TOP 10 RANDOM FACTS

வணக்கம்! இந்த பதிவில் தலையை சுற்றவைக்கும் சில அசத்தலான 10 உண்மைகளை(random facts) பற்றி காண்போம்.
யானையை தூக்கிலிட்ட கொடூர சம்பவம்

1916-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக பிரபலமான சர்கஸில் உள்ள ஒரு யானைதான் இந்த மேரி வழக்கம்போல் இந்த யானை சர்கஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது இதை கட்டுபடுத்தும் பாகன் வரவில்லை அதற்கு பதிலாக வேறொரு பாகன் இந்த யானையை வழிநடத்தினார். அவர் பேச்சை கேக்காத இந்த மேரி யானை முரண்டு பிடித்தது இதனால் பாகன் வைத்திருந்த குச்சியை வைத்து யானையை தாக்கினார், இதனால் மிக கோபமடைந்த இந்த யானை அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த மேடையில் அனைவரின் முன்னிலையில் அந்த பாகனை தரையில் போட்டு அவரின் தலையை மிதித்து கொன்றது. அப்போதே அந்த யானையின் மீது துப்பாக்கியால் 5 குண்டுகள் பாய்ச்சபட்டன இருப்பினும் கோபம் அடங்காத அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் அந்த யானையை பொது வெளியில் மக்களின் முன்னிலையில் ஒரு கிரேனை வர வழைத்து அதன் மீது ஒரு மனிதனை எப்படி தூக்கிலிடுவோமோ அதேபோல் அந்த குண்டுகளால் காயபட்ட யானை மிக கொடூரமாக மனிதாபிமானம் இல்லாமல் பல மக்களின் முன்னிலையில் தூக்கிலிட்டனர்.
சில சமயங்களில் உண்மையில் இந்த உலகில் இருக்கும் கொடூர மிருகம் யாரென தெரியவருகிறது . இதுவரை விலங்குகளுக்கு கொடுக்கபட்ட மிக கொடூரமான தன்டணையாக இது கருதப்படுகிறது
பேனாவில் எதற்கு இந்த துளைகள்?

நாம் அனைவரும் நம்முடைய பள்ளி பருவத்திலோ அல்லது கல்லூரியிலோ இந்த ஒரு விடயத்தை கவனித்திருப்போம் அது என்னவென்றால் பேனாவின் முனைபகுதியில் எதற்காக துளைகள் இருக்கிறது என்பதுதான். இதை சில பேர் எப்படி கூறுவார்கள் என்றால் பேனாவில் இருக்கும் மையானது காற்றோட்டமாக இருக்க இது பயன்படுகிறது என்று, ஆனால் உண்மையில் இந்த துளைகள் இருப்பதற்கான காரணம் நம்மில் பலருக்கு இந்த பழக்கம் இருக்க வாய்புள்ளது அதுஎன்னவென்றால் படிக்கும்போது பேனாவை வாயில் வைப்பது, இப்படி பேனாவை வாயில் வைக்கும் போது தப்பி தவறி அதில் இருக்கும் மூடியை நாம் முழுங்கிவிட்டால் அது தொண்டை பகுதியில் சிக்கி மூச்சு திணறலை ஏற்படுத்தாமல் இருக்க இந்த துளை பயன்படுத்தபடுகிறது.
பகல் கனவு

சமீபத்திய ஆய்வின்படி, ஒரு மனிதன் தன்னுடைய ஆய்வில் பகல் கனவு காண்பதற்காக மட்டுமே கிட்ட மூன்று வருடங்களை தண்டமாக கழிக்கின்றானாம்.
ஈர்ப்பு விசைக்கு சவால் விடும் பாறை

எகிப்து நாட்டில் இருக்கும் கைரோ விமான நிலையத்தில் இந்த கற்சிலை வைக்கப்பட்டுள்ளது இதை பார்ப்பதற்கு இரண்டு பாறைகளுக்கு நடுவே ஒரு கயிறு கட்டபட்டு அந்த இரண்டு பாறைகளும் இயற்பியல் விதிக்கு மாறாக செங்குத்தாக இருப்பதுபோல் தோன்றும் ஆனால் உண்மையில் அது கயிறு அல்ல அந்த இரண்டு பாறைகளுக்கும் நடுவே ஒரு கம்பி செல்கிறது அதனை கயிறு போல் தத்ரூபமாக அதனை வடிவமைத்த கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆண்களின் வீக்னஸ்

ஒரு ஆணின் தொடைப்பகுதியில் தாக்கும்போது அவருக்கு சாதாரண வலியை விட 900 மடங்கு அதக வலியை ஏற்படுத்தும்.இது 3200 எலும்புகளை ஒரே நேரததில் அப்படியே நொருக்ககினால் ஏற்படும் வலியையும் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் பிரசவ வலியை விட அதிகமாகும். எனவே சற்று சிந்தித்து செயலாற்றுங்கள்.
பொம்மையுடன் ஒரு காதல்

நாம் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம் காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவார்கள். அதுபோல் மேலே படத்தில் காணும் நபரின் பெயர்தான் யூரி டெலக்கோ இவர்தான் இந்த உலகில் முதல் முறையாக ஒரு பொம்மையை 8 வருடங்களாக காதலித்து அதனை திருமணமும் செய்துகொண்டார், இதனை கேட்கும்போது உண்மையில் காதலுக்கு கண்ணில்லை என்பது நிரூபனமாகிறது.
உலகின் மிகச்சிறிய பூனை

இந்த பூனைதான் உலகின் மிகச்சிறிய பூனையாக கருதப்படுகிறது இந்த பூனைகுட்டி பிறக்கும்போது இதன் உயரம் வெறும் 7சென்டிமீட்டர் மட்டுமே இது சாதாரண பூனையின் உயரத்தை விட மிகக் குறைவு.
தேளுக்கு இப்படி ஒரு பவரா

ஒரு தேள் ஆனது அதன் சுவாசத்தை நிறுத்திகொண்டு அதனால் ஆறு நாட்கள் வரை உயிர்வாழும் அதுமட்டுமல்லாமல் ஒரு தேளினால் ஒரு வருடம் வரை உணவில்லாமல் இருந்து உயிர்பிழைக்க முடியும்.
சீனாவின் சிறுநீர் முட்டை

நம் நாட்டில் முட்டையானது எப்படி அவிக்கபடும் என்றால் ஒரு தண்ணீரில் முட்டையை போட்டு வேக வைப்பார்கள் ,ஆனால் சீனாவிலோ மிகவும் மாறாக செய்வார்கள் இதை கேட்டால் உங்களுக்கு தலைசுற்றினால் கூட ஆச்சரியபட ஒன்றுமில்லை. அப்படி என்னதான் சீனர்கள் முட்டையில் செய்கிறார்கள் என்று கேட்டால் முட்டையை வேக வைக்க தண்ணீருக்கு பதிலாக சிறுவர்களின் சிறுநீரை பிடித்து அதில் முட்டையை வேகவைப்பார்களாம். இது அந்த முட்டைக்கு அதிக சுவையை கூட்டும் என ஒரு மூடதனமான பதிலையும் கொடுக்கிறார்கள்
மோதிர விரலின் சிறப்பு

திருமணமாகும்போது மோதிரமானது நம் மோதிர விரலில் மாட்டிக்கொள்வது வழக்கம், இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்றால் மோதிர விரலின் நரம்பானது நம் இதயத்துடன் நேரடியாக தொடர்பில் இருக்கும். அதாவது திருமணமான ஜோடிகள் மோதிரம் மாற்றிக்கொள்வது அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவரின் இதயத்தில் உள்ளனர் என்று அர்த்தம்.
கண்டிப்பாக இந்த ஒரு பதிவில் நீங்கள் படித்த மற்றும் கேள்விபட்ட விடயங்களு உங்களுக்கு மிகவும் வியப்பானதாகவும் ஆச்சரியமூட்டக்கூடாயதாகவும் இருக்கும் என நம்புகிறேன். இதைபற்றிய உங்களுடைய கருத்துகளை கீழை பதிவிடுங்கள்.
நன்றிகள்!