மரணம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் facts about life after death in tamil

 facts about life after death

facts about death
இந்த உலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் பிறப்பு என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக இறப்பும் உண்டு இதை எவராலும் தடுக்க முடியாது கடவுளாகிய இயேசுவே இறந்த பிறகுதான் கடவுளாக போற்றபட்டார் இத்தகைய மரணம் பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகள் பற்றி காண்போம்.

இறப்புகள்daeth facts

ஒவ்வொரு நொடிக்கும் இந்த உலகத்தில் மூன்றிலிருந்து நான்கு நபர்கள் உயிரழக்கின்றனர் அதுமட்டுமல்லமால் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.

இறந்தபின் என்ன நடக்கும்

facts about death

நாம் அனைவருக்கும் இருக்க கூடிய ஒரு பொதுவான சந்தேகம் என்னவென்றால் நாம் இறந்த பிறகு எங்கு செல்கிறோம் என்பதுதான். இதற்கு இறையாண்மை படி எப்படி கூறுவார்கள் என்றால் நீ உன்னுடைய வாழ்க்கையில் நல்ல கர்ம வினைகளை புரிந்திருந்தால்  உனக்கு சொர்கம் என்றும் அதுவே தீய வினைகளை புரிந்திருந்தால் நரகத்திற்கு செல்வாய் என்றும் கூறப்பட்டிருக்கும் . இதை அறிவியாலளர்கள் ஒப்புகொள்ளவில்லை.

இறப்பை பற்றிய ஆராய்ச்சிகள்

life after death
எப்படி மரணத்தை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள் என்ற கோள்வி எழும். அதாவது ஒரு சிலர் பிழைப்பதற்கான வாய்ப்புகளே இல்லை என்று மருத்துவர்கள் கூறுவார்கள் ஆனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பார்கள். இப்படி உயிர்பெற்ற மக்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு சில ஆய்வுகளை மேற்கோள்கின்றனர் அதில் அந்த மனிதர்கள் கூறுவது என்னவென்றால் நான் முதலில் வெள்ளையாக மேகம் போன்றொரு இடத்தை கண்டேன் என்றும் அந்த இடம் மிகவும் வித்தியாசமாக இருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். இதை தவிர அறிவியல் அறிஞர்களால் வேறொன்றையும் கண்டறிய வில்லை.

ஆத்மா என்றால் என்ன?

death facts
பெரும்பாலான மக்கள் எப்படி நம்புகிறார்கள் என்றால் நம் உடலில் உள்ள ஆத்மா உடலை விட்டு பிரியும் நிகழ்வே இறப்பு என்று நம்பபடுகிறது. இந்த ஆத்மாவிற்கு அழிவே இல்லை என்றும் கூறப்படுகிறது.

இறப்பும் மறுஜென்ம்மும்

facts about death

இப்படி இறந்த பிறகு உடலை விட்டு வெளியே வரக்கூடிய ஆத்மாவானது மற்றொரு உடலுக்கு செல்லும் இதைதான் மறுஜென்மம் என்று குறிப்பிடுகிறார்கள் புதிய உடலுக்கு செல்லும் ஆத்மாவானது சென்றுவிடும் என்றும் அதன்பிறகு முதல்ஜென்ம நிகழ்வுகள் சிறிது காலத்திலேயே மறந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த மறுஜென்மம் இருப்பதை நம்பியதால்தான் எகிப்தியர்கள் உடலை பதப்படுத்தி எகிப்து பிரமீடுகளுக்குள் வைத்துள்ளார்கள் என்றும் அனைத்து மக்களாலும் நம்பபடுகிறது.

மேலும் படிக்க; மறுஜென்மம் உண்மையா

ஆத்மா பற்றிய ஆராய்ச்சிகள்

death soul

ஆத்மா உண்மையில் இருக்கிறதா என்று இன்றுவரை எவராலும் சரியாக குறிப்பிட முடியவில்லை ,ஆனால் அதை பற்றிய ஆராய்ச்சிகள் நடந்தன இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மெக் டோகல் என்பவர் இறக்கும் தருவாயில் உள்ள 6  மனிதர்களை வைத்து அவர்கள் இறந்த பிறகு அவர்கள் உடம்பில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கிறதா என்று ஆய்வுசெய்கிறார். அதில் உள்ள இரண்டு உடல்களில் 28 கிராம் எடை குறைந்ததை கண்டறிகிறார் இதுதான் ஆத்மாவின் எடை என்றும் குறிப்பிட்டார் . ஆனால் இது பெரும்பாலானோரால் நிராகரிக்கபட்டது.

அறிவியல் அறிஞர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்றால் உயிர் ஆத்மா என்பது தனி ஒரு ஆற்றல் அல்ல நம் உடல் உறுப்புகள் ஒன்றாக இணைந்து வேலைசெய்தால் அதுதான் உயிர் என்று குறிப்பிடுவார்கள். நம் இயங்கவில்லை என்றாலும் நாம் இறந்துவிடுவோம் எனவே உயிர் என்று தனியாக எதுவுமில்லை என்று கூறுகிறார்கள்.
மேலும் படிக்க; பேய் இருக்கா இல்லையா

இறந்த பிறகும் செயல்படும் உடல் உறுப்புகள்

human body
நாம் இறந்தபிறகும் நம் உடல்பகுதிகளில் உள்ள ஒரு சில  உறுப்புகள் செயல்படும்
நம்முடைய காதுகள் இறந்த பிறகு ஒரு சில மணிநேரம் செயல்படக்கூடிய தன்மை கொண்டது இதன் காரணமாகதான் இறுதி ஊர்வலங்களில் தப்பு மற்றும் பறை ஒலிக்கபடுகிறது. நகங்கள் ஆனது நாம் இறந்த பிறகும் வளரக்கூடிய தன்மை கொண்டது .

ஏன் 16 நாட்கள் 

death facts
இறப்பு நிகழ்ந்த வீட்டிற்கு 16 நட்கள் கழித்துதான் செல்ல வேண்டும் என்று  பெரியோர்கள் கூறுவார்கள் இதற்கான காரணம் இறப்பு நிகழ்ந்த வீட்டில் தொற்று கிருமிகள் அதிகமாக காணப்படும் அது அழிவதற்கு 16 நாட்கள் ஆகும் இதனால்தான் இவ்வாறு கூறுகிறார்கள்.

உடலையே தின்னும் உடல்பாகம்

enymes
நம் மனிதஉடலில் வயிற்று பகுதியில் காணப்படும் ஒரு வேதிபொருள் மான் என்ஸைம்ஸ் இது நாம் உயிருடன் இருக்கும்பொழுது உண்ணகூடிய உணவுகளை செரிக்க செய்யும் நாம் இறந்த பிறகு நமது உடல் பகுதியையே இது உண்ண ஆரம்பிக்கும் இதன் காரணமாகதான் நமது உடல் எளிதில் சிதலம் அடைகிறது.

மருத்துவர்களின் எழுத்தால் ஏற்படும் மரணம்

doctors prescription

 நாம் மருத்துவமனைக்கு செல்லும்பொழுது மருத்துவர்கள் மருந்துகளை மருந்து சீட்டில் எழுதி குடுப்பார் அந்த சீட்டை நாம் படிக்க நினைத்தாலும் அது நமக்கு புரியாது எழுத்துகள் வித்தியாசமாக இருக்கும் இதேபோன்று எழுத்துகள் புரியாமல் தவறாக மருந்து வழங்கபட்டு வருடா வருடம் 7000 மக்கள் உயிரழக்கின்றனர்.

தற்கொலைகள் 

suicides

ஒவ்வொரு வருடமும் தற்கொலைகளால் மட்டுமே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரழக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மன அழுத்தம் இதனால் தான் 90% மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.