facts about condoms

ஆணுறை பற்றி இந்த விசயங்கள் தெரியுமா 10 interesting fact about condoms

condoms
source:wikipedia

வணக்கம்! நம்மில் பல பேருக்கு ஆணுறை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது ஆனால் இந்த ஆணுறை பற்றி நீங்கள் இதுவரை கேள்விபடாத சில சுவாரஸ்யமான(facts about condoms) மற்றும் ஆச்சரியமான விசயங்களைதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஆணுறை-உருவான கதை

இந்த ஆணுறைகள் என்பது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 11,000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கபட்டிருக்கலாம் என நம்பபடுகிறது, இதற்கான காரணம் பழங்கால மக்கள் வரைந்த குகை ஓவியங்களில் இந்த காண்டம் போன்ற ஒன்றை பார்ததாக குறிப்பிடுகிறார்கள்.

காண்டம்-உருவான நோக்கம் என்ன

இந்த ஆணுறைகள் என்பது இன்று குழந்தை கட்டுபாடு மற்றும் பாலியல் சம்பந்தமான நோய்களை தடுக்க பயன்படுகிறது ஆனால் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் இதனை அவர்களின் ஆணுறுப்பை பாதுகாக்க ஒரு உறையாக பயன்படுத்தினர் என கூறப்படுகிறது ஏனெனில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் உடையின்றி வாழ்ந்தார்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்

காண்டம்களின் விற்பனை

ஒவ்வொரு வருடமும் இந்த உலகில் 150 கோடி காண்டம்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 30 இலட்சம் ஆணுறைகள் விற்கப்பட்டு வருகின்றன.

எகிப்தியர்களின் ஆணுறை

பண்டைய கால எகிப்திய மக்கள் இந்த ஆணுறைகளை பயன்படுத்தி வந்துள்ளனர் இதில் குறிப்பிடதகுந்த விசயம் என்னவென்றால் அந்த ஆணுறைகளை உருவாக்க அவர்கள் ஆமைகளின் ஓடு மற்றும் முதலைகளின் தோலை பயன்படுத்தினர் என்பது உங்களை கண்டிப்பாக ஆச்சரியபடுத்தும்.

டயர்களால் உருவாக்கபட்ட காண்டம்

condom facts

இன்று மக்கள் பயன்படுத்தக்கூடிய காண்டமானது முதன்முதலில் 1880-களில் கண்டுபிடிக்கபட்டது . குட்டயர் என்ற நிறுவனம் டயர்களை உருவாக்கும்போது யாரும் எதிர்பாராம விதமாக உருவாக்கபட்ட ஒரு இரப்பர்தான் இந்த காண்டம். அன்று உருவாக்கபட்ட ஆணுறைகள் இன்றுவரை பயன்படுத்தபட்டு வருகின்றன.

உலகின் பழமையான காண்டம்

உலகின் பழமையான காண்டமானது ஸ்வீடனில் கண்டெடுக்கபட்டது இது 640 களில் இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதிக விற்பனை

Fusion Condoms நடத்திய ஆய்வில், இங்கிலாந்தில் உள்ள மக்களில் 56 சதவீத மக்கள் ஆணுறைகளை வாங்குவதற்கு ஒப்புகொண்டுள்ளனர்.

ஒலிம்பிக்கில் காண்டம்

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்போதும் அதில் பங்குபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு காண்டம் வழங்கப்படும்.

ஆணுறையின் சக்தி

ஒரு ஆணுறை என்பது உருவாக்கபடும்போது அதன் மீது மின்சாரம் பாய்ச்சபடும் ஏனெனில் அதில் ஓட்டைகள் இருந்தால் அதனை கண்டுபிடிக்க அதுமட்டுமல்லாமல் காண்டமானது கிட்டதட்ட 4 லிட்டர் தண்ணீர் வரை உட்கொள்ளும் அந்த அளவுக்கு வலிமையானது.

பயன்படுத்த தெரியாதவர்கள்

இந்த உலகில் இருக்கூடிய மக்களில் கிட்டதட்ட 7.5 கோடி மக்களுக்கு காண்டத்தை எப்படி பயன்படுத்துவது என்பதே தெரியாது.

RELATED: facts about sex