நம் மொழி பற்றி நாமே அறியாத விடயங்கள்
வணக்கம் நண்பர்களே! இந்த உலகில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் அவையனைத்தும் தகவல் தொடர்புக்காக மட்டுமே பேசப்பட்டு வருகிறது ஆனால் நம் தாய் மொழி தமிழானது மொழி மட்டுமல்லாமல் அது நம் உணர்வாகதான் நாம் அனைவரும் கருதுகிறோம் தமிழ் என்றாலே பழமையும் பண்பாடும் கலாச்சாரமும் சேர்ந்த ஒன்றாகவே நாம் காண்கிறோம். இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற நம் தமிழ் மொழி பற்றி நாமே அறியாத(facts about tamil language) ஒரு சில விடயங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.
பழமையான மொழி தமிழ்மொழி
source: india tv |
இந்த உலகின் பழமையான மொழி நாம் மொழியா என்று கேட்டால் அதற்கான பதில் இன்றுவரை ஒரு தெளிவான ஆதாரங்கள் கிடைக்கபடவில்லை என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் நம் மொழி போன்றே நிறைய மொழிகள் இந்த உலகில் பேசப்பட்டு வந்துள்ளன இதன் காரணமாக நம்மால் தெளிவாக நம் மொழிதான் பழமையானது என கூறமுடியாது, ஆனால் கிட்டதட்ட 2500 ஆண்டுகள் பழையானது என தற்போதைய ஆய்வுகளின்படி தெரியவந்துள்ளது.என்னதான் பழமையானது என மறுத்தாலும் அன்று முதல் இன்றுவரை இந்த உலகில் பேசப்பட்டும் வரும் ஒரே மொழி நம் தமிழ்மொழிதான். ஆம் தமிழ்மொழிதான் இந்த உலகில் பேசப்பட்டுவரும் மிகவும் பழமையான மொழி.
தமிழ்தாய் கோவில்
நான் ஏற்கனவே கூறியதுபோல் நாம் தமிழ்மொழியை மொழியாக மட்டும் பார்க்காமல் அதனை கடவுளாகவும் வழிபட்டுள்ளனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் 1975-ஆம் ஆண்டு தமிழ்தாய்க்கு கோவிலை எழுப்பியுள்ளனர். உலகிலேயே ஒரு மொழிக்கு கோவில் கட்டப்பட்டது நம் தமிழ்மொழிக்கு மட்டுமே.
வெளிநாடுகளில் தமிழ்
இந்த உலகில் மட்டும் கிட்டதட்ட 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தமிழ்மொழியை பேசுகின்றன தமிழ்மொழி நம் இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர் அங்கீகரிகப்பட்ட மொழியாகவும். தென்னாப்பிரிக்கா , மோரிசியசு, மலேசியா மற்றும் அரபு நாடுகளிலும் பேச்சு மொழியாகவும் உள்ளது இதுமட்டுமல்லாமல் இவ்வுலகில் அனைத்து இடங்களில் நீங்கள் தமிழர்களை காணலாம். இப்படி அனைத்து இடங்களிலும் பரவி காணப்படுவது நம் தமிழ்மொழி மட்டுமே.
முதல்மொழி தமிழ்
இந்த உலகில் மனிதனால் முதன்முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் என ஆய்வாளர் அலெக்ஸ் கோல்லியர் குறிப்பிடுகிறார் இவர் நடத்திய ஆராய்ச்சியில் தமிழ்தான் உலகில் பேசப்பட்ட மொழி என குறிப்பிடுகிறார்.
வெளிநாட்டு பணத்தில் தமிழ்
நாம் பயன்படுத்தும் ரூபாய் தோட்டுகளில் கூட தமிழானது ஏதோ ஒரு ஓரத்தில் அச்சிட்டிருப்பார்கள் ஆனால் தமிழின் பெருமையறிந்த மொரியசியசு அந்த நாட்டின் ரூபாய் நோட்டில் எழுத்துகளை தமிழில் அச்சிட்டுள்ளது. வெறும் 40ஆயிரம் தமிழர்கள் வாழும் மொரிசியசில் தமிழில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும்போது ஏன் 6 கோடி பேர் இருக்கூடிய இந்தியாவில் தமிழில் அச்சிடக்கூடாது.
கூகுல் ஒரு தமிழ் வார்த்தையா
கூகுல் என்ற வார்த்தை ஆங்கிலத்தில் 1 பக்கத்தில் என்னற்ற பூச்சியங்களை போடுவது என கூறுவார்கள் ஆனால் இதனை தமிழில் மொழி பெயர்க்கும்போது கூ- கில் என பிரிக்கலாம் இதில் கூ என்ற வார்த்தை கூவுதல் என பொருள்தரும் அதுவே கில் என்ற வார்த்தை கில்லுதல் அதாவது தேடுதல் என பொருள்தரும் இரண்டையும் இணைக்கும்பொழுது கூவி தேடுதல் என பொருள்தருகிறது . இந்த பெயரை அவர்கள் தெரிந்து வைத்தார்களா இல்லை தெரியாமல் வைத்தார்களா என்பது தெரியாது ஆனால் இதற்கும் தமிழிற்கும் இணைப்பு உள்ளது என்பது மட்டும் தெரிய வருகிறது.
தமிழில் அச்சடிக்கபட்ட முதல் புத்தகம்
தொல்காப்பியமும் அறிவியலும்
நம் தமிழில் இருக்கூடிய மிகவும் பழமையான நூல் என்றால் அது தொல்காப்பியம்தான் இந்த தொல்காப்பியம் பல அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த கருத்துகளை உலகிற்கு எடுத்துறைக்கிறது எடுத்துகாட்டாக காலபயணம் அதாவது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்டபாடு பற்றிய தகவல் கூட இந்த தொலுகாப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.