கிளவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன? What is Cloud Computing in tamil?

WHAT IS CLOUD COMPUTING IN TAMIL
cloud

வணக்கம்! இன்றைய பதிவில் ஐ டி துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கிளவுட் கம்ப்யூட்டிங்(Cloud Computing) பற்றிய சில அடிப்படையான தகவல்களை காண்போம்.

Cloud Computing என்றால் என்ன?

CLOUD COMPUTING EXPLANATION IN TAMIL
SOURCE:PIXABAY

முதலில் cloud computing என்ன என்பதை அறிந்துகொள்வோம். இதனை எளிய முறையில் குறிப்பிட வேண்டுமென்றால் நாம் முதன் முதலில் கணினி பயன்படுத்தும்போது நமது டேட்டாக்களை ஒரு HARDISK-இல் அல்லது Pendrive-ல் சேகரித்து வைத்துகொள்வோம். ஆனால் தற்போது நம்முடைய டேட்டாக்களை நாம் கூகிள் டிரைவில் சேமித்து வைக்கிறோம் போட்டோக்களை மெமரிகார்டுகளுக்கு பதிலாக கூகிள் போட்டோசில் சேகரித்து வைக்கிறோம். இப்படி நாம் இண்டர்நெட்டை பயன்படுத்தி டேட்டாக்களை சேகரித்து வைத்துகொள்ள பயன்படும் ஒரு தொழில் நுட்பம்தான் CLOUD COMPUTING எனலாம்.

இது நம்முடைய டேட்டாக்களை சேகரித்து வைத்துகொள்ள மட்டும் பயன்படவில்லை நாம் முன்பெல்லாம் ஒரு application-ஐ பயன்படுத்த வேண்டுமென்றால் அதனை இண்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து பய்னபடுத்துவோம் ஆனால் தற்போது web application வந்துவிட்டன அதாவது நீங்கள் எந்தவித file-யும் டவுன்லோடு செய்யாமலே அந்த ஒரு அப்லிகேக்‌ஷனை நேரடியாக உங்களால் உபயோகிக்க முடியும் இதற்கு எடுத்துகாட்டாக நீங்களி ஆன்லைனிலேயே ஒரு document-ஐ edit மற்றும் create செய்ய முடியும். இதற்காகவும் இந்த ஒரு cloud technology அதிகளவில் பயன்படுகிறது.

CLOUD COMPUTING

இந்த ஒரு கிளவுட் தொழில்நுட்பம் ஐடி துறையில் அதிகளவில் பயன்படுத்தபடுகிறது. இதற்கான காரணம் நான் முன்பே கூறியதுபோல் இது டேட்டா மற்றும் அப்லிகேஷனை சேமித்து வைக்க மற்றும் அவற்றை பராமரிக்க பயன்படுகிறது. அதாவது இந்த cloud என்பது குறிப்பாக சொல்லபோனால் ஒரு SERVER எனலாம் இதற்குள் நாம் இண்டர்நெட்டை பயன்படுத்தி அவற்றை நாம் பயன்படுத்த முடியும். இதனால் ஐடி கம்பனிகள் தங்களது டேட்டாக்களை பராமரிக்க மற்றும் மேனேஜ் செய்ய இவற்றை பய்னபடுத்துகின்றன ஏனென்றால் ஒரு கத்பெனிக்கு என்று ஒரு SERVER-ஐ உருவாக்குவது அதிக செலவுகளை ஏற்படுத்தும் அதனை இந்த CLOUD TECHNOLOGY பூர்தி செய்வதால் இது தற்போது மிக பிரபலமாக உள்ளது,

Types Of Cloud Computing

CLOUD TYPES

இந்த ஒரு cloud computing ஆனது நான்கு வகைகளை கொண்டது

  • public cloud
  • private cloud
  • hybrid cloud
  • community cloud

public cloud

இந்த ஒரு PUBLIC CLOUD-ல் அனைவரும் அவர்களுடைய டேட்டாக்களை பதிவு செய்யலாம் பயன்படுத்தலாம்.

எடுத்துகாட்டாக:google drive

PRIVATE CLOUD

இந்த PRIVATE CLOUD-ஆனது ஒரு தனிபட்ட நிறுவனத்திற்காக உருவாக்கபட்டது இதனை அந்த ஒரு நிறுவனம் மட்டும்தான் பயன்படுத்த முடியும் இது மிகவும் பாதுகாப்பானது. பயானர்களின் தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் இதை பயன்படுத்த இண்டர்நெட் தேவையில்லை.

எடுத்துகாட்டு: அரசின் இணையதளங்கள்

HYBRID CLOUD

இந்த PUBLIC மற்றும் PRIVATE- இரண்டும் சேர்ந்ததுதான் இந்த HYBRID CLOUD இதனை சாதாரண பயனாளர்களும் பயன்படுத்துவார்கள் ஒரு தனிபட்ட நிறுவனமும் இதனை பயன்படுத்தும்.

எடுத்துகாட்டு: வங்கிகளின் இணையதளங்கள்

COMMUNITY CLOUD

இந்த COMMUNITY CLOUD-ல் இரண்டுக்கும் மேற்பட்ட CLOUD தொழில் துட்பங்களை பயன்படுத்த முடியும் . அதாவது சாதாரண மக்களும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களும் சேர்ந்து நடத்தக்கூடிய அல்லது இயக்கூடிய அப்லுகேஷன்கள்.

எடுத்துகாட்டு: ஆன்லைனில் விளையாடப்படும் கேம்கள்

CLOUD SERVICES

இந்த CLOUD சேவைகளில் மூன்றுதான் அதிகளவில் தற்போது பயன்படுத்த படுகிறது

  • IAAS-INFRASTRUCTURE AS ASERVICE
  • PAAS-PLATFORM AS A SERVICE
  • SAAS-SOFTWARE AS A SERVICE

இந்த மூன்றுதான் தற்போது அதிகளவில் ஐடி துறைகளில் பயன்படுத்த படுகின்றன

CLOUD SERVICE PROVIDERS

மேலே குறிப்பிட்ட சேவைகளை பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன

இந்த பதிவில் CLOUD COMPUTING பற்றிய சில அடிப்படையான தகவல்களை உங்களுக்கு வழங்கியுள்ளேன் இது உங்களுக்கு கண்டிப்பாக உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

நன்றி!