
வணக்கம்! இந்த பதிவில் உங்களை அடேங்கப்பா என்ற சொல்ல வைக்கும் அளவிற்கு சில சுவாரஸ்யமான உண்மைகளை(top 10 facts) பற்றிதான் காணப்போகிறோம்.
நெருப்புகோழியின் மூளை

நாம் அனைவரும் நினைகுகிறோம் மூளையானது கண்களை விட பெரிதாக இருக்குமென்று ஆனால் இதனை பொய்யாக்கும் வகையில் ஒரு நெருப்புகோழியின் மூளையானது அதன் கண்களை விட மிகச்சிறியது என தெரிந்து கொள்ளுங்கள்.
வானத்தை பார்க்காத விலங்கு

இந்த உலகில் வானத்தை பார்க்காமலே பிறந்து இறந்துபொகும் ஒரே விலங்கு பன்றி மட்டும்தான்.ஆம் பன்றியை நாம் தூக்கி வானத்தை காமிக்காத வரை அதனால் வானை பார்க்க இயலாது.
சாகும் வரை வளரும் உறுப்பு

நம் மனித உடலில் நாம் பிறந்தது முதல் இறக்கும் வளரக்கூடிய ஒரே உடல் உறுப்பு நம் காது மற்றும் மூக்கு மட்டும்தான். மற்ற உற்பெபுகள் அனைத்தும் குறிப்பிட்ட வயதில் தனது வளர்ச்சியை நிறுத்தி விடும்
தண்ணீரில் மிதக்கும் பழம்

தண்ணீரில் பழங்களை போட்டால் அவை மூழ்கி விடும் என கூறுவார்கள் ஆனால் ஆப்பிளை நீங்கள் தண்ணீரீல் போட்டால் அது மிதக்கும். இதற்கு காரணம் மற்ற பழங்களை போல் ஆப்பிள் அடர்த்தியாக இல்லாமல் அதற்கிடையல் காற்று நுழைவதற்கான இடைவெள உள்ளது இதனால் ஆப்பள் தண்ணீரீல் மிதக்கிறது
பின்னோக்கி பறக்கும் பறவை

பறவைகள் வானில் பறக்கும் போது சிறகுகளை முன்னும் பின்னும் அடித்துதான் பறந்து பார்த்திருப்பீர்கள் ஆனால் சிட்டுக்குருவினாது சிறகுகளை பின்னோக்கி அசைத்து முன்னோக்கி பறக்கும் திறன் பெற்றது.
குழந்தைகளுக்கு உண்மையில் கண்ணீர் வருமா

நாம் அனைவருக்கும் தெரியும் பிறந்த குழந்தைகள் இந்த உலகிற்கு வந்தவுடன் அழுவார்கள் என்று ஏன் உங்களுடைய குழந்தை தம்பி தங்கை மார்கள் கூட அழுது நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இதில் நீங்களை ஒன்றை கவனிக்க தவறியுள்ளீர்கள் அதுஎன்னவென்றால் பிறந்த குழந்தைகள் அழுவார்கள் ஆனால் கண்களில் கண்ணீர் இல்லாமல் அழுவார்கள் ஆம் பிறந்த குழந்தைகளுக்கு கண்களில் கண்ணீர் வருவதில்லை அவர்கள் வெறும் சத்தம் மட்டுமே போடுவார்கள்.
கருப்பு வெள்ளை கனவுகள்

உங்களுக்கு வயது 30-க்கும் குறைவாக இருந்தால் இந்த மாதிரியான கனவுகளை நீங்கள் கண்டிருக்க வாய்பில்லை அதுஎன்னவென்றால் கருப்பு வெள்ளை கனவுகள் . இந்த உலகில் இருக்க கூடிய 12% மக்கள் இன்னும் தங்கள் கனவுகள் கருப்பு வெள்ளை நிறமாகவே உள்ளது என கூறுகின்றனர். இதை கூறிய அனைவரும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எனலாம் . நீங்கள் இளம் வயதாக இருந்தால் உங்கள் கனவுகளில் பல வண்ணங்களை கண்டிருப்பீர்கள் ஆனால் முதியவர்களோ கனவுகளை கருப்பு வெள்ளை நிறத்திலே காண்கின்றனர்.
கோழிகளுக்கு காண்டக்ட் லென்சு

கோழிகளுக்கான காண்டாக்ட் லென்ஸ்கள் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 1980 களில் ஒரு அமெரிக்க நிறுவனமான Animalens விவசாயிகளின் கோழிகளுக்கு சிவப்பு நிற கான்டாக்ட் லென்ஸ்களை வழங்கியது, இது கோழிகளின் முட்டையிடும் உற்பத்தியை மேம்படுத்தியது. சிவப்பு லென்ஸ்கள் மூலம் கோழிகளின் பார்வைதிறன் குறைந்ததால் அதனால் அவை ஒன்றையொன்று தாக்காததாலும் ஆக்கிரமிப்பு குறைந்தது. இருப்பினும், இந்த புதுமை பிடிக்கவில்லை, ஏனெனில் லென்ஸ்கள் காரணமாக கோழிகளின் கண்பார்வை கடுமையாக மோசமடைந்தது.
மூத்தவர்கள் குண்டானவர்கள்

பிறப்பு வரிசை நமது உடல் எடையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனலாம். உதாரணமாக, முதலில் பிறந்த குழந்தைகள் அவர்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளை விட எடை அதிகமாக இருக்கின்றனர் உதாரணமாக உங்களின் அக்கா அல்லது அண்ணன் உங்களை விட எடை அதிகமாக இருப்பார்கள். இது ஏன் தோன்றுகிறது என்பதை விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை, இது தொப்புள்குடிக்கு சம்பந்தபட்டதாக இருக்கலாம் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
அதிக பிறப்புகள்

இந்த உலகில் இருக்ககூடிய பெரும்பாலான மக்கள் ஆகஸ்டு மாதத்தில் பிறந்தவர்களாக உள்ளனர் .
source:bbc
source:brightside