கடல்கண்ணிகள் இருப்பது உண்மையா mermaid mystery in tamil

               கடல் கண்ணிகள் உண்மையா

mermaid in tamil
வணக்கம் நண்பேர்களே! இன்றைய பதிவில் ஆதி காலம் முதல் தற்போதைய காலம் வரை இந்த உலகில் இருக்ககூடிய மக்களால் நம்ப பட்ட ஒரு விடயம் இந்த mermaid அதாவது கடல்கண்ணிகள் இந்த கடல்கண்ணிகள்(mermaid mystery) உண்மையில் உள்ளார்களா இல்லை மக்களால் உருவாக்கபட்ட கட்டுகதையா என்பதை காண்போம்.

கடல்கண்ணிகள் வரலாறு-mermaid history

கடல்கண்ணிகள்

இந்த கடல்கண்ணிகள் என்பது இன்று பேசப்படுபவை அல்ல பலநூறு ஆண்டுகளாகவே மக்களிடையே நம்பபட்டும் பேசப்பட்டும் வந்த ஒரு தலைப்பு, இவை உண்மையில் இருந்ததற்கான சாத்தியகூறுகள் உள்ளதா என்று ஆராய்ந்தால் அறிவியல்படி இன்றுவரை எந்த வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை ஆனால் பண்டையகால கல்வெட்டுகளில் இந்த கடல் கண்ணிகள் நிறைய இடத்தில் காணப்படுகின்றன குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கிரேக்க கல்வெட்டுகளிலும், எகிப்திய கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல இராமாயணத்தில் கூட இந்த கடல் கண்ணிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த கடல்கண்ணிகள் பற்றி மக்களால் நம்பபடுவது என்னவென்றால் இவை பார்ப்பதற்கு மனித உடலையும் மீனின் வால்பகுதியையும் கொண்டு ஒரு வித்தியாசமான உருவமைப்பில் இருக்கும் ஒரு கடல்வாழ் உயிரினம்  என்றும் இந்த கடல்கண்ணிகள் சபிக்கபட்டவை என்றும் கூறப்படுகிறது. இந்த கடல்கண்ணிகளை முதன் முதலில் பார்த்தவர் கிரிஸ்டோபர் கொலம்பஸ் என்றும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல்கண்ணியின் கோவில்-mermaid temple

mermaid
இந்த கடல்கண்ணிகளுக்கு என்று ஜப்பான் நாட்டில் கோவிலே கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் மவுன்ட் ஃபுஜி என்ற இடத்திலிருந்து அருகில் உள்ள ஒரு கோவில்தான் இந்த கடல்கண்ணியின் கோவில் இது கிட்டதட்ட 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கோவிலில் ஒரு கடல்கண்ணியின் பதப்படுத்தபட்ட பிணத்தையும் கண்டறிந்துள்ளனர். ஆனால் இதனை ஆய்வு செய்யும்பொழுது இந்த உடல் போலி என்பது தெரியவருகிறது.
இப்படி இந்த கடல்கண்ணிகள் பற்றி நிறைய வீடியோக்களும் நிறைய புகைப்படங்களும் இண்டர்நெட்டில் உலாவருகின்றண ஆனால் அவை உண்மைய பொய்யா என்றால் எதற்கும் ஒரு தெளிவான  ஆதாரம் என்பது கிடையாது அதன்காரணமாக இந்த கடல் கண்ணிகள் என்பது இன்றுவரை ஒரு கட்டுகதையாகவே நம்பப்படுகிறது.
                                                                         நன்றி!