வணக்கம்! இன்றறைய பதிவில் நம் உடலுக்கு ஊட்டம் தரும் மற்றும் நன்மை தரக்கூடிய இஞ்சி சாற்றின் நன்மைகளை பற்றி தெளிவாக காண்போம்.
இஞ்சி சாறு குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்துவிடுகிறது
வாரம் ஒரு முறை இஞ்சிசாறு குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் குணமாகி வயிற்றுப் பசியை தூண்டுகிறது.
இஞ்சி சாறில் உள்ள சில பொருட்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது புற்றுநோய் செல்களையும் அழிக்கிறது.
குமட்டல் வாந்தி நுரையீரல் சளியால் அவதிப்படுபவர்கள் இஞ்சி சாறு குடிப்பதன் மூலம் நிவாரணம் பெற முடியும் ஏனெனில் இஞ்சி சளி எளிதில் போக்கும் திறன் பெற்றது
தமனிகள் ரத்தநாளங்களில் ரத்தக் கட்டிகள் உருவாகாமல் தடுப்பதால் இதயம் பலம் பெறுவதோடு ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
கெட்ட கொழுப்புகளை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றும் செயலையும் இஞ்சிசாறு செய்வதால் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் பயன்படுகிறது.
அடிக்கடி நோய்வாய் படுபவர்கள் இஞ்சி சாறு குடிப்பதால் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும்
இஞ்சி சாறுடன் தேன் சேர்த்து குடிப்பதால் கூடுதல் பலன் பெற முடியும் எனவே இதனை மியற்சித்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பயன்தரும்.
பித்தப்பை அல்சர் அறுவை சிகிச்சை செய்ய இருப்போர் இஞ்சி சாறை தவிர்ப்பது நல்லது ஏனெனில் இது வலிமையான வேதியியல் வினைபுரியும் தன்மை கொண்டது.
தொடர்புடையவை: சீரகத்தால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்