facts about eyes

நம் கண்கள் பற்றிய இந்த விசயம் தெரியுமா 10 facts about eyes in tamil

facts about eyes
source:pixabay

உங்கள் கண் பகுதியில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே வெளியுலகுக்குத் தெரியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது உங்கள் கண்கள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிக்கலான இணைக்கப்பட்ட வேலை பாகங்களைக் கொண்டது என்றால் உங்களால் நம்ப முடியுமா ஆம் அதுதான் உண்மை. இப்படி நம் கண்கள் பற்றி நமக்கே தெரியாத(facts about eyes) ஒரு சில ஆச்சரியமான விசயங்களைதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

facts about eyes

1.உங்களின் கண்கள் ஆனது ஒவ்வொரு நொடியும் 50 வெவ்வேறு விதமான பொருள்களின் மீது கவனம் செலுத்துகின்றன.

2. மூளைக்கு அடுத்தபடியாக நம் உடலில் இருக்கும் சிக்கலான உறுப்பு நமது கண்கள் மட்டும்தான்.

3.உங்கள் கண்கள் ஆனது சுமார் 10 மில்லியன் வெவ்வேறு விதமான வண்ணங்களை வேறுபடுத்தும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்தது.

4.உங்களால் கண்களைத் திறந்து கொண்டு தும்முவது என்பது இயலாத காரியம் ஆகும் .

5.உங்கள் கண் உடலில் மிக வேகமாக சுருங்கும் தசை , ஒரு வினாடியில் 100 முறை சுருங்குகிறது.

6.பார்வை நரம்பு ஆனது ஒரு மில்லியனுக்கும் அதிகமான நரம்பு செல்களைக் கொண்டுள்ளது.

7.சராசரி நபர் ஒரு நிமிடத்திற்கு 12 முறை கண் சிமிட்டுகிறார் தற்போது கூட நீங்கள் கண் சிமிட்டி இருப்பீர்கள்.

8.ஹெட்டோரோக்ரோமியா என்ற நோயால் பாதிக்கபட்ட நபர்களுக்கு இரண்டு கண்களும் வெவ்வேறு நிறத்தை கொண்டு வித்தியாசமாக தென்படும்.

9.புலிகளின் இரவு பார்வை ஆனது மனிதர்களை விட ஆறு மடங்குசக்தி வாய்ந்தது அதனால்தான் புலிகள் பெரும்பாலும் இரவுல் வேட்டையாடும்.

10.மனிதக் கண் டிஜிட்டல் கேமராவாக இருந்தால், அது 576 மெகாபிக்சல்களைக் கொண்டிருக்கும் ஆனால் உண்மையில் நம் கண்கள் இன்றுவரை கண்டுபிடுக்கபட்ட கேமராக்களை விட சக்தி வாய்ந்தது.

Related: நம் மூளை பற்றி நாமே அறியாத விசயங்கள்