தமிழ் தத்துவம் /Tamil philosophy

அரிசி என்றாலும்

அரசியல் என்றாலும் களையெடுப்பது

அவசியம்…!

அதிக சந்தோஷத்தை கொடுத்ததும் முகநூல்

பல வலிகளை கொடுத்ததும் முகநூல்…!

வானிலையைவிட அதி

வேகமாய் மாறுகிறது

மனிதனின் மனநிலை…!

காப்பாற்ற வேண்டிய

நேரங்களில் ஓய்வெடுக்க

போய்விடுகிறார் கடவுள்…

புன்னகை அவ்வப்போது பொய் பூசிக்கொள்கிறது…

பொய்யும் அவ்வப்போது புன்னகை பூசிக்கொள்கிறது…

மனித மனங்களிலிருந்து மனிதநேயம்

மட்டும் தான் இன்னும் எட்டாத தொலைவில் இருக்கின்றது…

மனதை சுத்தப்படுத்த ஒருநொடி

போதும் அந்த ஒருநொடியை

செலவு செய்யத்தான் நமக்கு

மனமில்லை…

கஸ்டங்கள் கவலைகள் உனக்கு

மட்டும் தான் என்று புலம்பாதே

இங்கு சந்தோஷத்தை மட்டும்

அனுபவிக்கும் மனிதர் எவருமில்லை…

எங்கு உனக்கு

கேள்வி கேட்க

உரிமையில்லையோ

அங்கு நீ

அடிமைபடுத்தப்படுகிறாய்…

இதயத்தின் காயங்கள் எல்லாம்

இணையத்தில் கிறுக்கல்களாக…

அடுத்த நொடி

நமக்கு சொந்தமில்லாத போது

நீயா நானா என்ற

போட்டி பொறாமைகள் எதற்கு…

விதியை மதியால் வெல்லலாம்

என்று எவ்வளவு முயற்சி செய்தாலும்

பல நேரங்களில் விதிதான் வெல்லுது…

நம் பிரச்சனைக்கு

மற்றவர்களால் ஆறுதல் மட்டுமே தரமுடியும்…..

அதற்கான தீர்வு நம்மிடமே உள்ளது

பூவோடு இருப்பதால் முள்ளை

யாரும் விரும்புவதுமில்லை…..

முள்ளோடு உள்ளதென்று பூவை

வெறுப்பதுமில்லை…..

உழைப்பவர்களின்

ஊதியமெல்லாம்

வியர்வையோடு கரைய

ஊழல் செய்கின்றவன்

வாழ்க்கை எல்லாம் மாடி வீடுகளாக

வளர்ந்துக்கொண்டிருக்கு

ஊமையாகவே

இருந்து விடாதே

வாழ்க்கை உன்னை

ஊனமாக்கிவிடும்…

ஆசை படுவதெல்லாம்

நிறைவேறுவதில்லை

நிறைவேறாதவை எல்லாம்

நன்மைக்கே என்று….

மனதை தேற்றிக்கொள்வோம்

நாளை….

கனவைபோன்றது

இன்றைய

நிஜத்தை ரசித்திடு

எதிர்ப்பவரிடம்….

துணிந்து நில்

மதிப்பவரிடம்….

பணிந்துச்செல்

புகழ்ந்தால் மயங்காதே….

இகழ்ந்தால்

தளராதே….

மாயம் என்று

தெரிந்தும்

மயங்குது மனம்

வானவில்

வாழ…

வழியில்லையென்று

புலம்பாதே

நீ பயணித்துக்கொண்டிருப்பது

தான்…

உன் வாழ்க்கையென்று முன்னேறு

சிரித்து கொண்டே இரு….

வலிகள் கூட விலகி கொள்ளும்….

நல்லவனா இருந்தா

கடைசி வரை நல்லவனாவே இருக்கலாமே

தவிர நல்லா இருக்க முடியாது…

அறிவாக பேசுவதை விட

பரிவாக பேசுபவர்களிடமே

மனம் அதிகமாக பேச விரும்பும்…

வீட்டில் உள்ளவர்களை

அறிவினால் அளவிடுவதும்…!

வெளியாட்களை அன்பினால்

அளவிடுவதும் முட்டாள்தனம்…!

தெளிவான

பொய்க்கும்

விளக்கங்கள்

அவசியமற்றது…

சில நேரங்களில்

விவாதங்களும்…

தேவைப்படும்…

போது தேடப்படுவாய்

அது வரை அமைதியாய் இரு…

சிரிப்பு இல்லாத வாழ்க்கை

சிறகு இல்லாத பறவைக்கு சமம்

பறவைக்கு அழகு சிறகு

உங்களுக்கு அழகு சிரிப்பு

பூக்கள் உதிர்வதால் செடிகள் வாடுவதில்லை

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை

உன் எண்ணங்களில் உள்ளது

அழகிய வாழ்க்கை…

அளவான உணவு

உடலுக்கு நலம்

அளவோடு பழகு

உறவுக்கும் நலம்…

குறுகிய காலத்தில்

எடுக்கப்படும் முடிவுகள்,

பின்னர் யோசிக்கையில்,

மனத்திருப்தியற்றதாகவே

இருக்கும்…

(சிந்தித்தல் – தெளிவாகவே)

நீ தேர்ந்தெடுக்கும் பொருள் கூட

உன் குணத்தை காட்டும்

ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ

உன்னையே காட்டும்

எது நல்லது என்பதைத்

தொடர்ந்து சொல்லாதீர்கள்

தொடர்ந்து செல்லுங்கள்

தேடலும் தேவையும்

தீர்வதேயில்லை

மனிதவாழ்வில்

பெற்றோரின் அறிவுரை

நெல்லிக்காயைப்போல் கசந்தாலும்

அதை பொறுமையாக

சுவைத்தால்

வாழ்க்கை

இனிமையாய் இருக்கும்

லட்சியம்

இருக்குமிடத்தில்

அலட்சியம்

இருக்காது…

இரக்க மனமும்

இரும்பாகி போகிறது

சிலர் சுயநலவாதியாகும்

போது…

குறிக்கோள் இல்லாத

வாழ்க்கை வெறும்

குப்பை மேடு தான்…

பழகிய கத்தி என்றாலும்

பதம் பார்க்கிறது

பல நேரங்களில்

பக்குவமில்லாமல்

வருமானத்திற்கு மட்டும்

தான் இங்கு பஞ்சம்

வறுமைக்கு

மட்டும் இல்லை

எப்போதுமே பஞ்சம்…

உழைப்புக்கு

பலன் மெதுவாய்

கிடைத்தாலும்

அது என்றும்

உயர்வாய்தான் பேசப்படும்…

எதிர்காலம்

உள்ளங்கை

ரேகையில் இல்லை

அதுஉன் உள்ளத்தில்

உள்ளது…

பொறுமையும் தன்னடக்கமும்

வாழ்வின் பிற்பகுதியை

வெற்றியாக்கும்…

ஒரு கதவை

மூடினாலும்

இன்னோரு கதவை

திறப்பான்

என்ற நம்பிக்கை

தான் வாழ்க்கை…

தனிமையிலிருக்கும்

போது தீயாயிரு

இல்லயேல்

உன்னை எரித்துவிடுவார்கள்

ஏமாற்றம்

வலியைதந்தாலும்

நல்வழியையும் காட்டும்

வாழ்க்கைக்கு

நாமும் நல்லவர்களே

அடுத்தவர் தவறை

சுட்டிகாட்டும் போது மட்டும்

பார்ப்பவன்

என்ன நினைப்பான்

என்று பயத்துடன் வாழாதீர்கள்

படைத்தவன்

என்ன நினைப்பான்

என்று பயந்து வாழுங்கள்

ஒவ்வொரு நிமிடமும்

இந்த உலகத்தை

உன்னால் ஜெயிக்க முடியும்

முதல் நிமிடம் மட்டும்

நிதானமாக யோசித்தால்

தலைக்கவசம்

உயிரை காக்கும்

தலைக்கனம்

வாழ்வை அழிக்கும்

நீங்கள்

எதை செய்தாழும்

உங்கள் உள்ளத்திற்க்கும்

உலகத்திற்க்கும் உண்மையாக

நடந்து கொள்ளுங்கள்

ஆசை படுங்கள்

தவறில்லை

பேராசையே

வாழ்க்கைக்கு கேடு

வார்த்தைகளில்

உண்மை இல்லையேனில்

எண்ணங்களில்

தூய்மை இருக்காது

போதித்தால் புரியாது

பாதித்தால்

தான் புரியும்

அறிவுரை வழங்காதே

கேட்காத வரை

அதிகமாக தெரிய தெரிய

தெரியாதது அதிகம் இருக்கிறது

என தெரிய வருகிறது

இல்லமோ உள்ளமோ

கண்டதையும் நிரப்பினால்

இடைஞ்சல் தான்

வாழ்க்கை நம்மள

ரொம்ப கஷ்டப்படுத்துச்சுனா

நாம சரியான பாதையில்

போறோம்னு அர்த்தம்

பொறுமை ஒரு போதும்

தோற்பதில்லை

பொறாமை ஒரு போதும்

ஜெயிப்பதில்லை

கண்ளை

கலங்க வைக்க

வெங்காயம் தான்

வெட்டனும்னு இல்ல

உண்மையான அன்பு

வைத்தாலே போதும்

உயர்ந்த விஷயத்தை

எளிய முறையில் கூறுவதே

அறிவின் லட்சணம்

உனது குணம் சரியாக இருந்தால்

உனது புகழும் சரியாக இருக்கும்

எல்லோர்கிட்டையும்

அளவோடு பேசனும்

அளவில்லாமல் பேசினால்

அவதிப்பட வேண்டியது தான்

இருண்ட வானில்

மட்டுமின்றி

துவண்ட மனதிலும்

நீயே ஒளி வீசுகிறாய்

(அழகு நிலா)

சில நேரங்களில்

அறிவைவிட

தைரியத்தினாலயே

பெரிய காரியங்கள்

சாதிக்கப்படுகின்றன

நடந்தது எதுவோ

அது நல்லதாக

இருக்க வேண்டும்

இல்லையெனில்

நடக்க இருப்பதை

திருத்திடுவோம் எதுவாக

இருந்தாலும்

கவலைகள்

எங்கிருந்து வரும்

என்று தெரியாது ஆனால்

புன்னகை நம்மிடம்

தான் உள்ளது

நம்ம பின்னாடி

மத்தவங்க பேசுறதல்லாம்

கேட்டுட்டு இருந்தா

வாழ்க்கையில் முன்னாடி

போக முடியாது

தேதி போல

உங்கள் கவலைகளை

தினமும் கிழித்து

எரிந்து விடுங்கள்

ஒவ்வொரு நாளும்

உங்களுக்கானதாக

எண்ணி புதிதாய் வாழுங்கள்

வருவது வரட்டும்

போவது போகட்டும்

என்று இருந்தால் நிம்மதி

நிச்சயம்

மனதில் பட்டதை

சொல்லுங்கள்

ஆனால்

அடுத்தவர் மனம்

பட்டுபோகும்படி

சொல்லாதீர்கள்

எதன் மீதும் ஆசைப்படுவதில்

தவறில்லை அதற்கு நீ

அடிமை ஆகாத வரை

பழக பழக பாலும்

புளிக்கும் என்பது

அன்பிற்கும் உரியதே

எதை சரியாக செய்தாலும்

குறை சொல்ல நாலு பேர்

இருப்பார்கள்

முடியாதுனு விட்டுட்டா

வெற்றியில்லை

விட முடியவே முடியாதுனு

விடாமல் இருந்தால்

தோல்வியில்லை

வசதியென்பது

பணத்தில் மட்டும் இல்லை

மனசுக்கு நிம்மதியான வாழ்க்கையும்

வசதியான வாழ்க்கை தான்

உணரும் வரை உண்மை

கூட பொய் தான்

புரியும் வரை வாழ்க்கை

கூட ஒரு புதிர் தான்

வெற்றிக்கு துணையாக

இருப்பவன் நண்பன்

வெற்றிக்கு காரணமாக

இருப்பவன் எதிரி

ஆடுகிற ஆட்டமும்

ஒடுகிற ஓட்ட மும்

ஒரு நாள் ஓயும் போது

கூடுகிற கூட்டம்தான்

சொல்லும் நீ யாரென்பதை

மற்றவர்களின் தவறுகளை

திருத்தும் முன் ஒரு முறை

கண்ணாடியை

பார்த்துக்கொள்வது நல்லது

ரசிப்பவை

அனைத்தும் அழகல்ல

பார்க்கும் பார்வையிலும்

மனதில் எழும்

எண்ணங்களில்

மட்டுமே உள்ளது

வார்த்தைகளின்

எல்லைகளை பொருத்தே

உறவுகளின் ஆயுட்காலமும்

அதிகரிக்கும்

பொய்க்கு

வேகம் அதிகம்

ஆயுள் குறைவு

உண்மைக்கு

வேகம் குறைவு

எப்போதும் மறைவது இல்லை

உபதேசம் செய்யாதே

உதாரணமாய் இரு

ஊரைப் பழிக்காதே

உன்னை மாற்றிக்கொள்

படிப்பறிவை விட

மேலானது

வாழ்க்கையில் சிலரால்

படும் அறிவு

இன்றைய இலட்சியம்

நாளைய சாதனை

இன்றைய அலட்சியம்

நாளைய சோதனை

நாம சிரிக்கனும்னு

நினைக்குறவங்க முன்னாடி

சிரிப்பே வரலைனாலும்

சிரிக்கனும்

நாம அழனும்னு நினைக்குறவங்க

முன்னாடி அழுகையே வந்தாலும்

அழக்கூடாது

அளவான சாப்பாடு

உடலுக்கு நன்மை

அளவோடு பழக்கம்

உறவுக்கு நன்மை

மகிழ்வான நேரங்கள்

நல்ல நியாபகங்கள் ஆகிறது

கடினமான நேரங்கள்

நல்ல பாடங்கள் ஆகிறது

தண்ணீரை போல்

இருங்கள்

அதனால்

ஒதுங்கி செல்லவும் முடியும்

உடைத்தெறியவும் முடியும்

இருந்தால் உறவு

பிரிந்தால் நினைவு

அம்புட்டு தான்

இந்த வாழ்க்கை

தேடி அலைந்து

கொண்டே இரு

வேண்டியது கிடைக்கும் வரை

அது உன் அருகில் இருந்தால்

அதிர்ஷ்டம்

தூரத்தில் இருந்தால்

நம்பிக்கை

கிடைக்காமல் போனால்

அனுபவம்

தன் மதிப்பே

தன்னை உயர்த்தும்

தன்னம்பிக்கையே

வாழ்க்கையை உயர்த்தும்

பக்குவம் என்பது

காயப்படுத்தியவர்களை

காயப்படுத்த வாய்ப்பிருந்தும்

காயப்படுத்தாமல்

கடந்து செல்வதே

பதிலுக்கு பதில்

பேசுபவர்கள்

அறிவாளிகளும் அல்ல

மௌனமாய்

விலகி நிற்பவர்கள்

முட்டாளும் அல்ல

நல்லவராய் இருப்பது

நல்லது தான்

ஆனால்

நல்லது கெட்டது தெரியாத

நல்லவராய் இருப்பது

நல்லதல்ல

உங்கள் பார்வை

நல்லதாக இருந்தால்

உலகம் அழகாக தெரியும்

உங்கள் வார்த்தைகள்

நல்லதாக இருந்தால்

உலகத்திற்கு நீங்கள்

அழகாக தெரிவீர்கள்

உங்கள் எண்ணங்களை

தூய்மைப்படுத்துங்கள்

இந்த உலகம்

உங்கள் எண்ணங்களை

வரவேற்கும்

உங்களை உயர்வாக

போற்றும்

கற்கண்டும்

கல் தான்

ருசிக்காத வரைக்கும்

வாழ்க்கையும்

இனிமை தான்

வலியினை உணராத வரைக்கும்

விளகிய பிறகு

விளக்கங்கள் எதற்கு

வேண்டாம் என்ற பிறகு

விவாதங்கள் எதற்கு

சிறப்பான

விடைகளை விட

சிந்திக்க வைக்கும்

வினாக்களே

அறிவை வளர்க்கும்

கைப்பிடி இல்லாத

பிளேடை போல் தான்

வாழ்க்கையும்

கவனமாக கையாள்வோம்

போதனையிலும்

கிடைக்காத ஞானம்

வேதனையில்

கிடைக்கும்

சில நேரங்களில்

எதுமேலையும்

ஆசைப்படாம

இருக்கணும்னு நினைக்கிறதே

பெரிய ஆசை தான்

சில சமயம்

இலக்குகளை

அடைய வேண்டுமென்றால்

பொறுமையை கையாள

கற்றுக்கொள்ள வேண்டும்

வண்ணங்கள்

இருந்தால் தான்

அந்த வானவில்லுக்கே அழகு

நல்ல எண்ணங்கள்

இருந்தால் தான்

உங்க வாழ்க்கைக்கே அழகு

நட்பில் எதிர்பார்ப்பு

இருக்கலாம்

ஆனால் நட்பே

எதிர்பார்ப்பாய் இருக்கக்கூடாது

நம்மை நாம் சரியாக

புரிந்து கொண்டாலே

நம் வாழ்க்கை அழகாக

மாறி விடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *