும் 3,00,000 வருடவ்கள் இருக்கின்றன.

இதை பற்றிய உங்களின் கருத்து என்ன கலியுகம் பற்றிய புரணாங்களின் கணிப்புகள் எப்படி உள்ளது உண்மையில் கல்கி இந்த உலகில் அவதரிப்பார என்பதையும் பதிவிடுங்கள்.

தொடர்புடையவை: கருடபுராணம் பற்றிய உண்மைகள்