உலகின் டாப் 10 விலையுயர்ந்த வீடுகள் top 10 expensive house in the world 2021 in tamil

     உலகின் விலையுயர்ந்த வீடுகள்-expensive house

expensive houses in tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் உலகிலேயே மிகவும் விலைமதிப்பு பெற்ற ஒரு பத்து வீடுகளை பற்றி காண்போம்.இந்த டாப் 10 தரவரிசை Architctural digest , Arch 20 ஆகிய நிறுவனங்கள் குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில் வரிசைபடுத்தப்பட்டுள்ளது .

10. 18-19 Kensington Gardens – $128 Million

kenigston garden

கெனிங்ஸ்டன் கார்டன் இது இங்கிலாந்தில் லண்டன் பகுதியில் அமைந்துள்ளது இந்த வீடானது 19-ஆம் நூற்றாண்டில் கட்டபட்டது இந்த வீடு தற்பொது இந்திய தொழிலதிபரான லஷ்மி மிட்டலுக்கு சொந்தமாக இருக்கிறது இந்த வீட்டின் இன்றைய மதிப்பு 9000 கோடி.

9. Palazzo di Amore – $195 Million
 
palazzo di amore expensive house

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள இந்த பலாஸொ டி அமொர் உலகின் 9-வது மிக விலையுயர்ந்த வீடாக உள்ளது  இதன் விலை 14 ஆயிரம் கோடி ரூபாய் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

8. Ellison Estate – $200 Million

ellison estate expensive house

இந்த எலைசன் எஸ்டேடை ஆரக்கிளின் இணைநிறுவனர் மற்றும் உலக பணக்கார்ர்களில் ஒருவருமான லாரி எலிசன் வைத்துள்ளார் இந்த வீடானது ஒரு புத்த துறவியால் வடிவமைக்கபட்டது என்பதும் குறிப்பிடதக்கது இதன் விலை 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

7. Four Fairfield Pond – $248 Million

expensive house

ரென்னோ குழுமத்தின் தலைவரான இரா ரென்னெர்தான் இந்த வீட்டின் சொந்தகாரர் இந்த வீட்டின் கார்பார்கிங்கில் மட்டும் கிட்டதட்ட 100 க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி வைக்கலாம் அந்த அளவுக்கு பெரியது இதன் விலை கிட்டதட்ட 18 ஆயிரம் கோடி.

6. The Odeon Tower Penthouse – $330 Million

the odeon tower penthouse

இந்த வீடுதான் மொனோக்கோ நாட்டில் உள்ள மிகவும் உயரமான வீடு ஆகும் இந்த வீட்டின் மேல்புரத்தில் 360 டிகிரி நீச்சலுகுளமும் உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.  இதன் விலை 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

5. Les Palais Bulles – $390 Million

expensive house
இதுவரை நீங்கள் காணாத ஒரு வித்தியாசமான வீடு என இந்த லெஸ் பலஸ் புல்லஸ் வீட்டை கூறலாம் இந்த தரவரிசையில் அதிக நீச்சல் குளங்களை கொண்ட வீடும் இதுதான் இதன் விலை மட்டும் 390 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

4. Villa Les Cèdres – $450 Million

villa les cedres

இந்த வீடானது பெல்ஜிய மன்னரால் 1904-ஆம் ஆண்டு கட்டபட்டது இந்த வீட்டில் ஒரு மரத்தால் ஆன நூலகம் மற்றும் பழங்கால ஓவியங்கள் நீச்சல் குளங்கள் போன்றவை உள்ளன இது 40 மில்லியன் டாலர்கள் மதிப்பை பெற்று உலகின் நான்காவது விலையுயர்ந்த வீடாக உள்ளது.

3. Villa Leopolda – $750 Million

villa leopolda

வில்லா லியோபோல்டாதான் தற்பொதைய உலகின் 3-வது விலையுயர்ந்த வீடு

இந்த வீடு பிரான்சு நாட்டில் அமைந்துள்ளது இதன் விலை கிட்டதட்ட 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

2. Antilla – $1 Billion

antilla

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் அன்டிலா வீடானது உலகின் இரண்டாவது விலையுயர்ந்த வீடாக உள்ளது அதுமட்டுமல்ல இந்த வீடுதான் இந்தியாவின் மிக உயரமான கட்டிடமாகவும் உள்ளது இந்த வீடு ரிக்டர் அளவுகோளில் 8 அளவு நிலநடுக்கம் வந்தாலும் தாங்கும் தன்மை கொண்டது. நம் நாடு இந்தியாவில் மும்பையில் இருக்ககூடிய  இந்த வீட்டிஇல் மட்டும் கிட்டதட்ட 600 க்கும் மேற்பட்ட வேலையாட்கள் வேலைசெய்கின்றனர். இந்த வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ருபாயில்  70ஆயிரம் கோடி ஆகும்.

1. Buckingham Palace – $2.9 Billion 

expensive house

பக்கிங்கம் அரண்மனைதான் உலகின் மிகவும் விலையுயர்ந்த வீடாக தற்போதுவரை உள்ளது இது பிரிட்டிஷ் ராயல் குடும்பத்திற்கு சொத்தமானது இது இங்கிலாந்து தாட்டில் லண்டனில் அமைந்துள்ளது இந்த வீட்டில் மட்டும் 700 க்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் வீட்டிற்குள்ளேயே 19 அலுவலகங்களையும் கொண்டுள்ளது இந்த வீட்டின் விலை உங்களை தலைசுற்ற வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை இந்த வீடு அமெரிக்க டாலரில் 2.9 பில்லியன் அதுவே இந்திய ரூபாயில் 2.1 இலட்சம் கோடி ஆகும்.

 
                                                                           நன்றி!