சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை நன்றாக இயங்க பல யோக பயிற்சிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் நவாசனம். இதனை ஒரு நாற்காலியில் அமர்ந்தே செய்யலாம்.
படத்தில் உள்ளது போல சஅமர்ந்து இரு கால்களையும் நீட்டவும். பிறகு இரு கைகளினால் கால் முட்டு பக்கத்தில் பிடித்துக்கொள்ளவும். இப்படி பத்து வினாடிகள் முதல் இருபது வினாடிகள் இருக்கவும். பிறகு காலை மெதுவாக தரைக்கு கொண்டு வரவும்.
இதே போல் மூன்று தடவைகள் பயிற்சி செய்யவும். காலை, மாலை சாப்பிடும் முன் இரண்டு முறைகள் பயிலவும்.
இந்த பயிற்சி அடிவயிற்றுக்கான சிறந்த யோகா பயிற்சியாகும். வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.
கணையங்களின் செயல்பாடு தூண்டப்படுவதால் நீரிழிவு நோயைத் தடுக்கும்.
குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க இந்த பயிற்சி பயன்படும்.
இந்த யோகா பயிற்சியை தினமும் செய்து வந்தால் வயிறு வீக்கம், வாய்வு தொந்தரவு, செரிமான பிரச்சனைகள், இரைப்பை, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
மலச்சிக்கல் மற்றும் அல்சர் நோயை குணப்படுத்தும்.
கோபத்தை குறைக்கும் முஷ்டி முத்திரை. செய்வது எப்படி?
கோபத்தை படிப்படியாக குறைத்து பிறகு முழுமையாக கோபத்தை அழிக்கும் ஒரு முத்திரைதான் இந்த முஷ்டி முத்திரை. இதை எப்படி செய்வது இதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
தரையில் விரிப்பு விரித்து கிழக்குதிசை நோக்கி, பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களின் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக வெளியே விடவேண்டும்.
இப்போது படத்தில் உள்ளபடி உங்கள் கட்டைவிரலை தவிர மற்ற நான்கு விரல்களையும் இறுக்கமாக உள்ளங்கையில் படுமாறு வைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை மோதிர விரலின் மேல் வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ளவும். அனைத்து விரல்களையும் இறுக்கமாக வைத்து இம்முத்திரையைச் செய்யவும்.
இந்த முத்திரையை தினமும் பத்து நிமிடங்கள் செய்யலாம். காலை, மதியம், மாலை மூன்று வேளையும் செய்யலாம். இதனால் கோபம் குறைந்து மனது நிம்மதி அடையும். நம் உடல் பாதுகாக்கப்படும். மேலும் இந்த முத்திரை அஜீரணக் கோளாறுகளை நீக்குகின்றது. உடல் அசதியை நீக்கி சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தருகின்றது.