நமது மூளையானது சுற்றுச்சூழலை விளக்கவும், நம்மை சுற்றியுள்ள அனைவரையும் மற்றும் அனைத்தையும் அடையாளம் காணவும், புதிய விடயங்களை கற்றுக்கொள்ளவும் உதவுகிறது, இதில் குறிப்பிடதகுந்த விடயம் என்னவென்றால் நமது மூளை எவ்வளவு வேலை செய்கிறது என்பது நமக்கே தெரியாது.
எவ்வாறாயினும், நவீன நரம்பியல் மற்றும் நரம்பியல் உளவியல் நமது அன்றாட பணிகளில் நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் (human psychology) மனித உளவியல் பலருக்கு புதிராகவும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருக்கிறது! எனவே, மிகவும் சுவாரஸ்யமான 10 உளவியல் உண்மைகளை இங்கே காண்போம்.
அலைபாயும் மனம்
ஒரு சராசரி மனிதனின் மனம் ஒரு நாளில் 30% நேரம் அலைபாய்ந்துகொண்டே இருக்குமாம். அதாவது ஒரு தெளிவற்ற நிலையில் இருப்பது அல்லது கவனசிதறலுக்கு உள்ளாவது என மனித உளவியல் பற்றியல் ஆய்வில் கண்டறிந்தனர்.
கருவிழி சொல்லும் காதல்
ஒரு நபர் தான் விரும்பும் ஒருவரைப் பார்க்கும்போது அவரின் கருவிழியானது 45% விரிந்து காணப்படுமாம். இப்போது நீங்கள் உங்கள் கேர்ள் பிரண்டிடம் பேசும்பொது அவரின் கருவிழி விரிந்து காணப்பட்டால் அவர் உங்கள் காதலுக்கு பச்சை கொடி காட்ட நிறைய வாய்ப்புள்ளது.
தூங்கும் முன் யாரை நினைத்தீர்கள்
நீங்கள் தூங்குவதற்கு முன் யாரோ ஒருவரை நினைத்து சிந்தித்தால் அன்றையா நாளில் நீங்கள் மனதில் நினைத்த நபர்தான் உங்களின் சந்தோஷத்திற்கும் கவலைக்கும் காரணமாக இருந்திருப்பார்.
chat-ல் பேசுபவர்கள் நேரில் பேச மாட்டார்கள்
நீங்கள் உங்களின் தோழி அல்லது தோழனிடம் பேசும்போது மிக சுவாரஸ்யாமாக வாட்ஸ் ஆப் சேட்டில் பேசுவீர்கள் ஆனால் நேரில் காணும்போது ஒழுங்காக மூன்று வார்த்தைகளை கூட உங்களால் பேச முடியாது. கிட்ட தட்ட 90% மக்கள் இப்படிதான் உள்ளனர் மனித உளவியல் பற்றிய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
முட்டாள் என நினைக்கும் புத்திசாலி
ஒரு புத்திசாலியான நபர் தன்னை என்றும் ஒரு முட்டாள் என நினைத்து கொண்டு கற்றுகொண்டே இருப்பார்களாம், அதேபோல் அரைகுறையாக தெரிந்துவைத்து கொண்டு எதையும் கற்றுகொள்ளாமல் தன்னைதானே புத்திசாலி என கூறும் மக்களும் உள்ளார்களாம்.
மன உளைச்சலில் காமெடியன்கள்
உங்களை யார் அதிகமாக சிரிக்க வைக்கிரார்களோ அவர்கள்தான் அதிக மனுளைச்சளில் இருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதுபோல் காமெடியன்கள் மற்றவர்களை சிரிக்க வைப்பார்களே தவிர அவர்களை சிரிக்கமாட்டர்கள் என்றும் மனித உளவியல் எனப்படும் human psychology கூறுகிறது.
கண்ணீரின் இரகசியம்
நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது உங்களுக்கு அழிகை வந்தால் அதாவது ஆனந்த கண்ணீர் வந்தால் அது வலது கண்ணில் வரும். அதிவே நீங்கள் சோகத்தில் அழுகும்போது கண்ணீர் இடது கண்ணில் வரும்.
மன அழுத்தம் போக்கும் பாடல்
உலகில் 80% மக்கள் அவர்களுக்கு பிடித்தமான பாடல் கேட்கும்போது மன அழத்ததிலிருந்து விடுபடுவதாக கூறுகின்றனர்.
தொடர்புடையவை: மன அழித்தம் போக்கும் வழிமுறைகள்
போதைபொருளை விட பயங்கரமான பொருள்
சாக்லேட் மற்றும் ஷாப்பிங் செய்வது போதைபொருளைவிட அடிமையாக்கூடியது என உளவியல் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.எனவே சாக்லேட் சற்று சிந்தித்து செயலாற்றுங்கள்.
நேர்மறையாக சிந்தியுங்கள்
எப்பொழுதும் நேர்மறையாக சிந்திப்பவர்கள் மற்றவர்களை விட மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்களாம் எனவே அனைத்தையும் நேர்மறையாக சிந்தியுங்கள் மக்களே.
SOURCE:WHO
நன்றி!