இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்துக்கும் அதற்கான பலன் உனக்கு கிடைக்கும் என பல பேர் கூறி கேள்வி பட்டிருப்போம். உண்மையில் நாம் இறந்த பிறகு சொர்கம் நரகம் இரண்டாக பிரித்து நாம் செய்த பாவங்கள் அனைத்திற்கும் நம்மளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டனைகள் இருக்கும் என்று இந்துக்களின் நம்பிக்கைகளின் ஒன்றான கருட புராண புத்தகம் கூறுகிறது .இந்த கருட புராணம் பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
கருட புராணம் வரலாறு- garuda puranam history
இந்த கருடபுராணம் இந்து சமய புராணங்களில் ஒன்றாகவும் உள்ளது. வைனவ புராணமான கருடபுராணம் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போல அமைந்திருக்கும். மரணத்திற்கு பின்னால் இருக்க வாழ்க்கைச் சடங்குகள் மறுபிறவி போன்றவைகளைப் இதனோட இரண்டாம் பகுதி விளக்குகிறது.
இந்த புராணம் பல வானியல் மருத்துவம் இலக்கணம் நவரத்தினத்தின் உட்கட்டமைப்பு பண்புகள் என அனைத்தையும் பற்றி கூறுகிறது . மொத்தம் 19,000 செய்யுள்களைக் கொண்ட இந்த கருடபுராணம் பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த பெயர்களையும் கொண்டிருக்கிறது.
கருட புராணத்தின் தண்டனைகள்
கருடபுராணத்தில் சொல்லப்பட்டுகின்ற நரகங்களும் பாவம் செய்களும் அதற்கான தண்டனை விவரங்களை பற்றி பார்க்கலாம் .
- பிறகுக்கு சொந்தமான மனைவியை அபகரிப்பது மற்றும் கடத்துவது மற்றவர்களின் பொருளை ஏமாற்றி அவர்களிடம் பறிப்பது இந்த மாறியான பாவசெயலெகளுக்கு தாமசிற என்ற நரகத்திற்கு அனுப்படுவார்கள். இங்கு பாவம் செய்தவர்களை உடையின்றி முற்களால் ஆன கட்டைகள் கற்களை கொண்டு மக்களை தாக்குவார்கள்.
- கணவனும் மனைவியும் சேர்ந்து வாழமல் ஒருருவருக்கொருவர் மாற்றி ஏமாற்றிவதுத அதாவது கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் போன்ற செயலுக்கு அந்தாமிஸ்ரா என்ற நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். இங்கு உடலில் உடையின்றி கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிப்பார்கள்.
மரணம் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்
- பிறரின் குடும்பத்துக்கு தீங்கு மற்றும் நம்பிக்கை துரோகம் செய்தல் அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது பிரிப்பது அழிப்பது மற்றவர்களின் நம்பிக்கையை உடைப்பது இந்த மாதிரியான வேலைகளை செய்தால் ரௌரவ அப்படிங்கிற நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். அந்த இடத்தில் பாவம் செய்தவர்களை சூலத்தால் குத்தி துன்புறுத்துவார்கள்.
- அடுத்து உங்க குடும்பத்த கொடூரமாக வதைக்கிறது பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்கிறது இந்த மாதிரி பாவச்செயல்களுக்கு மகா ரௌரவ நரகம் கிடைக்கும் இந்த இடத்தில் குரு அப்படின்னு சொல்லப்படுற பாம்பு போன்ற கோரமான மிருகம் பாவம் செய்தவர்களை கொடூரமாக துன்புறுத்தும்.
- அடுத்தது சுவையான உணவுக்காக வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைகளை செய்வது மற்றும் சுய நலத்துடன் மற்றவர்களுக்கு தீங்கு .செஞ்சா கும்பிபாகம் அப்படின்னு சொல்லப்பட்ர நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். அந்த இடத்துல அடுப்புல வைக்கப்பட்டிருக்கிற எண்ணெய் கொப்பரையில் போட்டு எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள் இதுதான் இருக்கரதிலேயே அதிகமா அனுபவிக்கப்படும் ஒரு தண்டனை.
- வாயில்லாத சிறு உயிர்களை துன்புறுத்தினால் அவர்களுக்கு அந்தகோபம் என்ற தண்டனை கொடுக்கப்படும். இங்கு பாவம் செய்தவர்களை அவர்கள் எந்த உயிரினத்தை துன்புறுத்தினார்களோ அது பல மடங்கு பெரிதாக மாறி உங்களை துன்புறுத்தும்.
மேலே குறிப்பிட்ட தண்டனைகளை தவிர இன்னும் சில கொடூரமான தண்டனைகளும் இந்த கருடபுராணத்தில் குறிப்பிடபட்டுள்ளன. இவற்றில் ஏதோ ஒன்றை நாம் எப்போதாவது செய்திருப்போம் . இது ஒரு குறிப்பிட்ட மத்திற்கு மட்டும் என்று பார்காமல் தவறுககளை மத நம்பிக்கையை தாண்டி அது தவறு என உணர வேண்டும் இனியாவது இது போன்ற தவறுகளை நாம் செய்யாமல் இருப்போம்.
நன்றி!