திருமணம் குறித்து கனவு கண்டால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

கனவுகளுக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கனவுகள் உங்கள் தூக்கத்தில் உங்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். கனவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதை நம்மில் பலர் நினைத்திருப்போம். ஏனென்றால், மனதில் என்ன நினைக்கிறோமோ அதுதான் கனவாக வரும் என்பது தான் உண்மை என பலர் நம்புகின்றார்கள். ஆனால், கனவுக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில், திருமணம் குறித்த கனவு வந்தால் என்ன அர்த்தம் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இயல்பாகவே அனைவருக்கும் தூங்கும் போது கனவுகள் வருவது வழக்கம். அது நல்லதாகவோ அல்லது கேட்டதாகவோ இருக்கலாம். ஒருவர் காணும் கனவு, நமது நிஜ வாழ்க்கையை பற்றி நிறைய கூறுகிறது என ஸ்வப்ன சாஸ்த்திர கூறுகிறது. திருமணம் குறித்த கனவுகள் வந்தால், ஒரு புதிய தொடக்கத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது

ஒவ்வொரு கனவும் நம் வாழ்க்கையுடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. கனவில் நாம் காணும் அனைத்தும் நம் எதிர்காலத்தைப் பற்றிய நல்ல அல்லது கெட்ட குறிப்பைக் கொடுக்கும். மறுபுறம், சிலர் தங்கள் கனவில் மீண்டும் மீண்டும் திருமணம் செய்துகொள்வதைப் பார்க்கிறார்கள். உங்களுக்கு இதுபோன்ற கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என தெரிந்து கொள்வோம்…

​நீங்கள் திருமணம் செய்வது போல கனவு வந்தால்…

உங்களுக்கு திருமணம் நடப்பது போல கனவு கண்டால், அதாவது நீங்கள் காணும் கனவில், நீங்களே திருமண பெண் அல்லது மணமகனாக இருந்தால், உங்களுக்கு திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறது என்று பொருள். அதுமட்டும் அல்ல, உங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்பதையும் இது குறிக்கிறது. ஒரு வேலை, நீங்கள் டேட்டிங் செய்யும் நபருடன், திருமணம் நடப்பதை போல கனவு கண்டால், உங்கள் காதல் உறவு அடுத்த கட்டத்திற்கு செல்லப்போகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் புது வாய்ப்புகள் கிடைக்கப்போகிறது என்று அர்த்தம்.

ஒருவேளை, நீங்கள் மற்றவர்களின் திருமணத்தில் கலந்து கொள்வதை போல கனவு கண்டால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் தொழிலில் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் காதலனை திருமணம் செய்வது போல நீங்கள் கனவு கண்டால், நீங்கள் மகிழ்ச்சியாகவும் திருப்தியுடனும் இருப்பதை குறிக்கிறது. குழந்தை குறித்த நல்ல விஷயங்களை பெறுவீர்கள்.

திருமண அழைப்பிதழ் பற்றிய கனவு

நீங்கள் திருமண அழைப்பிதழைப் பெறுவது போல் கனவு கண்டால், உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் நீங்கள் நல்ல உறவைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது ஒரு நல்ல அறிகுறி, எல்லோரும் உங்களை விரும்புகிறார்கள் என்பதை குறிக்கும். கனவில், நீங்கள் ஒருவரை மட்டும் திருமணத்திற்கு அழைக்கும் போது, நீங்கள் உங்கள் அன்புகூறியவர் ஒருவரை மிஸ் செய்கிறீர்கள் என கூறப்படுகிறது.

திருமண ஆடைகளைப் பற்றிய கனவு

திருமண ஆடை பற்றிய கனவு ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. நீங்கள் அந்த ஆடையை அணிந்தால், உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்காது. உங்களை சுற்றி ஏதாவது தவறு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ஏனென்றால், இது உங்களுக்கு ஏற்பட இருக்கும் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

உங்கள் தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை நீங்கள் இழக்க நேரிடும். எந்த மாற்றமும் உலகின் முடிவு அல்ல, ஆனால் அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருங்கள்.

​திருமண ஏற்பாடு கனவு

உங்கள் வீட்டில் திருமண ஏற்பாடு நடப்பது போல நீங்கள் கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றமும், அமைதியும் வரப்போகிறது என்று அர்த்தம். அது மட்டும் அல்ல, விரைவில் உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வரப்போகிறது என்றும் ஸ்வப்ன சாஸ்த்திரத்தில் கூறப்படுகிறது.

திருமண சம்பந்தம் பேசுவது

திருமணத்திற்கு சம்மந்தம் பேசுவதை போல கனவு கண்டால், அது நல்லதாக கருதப்படுகிறது. ஏனென்றால், நீங்கள் சந்திக்க இருக்கும் கேட்ட விஷயங்களை எதிர்கொள்ள உங்கள் நண்பன் உங்களுக்கு துணை நிற்பார் என்பதை கூறுகிறது. எனவே, நீங்கள் எதற்கும் பயப்படாமல் இருக்கலாம். ஒரு திருமணத்திற்கு திட்டமிடுவது போல கனவு வந்தாலும் இதே பலன்களை பெறலாம்.

திருமண விருந்து

ஒரு திருமண விருந்து இருப்பது போல கனவு கண்டால், அது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், நீங்க ஒரு தீவிர உறவில் இருந்தால், கூடிய சீக்கிரம் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என அர்த்தம். இதுவே, தனது காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்வது போல கனவு கண்டால் அது நல்லது அல்ல. உங்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயிக்கப்படலாம். ஆனால், அது உங்கள் காதலன்/காதலியுடன் அல்ல என்பதை மனதில் வைக்கவும்.

கோவிலில் திருமணம் செய்வது போல கனவு

ஒரு தேவாலயம், மசூதி அல்லது பிற வழிபாட்டுத் தலங்களில் திருமணம் செய்வது போல கனவு வந்தால், அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஒருவேளை நீங்கள் ஏற்கனவே திருமணம் மாணவராக இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையப்போகிறீர்கள் என அர்த்தம். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் லாபகரமான முடிவுகளைப் பெறுவீர்கள்.

இதுவே வழிப்பாட்டு தளங்களில் வேறு ஒருவர் திருமணம் செய்வதை கண்டால், உங்களுக்கு வெற்றி வரப்போகிறது என்று அர்த்தம். ஆனால், அதை அடைய நீங்கள் தொடந்து முயற்சி செய்ய வேண்டும்.

கடற்கரையில் திருமணம் நடப்பதை போன்ற கனவு

ஒரு கடற்கரையில் திருமணம் நடப்பதை போல நீங்கள் கனவு கண்டால், நீங்களும் உங்கள் கூட்டாளியும் நிதி ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. ஆனால் அதே நேரத்தில், நீங்கள் இருவரும் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இணக்கமாக இருக்கிறீர்கள் என்பதையும் உணர்த்துகிறது.

நண்பருக்கு திருமணம் நடப்பது போல கனவு

நண்பருக்கு திருமணம் ஆவதை போல கனவு கண்டால், அது ஒரு சிறந்த அறிகுறியாகும். மற்றவர்களின் நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றுவீர்கள். நீங்கள் திட்டமிட்டதை நிறைவேற்ற போகிறீர்கள் என கூறப்படுகிறது. உங்கள் நண்பர் திருமணம் செய்து கொள்வதைக் காணும் போது நீங்கள் கனவுகளில் காணும் உணர்வுகள் நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதன் பிரதிபலிப்பாகும்.

உங்க வீட்டில் திருமணம் நடப்பதை போல கனவு

உங்கள் சொந்த வீட்டில் திருமணம் நடப்பது போல கனவு கண்டால் அது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கப்போகிறது என்று அர்த்தம். ஆனால், அது உங்களுக்கு கிடைக்கும் வரை நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். நீங்கள் திருமணத்தில் மகிழ்ச்சியாக இருந்தால், அந்த வாய்ப்பு சிறந்ததாக இருக்கும், சோகமாக இருந்தால் ஏமாறபோகிறீர்கள் என்று அர்த்தம்.

யாரோ ஒருவருக்கு திருமணம் நடப்பதை போன்ற கனவு

உங்கள் கனவில், யாரென்றே தெரியாத ஒருவருக்கு திருமணம் நடந்தால், அது நல்ல சகுனமாகும். உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நபர் வரப்போகிறார் அல்லது நீங்கள் சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம். இல்லையெனில், உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு திருமணம் நடக்க போகிறது அல்லது குழந்தை குறித்த நல்ல விஷயங்கள் வரப்போகிறது என்பது அர்த்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *