how to study effectively in tamil திறன் பட படிப்பது எப்படி ?

       HOW TO STUDY EFFECTIVELY

how to study effectively
                      அனைவருக்கும் படிப்பது என்பது  ஒரு கடினமான செயலாக  உள்ளது. ஏனெனில்  அனைவருமே புரிந்து படிப்பதில்லை  படிக்கும் மாணவர்கள்  அதை மனப்பாடம்  செய்து படிக்காறார்கள்  இந்த ஒரு காரணமே படிப்பது கடினமாக உள்ளது. இது மட்டுமின்றி  படிக்கும் மாணவர்கள்  அதனை ஒரு கடினமான செயலாகவே கருதுகின்றனர். படிப்பது என்பது கசப்பாகே உள்ளது. ஒரு மாணவன் திறன்பட படிப்பதற்கு ஒரு பத்து  விதிகள்  உள்ளன . அதை கடைப்பிடித்தாலே படிக்கும் மாணவர்கள் திறன்பட படிப்பார்கள்.

CHANGE YOUR MIND

        படிக்காமல் இருக்க  ஒவ்வொருவருக்குமே ஒரு கெட்ட பழக்கம் இருக்கும்  தாங்கள் படிக்காமல் இருக்க  தங்கள் மனதில்  தவறான காரணத்தை  ஏற்படுத்தி கொள்வர்.   அனைவரும் படிக்கும் முன்பு  ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தாலே  படிக்கும் விசயம் மனதில் நிற்கும்.  ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தால்  நீண்ட நேரம் படிக்கலாம்.
 

SET YOUR GOALS

how to study effectively
           சிலர் படிப்பதற்கு ஆர்வமே வரவில்லை  என்று கூறுவர்  ஏன் ஆர்வம் வரவில்லை என்றால்  தங்களுக்கு என்று ஒரு  இலக்கினை வைக்காமல் இருப்பர். அனைவருமே நாம் எதற்கு படிக்கிறோம் என்று  ஒரு இலக்கினை வைத்து படிக்க வேண்டும்.  எனவே ஒரு இலக்கு வைத்து படிக்கும் போதுதான்  மிகவும் சுலபமாக இருக்கும்.
 

TAKE DO TO LIST

how to study effectively
             நாம் படிக்க உட்கார்ந்த  உடனே நம் மனதிற்கு 5 நிமிடத்திலேயே  படிக்கும் ஆர்வம் போகிவிடும். படிப்பதற்கு முன்பு   எதை படிக்க போகிறோமோ அதை  ஒரு  திட்ட மிட்டு படிக்க வேண்டும்.  அதாவது என்ன படிக்க போகிறோம் மற்றும் அதில் என்ன தலைப்புகள்  உள்ளன  அதற்கு எவ்வளவு நேரம் என்பதை திட்டமிட்டு படிக்க வேண்டும்.

TAKE  A NOTES

               நாம் படிக்கும் போது  படிக்கும் பாடத்தை  ஒரு குறிப்பு எடுத்து படிப்பதன் மூலம் நாம் அதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.  படிக்கும் போது குறிப்பு எடுப்பதன் மூலம் ஒரு ஆர்வத்தை தூண்டும்.
 
              நாம் படிப்பதற்கு முன்பு ஒரு  கால அட்டவனை போட்டு படிப்பது மிகவும் எளிமையாக இருக்கும்.  அதை கடைப்பிடித்து  முடிக்கும் வரை  ஒரு குறிக்கோளாக இருந்து படித்து முடிக்க வேண்டும்.
 

REMEMBER YOUR GOALS

               அடிக்கடி தாங்களை தங்களது  இலக்கினை  ஞாபகபடுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலம் தங்களது குறிக்கோளை எளிதில்  அடைய முடியும்.  அதுமட்டுமின்றி தங்களது இலக்கினை எழுதி கண் படும் இடத்தில் வைத்து கொள்ள வேண்டும்.
 

TAKE A BREAK

how to study effectively
            நாம் படிக்கும் போது   எவ்வளவு நேரம் படிக்கிறோமோ அதற்கு ஏற்றவாறு இடைவெளி விட்டு படிக்க வேண்டும்.  அதாவது 2 மணி நேரம் படிக்கிறோம் என்றால் 20 நிமிடம் இடவெளி விட்டு  படிக்க வேண்டும்.

REFRESH YOUR BRAIN & BODY

                         படிக்கும் முன்பு நன்றாக தூங்க வேண்டும்.  தூங்கி முளித்தபிறகு  நமது மூளை ஆர்வமுடன் இருக்கும்.   அப்பொழுது படித்தால்  நமது மூளை அப்படியே  ஏற்றுகொள்ளும்.
                       படிக்கும் முன்பு நன்கு குளித்துவிட்டு வந்து படிக்கும் போதும்  நல்ல மனதில் பதியும்  இவ்வாறு குளித்து வந்து படிக்கும்  அனைத்தும் மூளையில்  பதியுமாம்.

TAKE A CUP OF COFFEE

how to study effectively
                     நாம் படிக்கும் போது கொஞ்சம் இடைவெளி விட வேண்டும். இந்த இடைவெளியில்  coffee,tea குடித்து படிப்பதன்  நம் மனதில் நன்கு பதியும்.