இட்லி மாவு பணியாரம்/IDLI FLOUR RECIPE/idle panniyaram seivathu eppati?

Spread the love

இட்லி மாவு பணியாரம் மிகக் குறைந்த பொருட்களை கொண்டு, மிகக் குறைந்த நேரத்தில் உடனடியாக செய்து விடுவதால் உங்களது நேரமும் வீணாக போவதில்லை. வீட்டில் இருப்பவர்களின் வயிறும் நிரம்பி உங்களைத் தொல்லை செய்யாமல் விட்டு விடுவார்கள். வாருங்கள் அதை எப்படி செய்வது என்பதை பார்த்து விடுவோம்.

பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – தேவையான அளவிற்கு, வெங்காயம் – 1,

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 1,

கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.

பணியாரம் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் கடலைப் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிய பின் இவற்றை எடுத்து வைத்துள்ள இட்லி மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இட்லி மாவு கெட்டியாக இருக்க வேண்டும். உங்களிடம் கெட்டியாக இல்லை என்றால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள், கெட்டியாகிவிடும்.

இப்போது பணியாரக் கடாயை அடுப்பில் வைத்து எல்லா குழிகளிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, ஒவ்வொரு குழியிலும் இந்த மாவை ஊற்றி வாருங்கள். ஒரு இரண்டு நிமிடம் கழித்து திருப்பி போடுங்கள். நன்கு வெந்து உப்பி பணியாரம் போல் வந்ததும் பணியார கம்பியால் எடுத்து பரிமாற வேண்டியது தான். அட்டகாசமாக மாலை வேளையில் ஒரு டம்ளர் காபி அல்லது டீயுடன் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாரை அசத்தி விடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *