கொழுப்பு கட்டிகள் கரைய என்ன செய்ய வேண்டும் home remedies for lipoma in tamil

கொழுப்பு கட்டிகள் கரைய என்ன செய்ய வேண்டும் home remedies for lipoma in tamil

கொழுப்பு கட்டிகள் பற்றி பார்க்கலாம். கொழுப்பு கட்டிகள் என்றால் என்ன இவை எதனால் உண்டாகிறது கொழுப்பு கட்டிகள் கேன்சர் கட்டிகள் ஆக மாறுமா? யாருக்கெல்லாம் இந்த கட்டிகள் வரும் வந்தால் என்ன செய்வது? வராமல் தடுக்க என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

கொழுப்பு கட்டிகள் என்றால் என்ன

home remedies for lipoma in tamil

உடல்ல கொழுப்புகள் அதிகமாக தேங்கும் போது சிலருக்கு கட்டிகளாக மாறும் இதுதான் கொழுப்பு கட்டின்னு சொல்றோம் நம்ம தோலிற்குள் உள்ள சிறு பஞ்சு மாதிரி கொழுப்பால் ஆன கட்டிய கொழுப்பு கட்டின்னு சொல்றோம். இந்த கட்டிகளை சிலர் கழலை என்று சொல்வது உண்டு ஆங்கிலத்தில் இதை லிப்போமா என்று சொல்கிறார்கள்.

இந்த கட்டிகள் அடிப்போஸ் அப்படிங்கற ஒரு கொழுப்புகளால் வருகிறது கொழுப்பு கட்டிகள் உடம்புல இந்த இடத்துல தான் வரும்னு சொல்ல முடியாது தனியாகவும் வரலாம். இல்ல ஒரு கூட்டமாகவும் வரலாம் சராசரியாக கொழுப்பு கட்டி ஒரு சென்டிமீட்டரில் இருந்து 3 cm அப்படிங்கற அளவுல இருக்கும் ஆனால் சிலருக்கு 10 சென்டிமீட்டரில் இருந்து 20 சென்டிமீட்டர் அளவுக்கு கூட வளரக்கூடியது.

கொழுப்பு கட்டிகள் வர காரணம்

கொழுப்பு அதிகமாக சாப்பிடுவதால் தான் கொழுப்பு கட்டி வரலாம் கொழுப்பு கட்டி அப்படின்றது பலரோடு நினைவுக்கு தோன்றுகிறது நம்ம கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுறோம் அதனால தான் நமக்கு கொழுப்பு கட்டி வருது அப்படின்னு நினைக்கிறாங்க இப்படி கொழுப்பு கட்டி இருக்கிறதுனால இதயத்துல பாதிப்பு வந்துருமோ அப்படின்னு பயத்துலயும் இருக்குறாங்க இந்த மாதிரி எண்ணங்கள் தோன்றுவது தவறானது கொழுப்பு கட்டிக்கும் ரத்தத்தில் உள்ள சிவப்பனுக்கும் எந்த மாதிரியான சம்பந்தமும் கிடையாது.

கொழுப்பு கட்டிகள் ஒரே நாளில் தோன்றுவது கிடையாது சிறிது சிறிதாக பெரிதாகும் கொழுப்பு கட்டிகள் பரம்பரையில் இருந்தால் வருவது அதிகம். ஆனால் அதே மாதிரி பரம்பரையில் இல்லாமல் இருந்தாலும் திடீரென்று யாருக்காவது தோன்றுவதற்கும் வாய்ப்புகள் உண்டு பல ஆராய்சிகள் நடைபெற்று வந்தாலும் இந்த கட்டிகள் இந்த காரணத்தினாலதான் உண்டாகுது அப்படிங்கறது இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியாததுதான் ஆச்சரியமாக உள்ளது.

கொழுப்பு கட்டி கை கால் தொடை பகுதி மார்பு பகுதி முதுகு அப்படி எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் வரலாம் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் கொழுப்பு கட்டி உண்டாகலாம் பொதுவாக இந்த வகையான கொழுப்பு கட்டிகள் 40 இலிருந்து 60 வயசு உள்ளவங்களுக்கு காணப்படுது சில நேரங்களில் குழந்தைகளுக்கு கூட காணப்படும் கை, கால்களை வீக்கம் மாதிரி தோன்றி காணப்படும் பெண்களுக்கு பாத்தீங்கன்னா கால்களில் அதிகமா கொழுப்பு கட்டி காணப்படும் இந்த கட்டிகள் எல்லாம் உடல் பருமனா இருந்தா தான் அப்படி வரும் கிடையாது உடல் ஒல்லியாக இருக்கிறவங்களுக்கு கூட வரலாம் கொழுப்பு கட்டி என்பது வேறு கேன்சர் கட்டிகள் என்பது முற்றிலும் வேறுபட்டது.

கொழுப்பு கட்டிகள் கேன்சர் கட்டிகளா

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் cancer varamal irukka tips

கொழுப்பு கட்டி நிச்சயம் கேன்சர் கட்டிகளாக மாறவே மாறாது கொழுப்பு கட்டிகளும் கேன்சர் கட்டிகளும் ஒன்று கிடையாது. கொழுப்பு கட்டிகளால் உடலுக்கு எந்த தீங்கும் வராது ஆனால் உடம்பில் எந்த கட்டிகள் வந்தாலும் அது டாக்டரிடம் கன்சல்ட் பண்ணிக்கிறது நல்லது. எல்லா கொழுப்பு கட்டிகளும் எல்லாருக்கும் ஒரே மாதிரி வரும்னு சொல்ல முடியாது சிலருக்கு வலி இல்லாமல் இருக்கும் சிலருக்கு வலி ஏற்படும்.

சிலருக்கு அங்கங்க நகரக்கூடியதாக கூட இருக்கலாம் சிலருக்கு கொழுப்பு கட்டிகள் தொட்டுப்பார்த்தால் மட்டுமே தெரியும் சிலருக்கு தொட்டு பார்த்தால் தெரியாது ஆழமாக உள்ளே இருக்கும். அழுத்தி பார்த்தால் மட்டுமே தெரியும். கொழுப்பு கட்டிகள் இருக்கிறதுனால உடலில் எங்கேயாவது பாதிப்பு வருமா அப்படின்னு பார்த்தா கண்டிப்பா கிடையாது 95% கொழுப்பு கட்டிகளால் உடலுக்கு எந்த வித ஆபத்தும் கிடையாது ஆனால் நிறைய பேருக்கு ஒரு அழகு சார்ந்த விஷயமாக பார்க்கிறதுனால இதனாலே அதை ரிமூவ் பண்ணனும் நினைக்கிறாங்க சிலருக்கு தாங்க முடியாத வலி கொடுக்கக்கூடியதாய் இருக்கிறதுனால ரிமுவ் பண்ணனும் நினைக்கிறாங்க.

இதுக்காக ஸ்பெஷலா ட்ரீட்மென்ட் எதுவும் கிடையாது இது உடம்புக்கு தீங்கு எதுவும் கொடுக்குறதில்ல அப்படிங்கிறதுக்காக வரி பண்ணிக்க வேண்டாம். சிலருக்கு ரொம்ப வலி கொடுக்கக் கூடியதாக இருக்கும் அப்படிங்கறவங்க அறுவை சிகிச்சை எடுத்துக்கலாம் இல்லனா லேசர் மூலமாக ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம். அறுவை சிகிச்சை மூலமா இதை ரிமூவ் பண்ணாலும் மறுபடி இது வராமல் இருக்குமா அப்படிங்கிறது கேள்விக்குறிதான் மறுபடியும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

கொழுப்பு கட்டிகள் பற்றி ஆயுர்வேதம் கூறுவது

ஆயுர்வேதம் என்ன சொல்லுதுன்னா கொழுப்பு கட்டிகளுக்கு காரணம் கபதோஷ மாறுதல். கபம் அதிகமாக இருக்கிறதுனால கபத்தை உடல் வெளியே தள்ள முடியாததால் கழிவு பொருட்கள் எல்லாம் உடலில் சேர்ந்து இந்த கொழுப்பு கட்டிகளாக மாறுகிறது அப்படின்னு சொல்றாங்க.

கபதோஷம் மாறுதலை சரி ஆக்கினால் இந்த பிரச்சனையிலிருந்து வெளிவரலாம். வாரத்துக்கு ஒரு முறை உணவு எதுவும் சாப்பிடாமல் பார்லி கஞ்சி மட்டும் குடித்து வந்து இரவு நேரங்களில் திரிபலா கஷாயம் சாப்பிட்டு வரலாம் இப்படி செய்வதால் ஆரம்ப நிலையில் இருக்கக்கூடிய கொழுப்பு கட்டி குறைய ஓரளவு வழி வகுக்கும் அப்படின்னு சொல்லலாம்.

கொழுப்பு கட்டிகள் கரைய என்ன செய்ய வேண்டும்

கொஞ்சமா கருவேப்பிலை எடுத்துக்கிட்டு கூடவே கொம்பு மஞ்சள் எடுத்துக்கிட்டு நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் ஆலிவ் ஆயில் இதுல ஒரு ஆயில் சேர்த்துக்கிட்டு கொழுப்பு கட்டி இருக்கிற இடத்துல அப்ளை செஞ்சுகிட்டு வரலாம் இப்படி செய்து வரும் போது ஆரம்பக் கட்டத்தில் இருக்கக்கூடிய கொழுப்பு கட்டிய பெரிதாக தடுக்க முடியும் தொடர்ந்து கமலா ஆரஞ்சு பழம் தினமும் ஓன்று சாப்பிட்டு வரலாம்.

ஐந்து மிளகு தட்டி அதோட கால் ஸ்பூன் அளவுக்கு நாட்டு மருந்து கடைகளை கிடைக்கக்கூடிய கள ர்சிக்காய் பொடியையும் சேர்த்துக்கோங்க இது ஒரு ஸ்பூன் தேன்ல கலந்து சாப்பிட்டு வரலாம் காலைல எழுந்ததும் வெறும் வயித்துல ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்ததுக்கு அப்புறமா இந்த மருந்தை எடுத்துக்கலாம் தேனில் கலந்து சாப்பிடுவது பிடிக்கல அப்படின்னா ஒரு டம்ளர் மோரில் இதை கலந்து சாப்பிடலாம் முக்கியமான விஷயம் கர்ப்பமாக இருக்கிற பெண்கள் கர்ப்பத்திற்கு முயற்சி பண்றவங்க அதே மாதிரி மாதவிடாய் சமயத்துல இந்த மருந்து எடுத்துக்கறது அவாய்ட் பண்ணனும்.

கட்டிகள் இருக்கிற இடத்துல சுடுதண்ணீர் மசாஜ் செய்து கொடுக்கலாம் அதனால கட்டிகளில் இருக்கிற வலிகளை தவிர்க்க முடியும் ஒரு பாலிதீன் கவர்ல கொஞ்சமா சுடு தண்ணி ஊத்தி கவர நல்லா கட்டி கட்டிகள் இருக்கிற இடத்துல ஹாட் வாட்டர் மசாஜ் கொடுக்கலாம் அதனால கட்டிகள் வலி நல்லாவே குறையும். நல்லெண்ணெயை துணியில் நல்லா நெனச்சு கல் உப்பு சேர்த்து தோசைக்கல் மேல வைத்து சூடாக்கி எந்த இடத்துல கட்டிகள் இருக்கிறதோ அந்த இடத்துல ஒத்தடம் கொடுக்கலாம் இப்படி கொடுக்கும்போது நிச்சயமா வலிகள் குறையும் பொதுவாகவே உடல் பருமனாக இருப்பவர்கள் வெண்ணீர் குடிக்கலாம்.

கொழுப்பு கட்டிய கரைக்கவும் வெண்ணீர் உதவலாம் தினமுமே தண்ணீரை இளம் சூட்டுல குடிச்சிட்டு வரும்போது உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை படிப்படியாக கரைக்கும் அதேபோல சீரகம் சோம்பு கருஞ்சீரகம் இப்படி ஏதாவது ஒன்று கொதிக்க வைத்து குடிச்சிட்டு வரலாம் நாட்டு மருந்து கடைகளில் கொடிவேலி தைலம் கிடைக்கும் இந்த தைலத்தை இரவு நேரங்களில் படுக்கறதுக்கு முன்னாடி கட்டிகள் இருக்கிற இடத்துல தடவி மசாஜ் செய்து இரவு முழுவதுமே தைலம் சருமத்துல ஊருற மாதிரி பாத்துக்கோங்க இதனால இந்த கட்டிகள் படிப்படியாக குறையும் ஆமணக்கு இலைகள் கிடைத்ததுன்னா அதையும் கொழுப்பு கட்டி கரைக்கிறதுக்கு பயன்படுத்தலாம்.

இரண்டு டம்ளர் அளவுக்கு தண்ணி எடுத்து அதோட ஒரு ஆமணக்கு இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதுல போட்டு அடுத்ததாக இது கூட அரை ஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்த்து நல்லா கொதிக்க விடணும் இந்த தண்ணீரானது அரை டம்ளர் வர அளவிற்கு வற்ற விட வேண்டும். காலையில் தொடர்ந்து குடித்து வரும்போது கட்டிகளில் கண்டிப்பா மாற்றம் வரும்.வயிறு எப்பவும் சுத்தமாக இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும் மலச்சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் இஞ்சி லேகியம் நாட்டு மருந்து கடைகளில் அல்லது சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். மதிய உணவிற்கு அப்புறமாக 5 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வரலாம் இதனால் புதிய கட்டிகள் வராமல் தடுக்க முடியும் அதேபோல அஷ்ட சூரணம் சாப்பிட்டு வந்தால் செரிமானம் நன்றாக இருக்கும் வயிறு சுத்தமாக இருக்கும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்த்து வரலாம் இது கொழுப்பு கட்டிகளை மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது

தொடர்புடயவை: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இத பண்ணுங்க