சவுதி அரேபியா பற்றிய அறிந்திறாத பத்து தகவல்கள்10 facts about saudi arabia in tamil

Spread the love

                     FACTS ABOUT SAUDI ARABIA

facts about saudi arabia in tamil
சவுதி அரேபியா மத்திய ஆசியாவில் இருக்கும்  வளைகுடா நாடுகளில் மிகப் பெரிய நிலப்பரப்பை கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய நாடு ஆகும். இந்த சவுதி அரேபியா கடுமையான சட்ட திட்டங்களையும் கொடூரமான தண்டனைகளையும் கொண்டுள்ளதால் உலக அரங்கில் இந்த நாட்டைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள் சற்று அதிகமாகவே காணப்படுகிறது அந்த நாட்டை பற்றிய சில சுவாரஸ்யமான  தகவல்களைதான் இந்த  பதிவில் நாம் காண இருக்கிறோம்.

1.சவுதி அரேபியாவின் நிலபரப்பு

saudi arabia map
 

மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடான சவுதி அரேபியா ஈராக்   கட்டார் ஓமன் போன்ற நாடுகளிடம் தனது எல்லைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறது, 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இருக்கூடிய சவுதி அரேபியா  நான்கு பகுதிகளாக பிரிந்து  காணப்பட்டது , 1902 இல் இமுன்சோ என்பவரால்   பல போராட்டங்களுக்கு பிறகு அனைத்து பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு 1932ம் வருடம் தற்போதைய சவுதி அரேபியா என்ற நாடு உருவானது .சவுதி அரேபியாவின் தலைநகரமாக ரியாத் என்ற நகரை உருவாக்கி 1932இல் சவுதி அரேபியா தனிநாடாக உருவானது.

 

2.மெக்கா மெதினா

மெக்கா
 இஸ்லாமியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது புனித பயணம் போக வேண்டும் என ஆசைப்படும் புனித தளமாகிய  மெக்காவும் மெதினாவும் இங்குதான் அமைந்திருக்கின்றன, ஆனால் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் இதன் எல்லைக்குள் நுழைய அனுமதி இல்லை, வருடம் தோறும் அதிக அளவில் மக்கள் கூடும் உலகின் மிகப்பெரிய மசூதியாக மெக்கா உள்ளது தோராயமாக ஒரு வருடத்திற்கு ஒரு கோடியே 30 லட்சம் வெளிநாட்டு மக்கள் மெக்காவிற்கு வந்து வழிபடடுச் செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன ,
 
சவுதி அரேபியாவில் அமைந்திருக்கும் அல்ப் ராஜ் அல் பைட் கோபுரம்  உலகின் உயரமான கட்டிடங்களுள் ஒன்றாகவும்  உள்ளது  இதன் சிறப்பு என்னவென்றால் 25 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கூட இந்த கட்டிடத்தை நாம் பார்க்க முடியும்.

3.பெண்களுக்கான பல்கலைக்கழகம்

saudi arabia university
 

இந்த உலகில் பெண்களுக்காக கட்டப்பட்ட மிகப்பெரிய பல்கலைகழகம் சவுதி அரேபியாவில்தான் அமைந்துள்ளது . 1970 -உருவாக்கபட்ட பிரின்ஸஸ் நோரா பிந்த் அப்துல் ரகுமான் பல்கலைகழகம் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பல்கலைகழகம். இந்த பல்கலைகழகம் மாணவர்களுக்கென்று தனி மெட்ரோ இரயில் சேவையையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாமல் சவுதியில் மாணவர்களுக்கு பள்ளி படிப்பு முதல் பட்டபடிப்பு வரை முழுவதும் இலவசம்.

4.திரையரங்குகள் இல்லாத நாடு

இந்த உலகில் திரையரங்கு இல்லாத நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று இங்குள்ள மக்கள் வீட்டியலேயே அனைத்தையும் காண வேண்டும் . திரையரங்கு கலாச்சாரம் அவர்களின் சட்டத்திற்கு புறம்பானது. இதானல் 1960-களிலேயே இந்த தொலைக்காட்சிகள் வந்துவிட்டன.

5.செல்பி எடுத்தால் ஜெயில்

selfie
 

சவுதியில் அங்குள்ள மக்கள் மற்றும் இடங்களை  நீங்கள் புகைப்படம் அல்லது செல்பி எடுத்தால் உங்களுக்கு ஒரு மாத கால சிறை மற்றும் 1- இலட்சம் அபராதம் விதிக்கப்படும். இது அங்குள்ள சட்டதிட்டங்களுக்கு முறனானது புகைப்படம் எடுப்பதன் மூலம் அவர்களின் தனியுரிமை பறிக்கபடுகிறது என அவர்கள் நம்புகின்றனர்.

6.கச்சா எண்ணெய்கள்

oil
 

சவுதி அரேபியா நாடு உருவாகப்பட்ட ஒரு 6- ஆண்டுகளுக்கு பிறகுதான் அங்கு கச்சா எண்ணெய் இருப்பதை கண்டறிந்தனர் இதுதான் அந்த நாட்டின் பெருளதாரத்திற்கு மிகப்பெரிய ஊன்றுகோல் எனலாம். கச்சா எண்ணெய் விற்பனையில் முன்னனியில் இருப்பது இந்த சவுதி அரேபியாதான். இங்கு ஒரு லிட்டர் தண்ணீரின் விலையை விட பெட்ரோலின் விலை மிகவும் குறைவு அந்த அளவுக்கு அதிகமான கச்சா எண்ணெய்கள் அங்கு காணப்படுகின்றன.

7சவுதி அரேபியாவின் பாலைவனம்

 

சவுதி அரேபியாதான் இந்த உலகில் மணலால் ஆன முகப்பெரிய பாலைவனத்தை கொண்டுள்ள நாடு கிட்டதட்ட இந்த நாட்டின் பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் பாலைவனம்தான், அதுமட்டுமல்லாமல் ஆறுகளே இல்லாத நாடும் இந்த சவுதி அரேபியாதான் .

8.உலகின் மிகப்பெரிய விமான நிலையம்

airport

இந்த உலகின் மிகப்பெரிய விமான நிலையம் சவுதி அரேபியாவில்தான் உள்ளது. தம்மம் விமான நிலையம் என்று அழைக்கப்படும் கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் 1999 ஆம் ஆண்டு  திறக்கப்பட்டது. இந்த விமான நிலையம்  சவுதி கல்ப் ஏர்லைன்ஸ் மற்றும் ஃப்ளைனாஸின் மையமாக செயல்படுகிறது.

9.குடிநிர்

water
 

இந்த சவுதி அரேபியாவில் நீர் நிலைகள் இல்லாத காரணத்தால் மக்களின் குடிநீர் தேவைக்காக கடல் நீரை குடிநீராக மாற்றுகின்றனர். அதாவது உப்பு நீரை தூய நீராக மாற்றுகின்றனர், உலகிலேயே உப்பு நீரை குடிநீராக மாற்றும் மிகப்பெரிய ஆலையும் இங்குதான் உள்ளது.

10.ஒட்டக வணிகம்

camel

சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தில் ஒட்டக வணிகமும் முக்கிய பங்காற்றுகிறது எனலாம். இங்குள்ள ஒட்டகங்கள்தான் உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன ஒவ்வொரு நாளும் சவுதி அரேபியாவில் மட்டும் 100 ஒட்டகங்கள் விற்கப்படுமாம்.

 
                                                                 நன்றி!

தொடர்புடையவை: பாகிஸ்தான் பற்றியசு வாரஸ்யமான உண்மைகள்

Leave a Reply