இணைபிரபஞ்சம் உண்மையா parallel universe theory in tamil

இணை பிரபஞ்சத்தின் ரகசியம் (parallel universe theory in tamil)

parallel universe in tamil
                                நாம் அனைவரும் இந்த உலகில் ஒருமுறை தான் வாழமுடியும்  என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்   ஆனால் இந்த இணை பிரபஞ்பம் parallel universe என்பது இந்த ஒரு உலகத்தில் மட்டுமல்லாமல் இதுபோல் பல உலகம் இருப்பதாகவும் நம்மை போன்ற மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினமும்  இணையாக நம்மை போலவே வேறொரு இடத்தில்  வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறுப்படுகிறது.   இந்த இணை பிரபஞ்சம் என்ற அறிவியலின் கூற்று  உண்மை  மற்றும் பல புதிர்களை கொண்டுள்ளது.  இவ்வாறாக இந்த இணை பிரபஞ்ச பற்றிய  மர்மமான புதிரை இந்த பதிவில் காண்போம்.

இணைபிரபஞ்சம் பற்றிய  உண்மை

                    இந்த இணைபிரபஞ்சத்தில்  நம்மை போன்ற அங்கு இன்னொரு உலகம் உள்ளது என்றும் நம்மை போல பல உயிர்களும் அங்கு வாழ்கிறது என்றும் கூறுப்படுகிறதுகிறது. நாம் வாழும் இந்த பிரபஞ்சம் போல  ஒரே மாதிரியாக   காட்சியளிக்கும்  இன்னொரு பிரபஞ்சம் தான் parallel universe எனப்படும். ஆனால்  இந்த இணைபிரபஞ்சத்தை பார்க்கவோஅங்கு  போகவோ முடியாது. இதற்கு  quantum universe மற்றும்  parallel dimension  என  பல பெயர்கள் உண்டு.  நம் பிரபஞ்சம் போல  அண்டத்தில்  பல பிரபஞ்சம் இருக்கலாம்.   இதனை multiple universe என்றும் அழைக்கின்றனர்.
நம் பிரபஞ்சம் நம் பூமி ஏன் நாம் கூட ஒரே அணுக்களால் ஆனவர்கள்தான் இந்த மொத்த பேரண்டமும் பெருவெடிப்பு எனப்படும் ஒரு மிகச்சிறிய துகளில் இருந்தே விரிவடைந்தது ஆகும் எனவே ஒரே மூலத்திலிருந்து மொத்த பேரண்டமும் தோன்றியதால் நம்மை போன்றும் நம் உலகை போன்றும் பரந்து விரிந்து காணப்படும் அண்டவெளியில் இருப்பதற்கான சாத்தியகூறுகள் உள்ளதாகவும்  ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
                    அதாவது இந்த உலகில் இருக்கும் மனிதன் செடி கொடி என  அனைத்துமே நம் பூமி போல இருக்கும்  பல்வேறு உலகத்தில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. நம் பூமியில் உள்ள சூரியன்,நட்சத்திரம், விண்மீன், பால்வெளி அண்டம் உயிரினம் அனைத்துமே இந்த இணைபிரபஞ்சத்தில் இருக்குமாம்.
                  இந்த இணைபிரபஞ்சம் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என நமக்கு பல கேள்விகள் எழலாம் ? அதனை பற்றி காண்போம்

இணை பிரபஞ்சம் தோற்றம்

universe
                இந்த இனணை பிரபஞ்சம் பற்றி பல்வேறு ஆய்வுகளை ஆய்வாளர்கள்  மேற்கொண்டனர். இதனை ஆராய முதலில்  நம் பூமி  எவ்வாறு உருவானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நம் பூமி மற்றும் விண்வெளியில் உள்ள அனைத்தும்  பெறு வெடிப்பு  என்ற நிகழ்வின் மூலம் உருவானது. இந்த பிரபஞ்சம்  13.8 பில்லியன் ஆண்டுக்கு முன் தோன்றியது  இந்த பிரபஞ்சம் ஒரு புள்ளியிலிருந்து தோன்றி மிகப்பெரிய அளவிற்கு விரிவடைந்துள்ளது.
universe
                 இந்த விரிவடைந்த உலகம் போன்றே பல இணை பிரபஞ்சங்களும் உருவாயிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்கள்.  அதாவது ஒரு வெடிப்பில் ஒரு பூமி போல பல பூமி உருவாகியிருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. இந்த இணை பிரபஞ்சங்கள் நம் பூமியில் இருக்கும் இயற்பியல் விதிகள்  போன்றும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

இணை குமிழி பிரபஞ்ச கோட்பாடு

parallel universe
                       பெருவெடிப்புக்கு பிறகு இந்த பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருகிறது  ஒரு சில நேரங்களில் இந்த விரிவடைதல் நின்றாலும்  இந்த விரிவடைதல் வேறு எங்காவது அண்டத்தின் வேறு பகுதியில் தொடர்ந்து நடைபெறுமாம்.  இதன் காரணமாக நம்முடைய பிரபஞ்சம் போல் வேறு பல பிரபஞ்சம் இருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது இதனை தான் நாம் இணை பிரபஞ்சம் என்று கூறப்படுகிறது.
parallel universe in tamil
           இது குமிழி பிரபஞ்ச கோட்பாடு  (bubble universe theory)  என்று அழைக்கப்படுகிறது.  இந்த குமிழி இணை கோட்பாட்டில் நம் பூமியில் உள்ள இயற்பியல் விதி இருக்க வேண்டிய அவசியமில்லை.
                                 space and time ஒன்றாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இந்த நேரம் நீண்டு கொண்டே செல்லும்   பிறகு ஒரு கட்டதிற்கு மேல் அது முடிவு நிலைக்கு வந்திடும் என்று அறிவியலாளர்களால் சொல்லப்படுகிறது. மீண்டும் இவை ஆரம்பதிலிருந்து தொடங்கி  மீண்டும் இதுபோல் நடந்து கொண்டே இருக்கும் இது முடிவில்லாமல் சென்று கொண்டே  இருக்கும். இதனை infinity time என்று சொல்லப்படுகிறது.  இவ்வாறு நிகழ்ந்து கொண்டே இருக்கும்போது இணை பிரபஞ்சம் என்ற ஒன்று உருவாகிறது.
dimenion
           நாம் தற்போது 3 வது பரிமாணத்தில் உள்ளோம். ஆனால் அறிவியலாளர்கள் 10 பரிமாணம் இருப்பதாக கூறுகிறார்கள். இவையெல்லாம் மற்ற  பரிமாணம் இணை பிரபஞ்சத்தில்  இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
                நாம் இந்த உலகத்தில் ஒரு செயலை செய்கிறோம் என்றால் மற்றோரு பிரபஞ்சத்தில்  அந்த செயலை செய்ய பல வழிகள் இருக்கும்.   இவ்வாறு இருக்கும்  பல வழிகள் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நடக்கும்.
brain power
              இந்த இணை பிரபஞ்சம் காரணமாக கூட மண்டேலா எபக்ட் நடக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள், நம் கனவுகள் கூட இணை பிரஞ்ச வெளிபாடு என்றும் கூறுகிறார்கள்.
          1954 ல் ஹியுக் எவ்ரட் என்ற அறிவியலாளர் தான் முதலில் இந்த இணை பிரபஞ்சம் பற்றி கூறுகிறார். இவர் அணு இயற்பியலில் சிறந்தவர்.இவர் நம்மை போன்ற உலகம் இதே போல் மற்றொன்றும் இருப்பதாக கூறுகிறார்.
                    இந்த இணை பிரபஞ்சம் மூலம்  கால வித்தியாசம் இருப்பதாகவும் கூறப்படுகிறது . இதன் மூலம் நாம் கால பயணம் கூட செய்யலாம்  என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இது பெரு வெடிப்பு கொள்கையை வெளிபடுத்துகிறது
parallel universe
                  நாம் இன்னும் அண்டத்தையும் பிரபஞ்சத்தையும் முழுமையாக புரிந்துகொள்ளாததால்  இன்னும் நம்மால் எதனையும் தெளிவாக  விளக்க முடியவில்லை ஆனால் இணை பிரபஞ்சம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக  விஞ்ஞானிகள் தெளிவாக  கூறுகிறார்கள். இந்த இணை பிரபஞ்சத்தில் அனைத்தும் பின்னோக்கி REVERSE ல் நடப்பது போல் இருக்கும் ஆனால் நமக்கு அவை பின்னோக்கி  ஆக இருந்தால் அவர்களுக்கு நம் பிரபஞ்சம் பின்னோக்கி தெரியும்.
                        இந்த இணை பிரஞ்ச கொள்கை நிரூபிக்கபடவில்லை இவை அனைத்தும் கோட்பாடாகவே சொல்லப்படுகிறது. இவை நியுட்ரினோவை பற்றியது இவை புரிந்து கொள்வது  என்பது அவ்வளவு எளிதல்ல சற்று  கடினம் என்றே கூறலாம்.
                                                                           நன்றி!