how to study tnpsc exam in tamil

tnpsc தேர்வுக்கு படிப்பது எப்படி how to study tnpsc exam in tamil

Spread the love

how to study tnpsc exam in tamil

 
how to study tnpsc exam in tamil
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்களுக்கு  வேலை கிடைப்பது என்பது பெரும்பாடாக உள்ளது அப்படி வேலையே கிடைத்தாலும் அது நிரந்தமானதாக இருக்கும் என்று கூறமுடியாது இதனால் பெரும்பாலான மாணவர்கள் அரசு நடத்தகூடிய பொதுதேர்வுகளில் அதிக கவணம் செலுத்துகின்றனர். அப்படி தமிழக அரசால் நடத்தகூடிய தேர்வுகள்தான் இந்த TNPSC தேர்வுகள் இதில் நிறைய பிரிவுகள் உள்ளன இந்த தேர்வுக்கு படிப்பது எப்படி என்று காண்போம்.
 

தேர்வுக்கான திட்டமிடல் 

exam planning
திட்டமிடல் இது தேர்வுக்கு மட்டுமின்றி நம் வாழ்க்கைகும் மிக முக்கியமான விடயம் தேர்வுக்கு தயாராகுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்போ அல்லது ஆறு மாதத்திற்கு முன்போ ஒவ்வொரு மாதமும் நாம் என்ன படிக்க வேண்டும் எதை முதலில் படிக்க வேண்டும் எதை இறுதியாக படிக்க வேண்டும் அதனை எங்கிருந்து படிக்க வேண்டும் என்பது முக்கியம் . அதுமட்டுமின்றி ஏற்கனவே தேர்வில் கேட்கபட்ட வினாதாள்களை தினமும் பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் அன்றாடம் பின்பற்றகூடிய ஒரு அட்டவணையை உருவாக்க வேண்டும். 
 
 

முக்கியமாக படிக்க வேண்டியவை 

exam
 

TNPSC தேர்வுக்கு நீங்கள் முதலில் படிக்க வேண்டியவை நீங்கள் எதை கடினமாக நினைக்கும் பாடத்திற்கு முதல் நாள் முதல் கடைசி நாள் வரை தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்  . அதுமட்டுமின்றி தினசரி நடக்கூடிய சமூகம் சார்ந்த நிகழ்வுகளையும் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் . பிறகு உங்களுடைய விருப்ப பாடங்கள் எளியமான பாடங்களுக்கும் தினசரி குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது உங்களுக்கு மேலும் வலு சேர்க்கும். ஒரு தலைப்பை படித்து முடிக்காமல் மற்றொரு தலைப்பிற்கு செல்லாதீர்.

தேர்வுக்கான புத்தகங்கள்

books
 

தேர்வில் மிக முக்கிய பங்கு வகிப்பது புத்தகங்கள் என்று கூறலாம் அந்த புத்தகங்களில் எதை  தேர்வு செய்வது படிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்  அதுமட்டுமின்றி ஒரே புத்தகத்தையே படிக்காமல் நீங்கள் படிக்கும் தலைப்பிற்கு மிக முக்கயதுவம் குடுங்கள் அந்த தலைப்பை பற்றிந முழு தகவலையும் அறிந்துகொள்ளுங்கள். பெரும்பாலும் வினா விடை போன்ற புத்தகங்களை தவிர்த்துவிட்டு கருத்துகள் அடங்கிய புத்தகங்களை படியுங்கள்.

 தேர்விற்கான அறிவுறைகள்

exam
 

 SMART WORK

எந்த போட்டி தேர்விலும் Smart Work என்பது ரொம்ப அவசியமான ஒன்று  நீங்கள் சாதாரணமாக படிகப்பதை  விட Shortcuts use செய்து படிப்பது smart work ஆகும் இதே போன்று தினமும் நம் பழக்க வழக்கங்களை மாற்றம் செய்து பல வெற்றிகளை பெற முடியும் இதற்கு பல வழிமுறைகள் உள்ளன இல்லையெனில் நீங்களே ஒரு புதிய வழிமுறையை உருவாக்கலாம்.

Meditation

meditation

தியானம் செய்வதன் மூலம் நமக்கு  மகிழ்ச்சி,மன அமைதி, நேர்மறையான எண்ணங்கள் போன்றவை ஏற்படும் இது நமக்கு அதிகமான பலன்களை தரக்கூடியது

Self Motivation

நாம் படிக்கும் பொழுதே தேர்வில் வெற்றி பெற்று விடுவேன் என்ற positive thoughts ல் ஆரம்பியுங்கள் தேவையில்லாத கவலைகள் மற்றும் மனபயத்தை  போக்கிவிடுங்கள். நம்மில் பலர் போட்டி தேர்வுக்கு தயாராகும் போது இருக்ககூடிய  ஆர்வமானது ஒரு சில நாட்களில் மறைந்து போய்விடும் இதனால் மனச்சோர்வு ஏற்பட்டு  படிப்பில் நாட்டம் குறையும் இதை தவிர்க்க Self Motivation மிகவும் அவசியம்.

Leave a Reply