பெண்களின் முகத்திற்கு கடலை மாவு தரும் நன்மைகள்! /Benefits of peanut flour for women’s face!

பழங்காலத்தில் இருந்தே பெண்கள் முக அழகை பேணி காப்பதற்கு கடலை மாவை பயன்படுத்தி வந்துள்ளனர். பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு. தினமும் முக அழகிற்கு, கடலை மாவு பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து பாதிப்பு உள்ள சரும பகுதிகளில் நன்கு பூசவும். பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். சருமம் வழுவழுப்புடன் திகழும்.

கடலை மாவில் சிறிது நீரை கலந்து, முகத்தில் பூசி கொள்ளுங்கள். நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு செய்து வருவதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.குளிக்கும் போது சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தி வந்தால், சருமம் வளுவளுப்பாக இருக்கும். கடலை மாவுடன், மஞ்சள் மற்றும் 1 ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் பூசி கொள்ளுங்கள். பிறகு 20 நிமிடம் கழித்து, முகத்தை கழுவினால் முகம் பளிச் பளிச் என இருக்கும்.

கடலை மாவுடன் பாதாம் மாவு மற்றும் எலுமிச்சை கலந்து குழைத்து முகம் முழுவதும் பூசி 30 நிமிடம் அப்படியே விடவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இதன் மூலம் முகம் பளபளப்பாக தோன்றும்.கடலை மாவுடன் சந்தனம், ரோஸ் வோட்டர், தேன் கலந்து முகப்பூச்சு செய்தால் முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறுவதுடன் சருமம் மென்மையும் வழுவழுப்பும் கூடும்.

குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும். 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.

சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக இருந்தால் அதற்கு கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போட்டால் முகம் அழகு பொலிவு பெரும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து அதில் தயிர் , எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.